கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

நாம் ஒற்றுமையாக இருந்தால் யாராலும் நம்மை அசைக்க முடியாது - முதல்வர் கருணாநிதி பேச்சு



மாவட்ட வாரியாக தி.மு.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் 20.10.2010 அன்று தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி கலந்துரையா டினார்.
தமிழக சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு பொது தேர் தல் நடைபெறுகிறது. தேர் தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் பணிகளை முடுக்கி விடுவ தற்காக மாவட்ட வாரியாக தி.மு.க. நிர்வாகிகள் கூட் டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ளார். அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங் கில் கூட்டம் 20.10.2010 அன்று தொடங் கியது. முதல் நாளான 20.10.2010 அன்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வா கிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி தலைமை வகித் தார். நிதியமைச்சர் க.அன் பழகன், துணை முதல்வர் மு.க.ஸ் டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், பரிதி இளம்வழுதி மற்றும் சற்குண பாண்டியன், தென் மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளர் மு.க. அழகிரி, அமைப்பு செயலா ளர்கள் டி.கே.எஸ். இளங் கோவன் எம்.பி, பெ.வீ.கல் யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி தி.மு.க. நிர்வாகிகள், செயற்குழுஉறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்ன தாக, முதல்வர் கருணாநிதியை, நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ் டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் நிர்வா கிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.

ராமநாதபுரம்
மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கலந் துரையாடல் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசிய தாவது:
திமுக ஆட்சியின் சாத னைகளை பற்றி அனைவரும் வியந்து போற்றினீர்கள். திமுக தலைவர்களுடைய ஆற்றலை பாராட்டினீர்கள். இவற்றை யெல்லாம் வியந்து போற்றவும், பாராட்டவும் உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்.
ஜனநாயகத்தில் யாரும், எந்தப் பொருள் பற்றியும் பேச லாம். எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை பற்றியும் குறை கூறலாம், குற்றம் சாட்டலாம். அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாய கத்தை இன்று நேற்றல்ல. அண்ணா காலத்திலேயிருந்து நாம் பின்பற்றி வருகிறோம்.
நான் பல நேரங்களில் சொல்லியிருக்கின்றேன். அப்போது நடந்த கதையைச் சொல்கிறேன். ஒரு பொதுக் குழுவில் அண்ணா மீதே ஒருவர் குற்றம் சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்லிக் கொண்டிருக் கும்போது, அண்ணா எழுந்து, ‘பொதுச் செயலாளராகிய என் மீது குற்றச்சாட்டு வரும் நேரத்தில், நான் இங்கே அமர்ந் திருப்பது அழகல்ல. ஆகவே, நான் கீழே இறங்கி உட்கார்ந்து கொள்கிறேன். ஆசைத்தம்பி இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து தீர்ப்பு அளிக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு, யாரு டைய மறுப்பையோ, பதிலை யோ எதிர்பாராமல் கீழே இறங்கி, பொதுக் குழுவிலே மற்ற உறுப்பினர்களோடு அமர்ந்து கொண்டார்.
பிறகு அந்தக் குற்றச் சாட்டிற்கான இருதரப்பு வாதங்களையும் ஆசைத்தம்பி கேட்ட பின்பு, தீர்ப்பு கூறினார் இறுதியாக. ‘இதிலே அண்ணா மீது எந்தக் குற்றமும் இல்லை, இந்தப் புகாரைச் சொன் னவர்கள்தான் குற்றவாளிகள்’ என்று ஆசைத்தம்பி தீர்ப்பளித்தார்.
இது அண்ணா காலத் திலேயிருந்து இதுவரையிலே கடைபிடித்து வருகின்ற ஜனநாயகம். அப்படிப்பட்ட ஜனநாயகத்தை உருவாக்கி அதைத் தருவாக்கி, நிழல் தருகின்ற ஒரு இயக்கமாக, திராவிட இயக்கமாக மலர்ந்திருக்கின்ற இந்த இயக்கத்துக்கு சோதனைகள் எத்தனையோ வந்ததுண்டு. அந்த சோதனைகளை எல்லாம் தாண்டி, வெற்றிகளை இன்றைக்கு குவித்து வருகிறது திராவிட இயக்கம்.
திராவிட இயக்கம் தமிழ கத்திலே மாத்திரமல்லாமல், வேறு மாநிலங்களிலும் பரவ வேண்டும். நம்முடைய கொள் கைகளைப் பிற மாநிலத்தாரும் உணர வேண்டும் என்ற முயற்சிகளிலே நாம் ஆயத்தம் செய்து வருகின்ற இந்த நேரத் திலே, தமிழகத்தில் திமுக ஆட் சியிலே இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில், வருகின்ற சட்டமன்ற தேர்தலிலே வெற்றி பெற வேண்டியது மிகமிக முக்கியமானது என்பதை மறந்து விடக்கூடாது.
அப்படிப் பெறுகின்ற வெற்றிக்கு இன்றைக்குத் தடை போட வேண்டும் என்று சில கட்சிகள், குறிப்பாக அதிமுக பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு நாம் இடம் தரக்கூடாது. இங்கே சிலர் சொன்னார்கள். தலைவரிடத்திலே மனுக்கள் கொடுத்தோம், கவனிக் கப்படவில்லை, அமைச்ச ரிடத்திலே புகார்கள் சொன் னோம். அவை கவனிக் கப்படவில்லை. அமைச் சரிடத்திலே போய் மாவட் டத்தில் நடைபெறுகின்ற சில காரியங்களை பற்றிச் சொன்னோம், ஆனால், அவர் அதை அலட்சியப்படுத்தி விட்டார் என்று, இப்படி அமைச்சர் மீது, தலைவர் மீது, நம் பிரதிநிதிகள் மீது சொல்லப்பட்ட குறைகளே தவிர, வேறு பெரும் குறைகள் எதுவுமில்லை.
கொள்கைக்குப் புறம்பாக நடந்து கொண்டார் என்றோ, லட்சியத்திற்கு எதிராக நடந்து கொண்டார் என்றோ யாரை யும் குறை சொல்லி, இங்கே யாரும் பேசவில்லை. ஒரே யொரு குறை எனக்கிருக்கிறது. உங்களுக்குள்ளே இன்னும் முழுமையான ஒற்றுமை வர வேண்டும் என்பதுதான்.
அந்த ஒற்றுமை மாத்திரம் வந்து நிலைத்து விட்டால், ஆயிரம் அ.தி.மு.க.க்கள் வந்தாலும், நம்மை யாரும் வெல்ல முடியாது.
மதுரை மாநகரத்தில் ஒரு பெரிய கூட்டத்தைக் கூட் டியதாக, தனக்கு தானே பெருமை பேசிக் கொண்டு, தன்னுடைய ஆதரவு பத்திரி கைகளை அதை பற்றி எழுதச் சொல்லி, படங்கள் போட் டுள்ளனர். உலகத்திலே ஒரு பெரிய அதிசயம்போல, ஒரு கம்யூனிஸ்ட் பத்திரிகையில், முதல் பக்கத்தில், அரைப்பக்கம் அளவிற்கு மதுரையிலே நடைபெற்ற அ.தி.மு.க. கூட் டப் படத்தினை வெளி யிட்டிருக்கிறார்கள் என்றால், இதைவிட காக்கா பிடிக்கின்ற காரியம் வேறு எது இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
எந்த கம்யூனிஸ்ட்? கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடி மக்கள், ஆதிதிராவிட மக்க ளுடைய நிலங்களை எல்லாம் சுருட்டிக் கொண்டிருக் கிறார்கள். அதை மீட்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று எந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்னிடத்திலே கொண்டு வந்து மனு கொடுத் தார்களோ, அந்த தலைவர்கள் நடத்துகின்ற பத்திரிகையில், அவ்வளவு பெரிய விளம் பரத்தைப் போட்டு, ஏதோ இந்தியாவிலேயே பெரிய கட்சி அ.தி.மு.க.தான் என்ப தைப்போலவும், அதனுடைய நிழலிலே தாங்கள் இருப்பதைப் போலவும் காட்டிக் கொள்கிறார்கள் என்றால், இதிலே ஏமாறப் போகிறவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும்.
நிச்சயமாக இந்தக் கம் யூனிஸ்ட்கள்தான் ஏமா றுவார்கள். நம்மை வெற்றி பெறுவதற்கு, நாம் ஒற்று மையாக இருந்தால், நாம் வலி மையோடு இருந்தால், நாம் எந்தக் கணத்திலும் நிதானம் இழக்காமல், நேர்மையான முறையில், அண்ணா வழியில் அயராது உழைத்து, தொடர் ந்து நம்முடைய தொண்டினை திமுகவுக்கு ஆற்றிக் கொண்டிருந்தால், யாராலும் நம்மை அசைக்க முடியாது.
உங்களில் பலருக்கு மாறுபட்ட விஷயங்கள் இருந்தால், ஒருவரைக் குறை கூறிப் பேசியிருந்தால், அவற்றையெல்லாம் இந்த இடத்திலேயே மறந்துவிட்டு, வீட்டுக்குச் சென்றதும், நண்பர்களாக, தோழர்களாக, உடன்பிறப்புக்களாக நீங்களெல்லாம் சேர்ந்திருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் சுப.தங்கவேலன் கூறியதாவது: கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கலந்துரை யாடல் நடந்தது. பொதுக் கூட்டங்கள் நடத்தி தி.மு.க. அரசின் சாதனைகளை மக்க ளுக்கு எடுத்துச் சொல்லுமாறு முதல்வர் உத்தரவிட்டார். வரும் பொது தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து சட்டப் பேரவை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு சுப.தங்கவேலன் கூறினார்.
வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு கோவை மாவட் டம், 28ம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி, மாலை 4 மணிக்கு தூத்துக்குடி, நவம் பர் 1ம் தேதி காலை 10 மணிக்கு தென் சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி கலந்துரையாடல் நடத்துகிறார்.

No comments:

Post a Comment