கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, October 1, 2010

இந்தியா & சீனா உறவு வலுப்படும் - சீன விழாவில் ஸ்டாலின் பேச்சு


தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சீனா, கொரியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் உள்ள லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவன தயாரிப்பை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜெயவர்த்தன வேலு, தலைவர் சவுந்தரராஜன், துணை இயக்குனர் ஜான் ஹுவாத்து, இயக்குனர் சங்கர், இந்திய தூதர் பாலசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கோவையைச் சேர்ந்த லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம் ஜவுளித்துறையில் இந்திய அளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஒட்டுமொத்த இந்திய ஜவுளித்துறையின் பங்களிப்பில் 60 சதவீதத்தை தன்னகத்தை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் தரத்திற்கு பெயர் பெற்றவை.


இந்திய அளவில் புகழ்பெற்ற இந்த நிறுவனம் தற்போது உலக அளவில் பெரிய பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். சீன நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள அதன் புதிய தொழிற்சாலையை திறந்துவைப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த நிறுவனமும் தனது தாய்நிறுவனத்தைப் போல தரத்தை தொடர்ந்து பாதுகாக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.


ஜவுளித்துறை எந்திரங்கள் ஏற்றுமதிக்கு சீனாவில் நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் சீனாவில் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம் கூட்டுநிறுவனம் தொடங்கியிருப்பதன் மூலம் நியாயமான விலையில் தரமான பொருட்களை உற்பத்தி செய்திட முடியும். தற்போது இந்தியாவில் இந்த நிறுவனம் எப்படி முன்னணியில் விளங்குகிறதோ, அதேபோல் சீனாவிலும் முன்னணி நிறுவனமாக மாறும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.


இந்தியாவும், சீனாவும் பழங்கால நாகரீக நாடுகள் ஆகும். பாகியான், யுவான்சுவாங் போன்ற சீன அறிஞர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இதேபோல், இந்தியாவைச் சேர்ந்த போதி தர்ம முனிவர் சீனா சென்றுள்ளார். தொழில்வளர்ச்சியின் முதல்கட்ட வாய்ப்புகளை இருநாடுகளும் தவறவிட்டாலும் தற்போது உலக அளவில் பொருளாதாரத்துறையில் இரு நாடுகளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இரண்டு நாடுகளுக்கும் மிகச்சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்தியா சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் ஆசிய பிராந்தியத்தில் ஜாம்பவான்களாக விளங்கும் இரு நாடுகளும் அமைதியையும், வளத்தையும் கொண்டு வரும்

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment