மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் உள்ள கொடிக்குளம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட பகுதி களுக்கு சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரிடம் பொது மக்கள் மனு அளித்தனர்.
மேலும் மத்தியஅமைச்சர் மு.க. அழகிரி கீழமாத்தூ ருக்கு சென்று அங் குள்ள பகுதி மக்களி டம் குறைகளை கேட் டறிந்தார். மேலும் ஏற் கெனவே அந்த பகுதி யில் பெறப்பட்ட மனுக் கள் மீதும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத் தார். அதன்படி அந்தப் பகுதியில் ஏற்கெனவே மனு அளித்த 446 பேருக்கு முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தையல் இயந்திரம், துணிதேய்ப்புப் பெட்டி போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச் சியில் மாவட்ட ஆட்சியர் காமராஜ், தி.மு.க. மாவட்ட செயலாளர் தளபதி, மூர்த்தி எம்.எல்.ஏ., தலைமை செயற் குழு உறுப்பினர் சுரேஷ் பாபு, வருவாய்த்துறை அதிகாரி தினேஷ் சீடுலிபர் பொன் ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற் றப்பட்டு வருகிறது. மது ரையை அழகுபடுத்தவும், பூங்காக்கள் அமைக்க வும் ரூ.14 கோடி மதிப் பீட்டில் திட்டப்பணி களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும் திடீர்நகர் மேல வாசலில் புதிதாக கட்டப்பட் டுள்ள அடுக்குமாடி குடி யிருப்புகள் பொது மக் களின் பயன்பாட்டிற் காக திறந்து வைக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பொதுமக்க ளிடம் குறைகள் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வருகிறேன். கோரிக்கைக்கு தீர்வு கிடைத்தவர்கள் என் னிடம் மகிழ்ச்சியை தெரி விக்கிறார்கள்.அது எனக்கு மனநிறைவை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் செய்தி யாளர்கள் வருகிற 18 ஆம்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. கண் டன ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க கொலை மிரட்டல் விடுக்கப்படு கிறது என ஜெயலலிதா குற்றம்சாற்றி உள்ளாரே? என்று கேட்டதற்கு சுய விளம்பரத்தை தேடிக் கொள்வதற்கு ஜெயல லிதா இதை கூறிக் கொள் கிறார். அல்லது மதுரைக் கூட்டத்தை ரத்து செய்வதற்கு கூட இதனை ஒரு காரணமாக கூறி வரலாம் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment