கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

முதலமைச்சர் கலைஞரின் பேரன் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் திருமணம் மதுரையில், நவ.18இல் நடக்கிறது


முதலமைச்சர் கலைஞரின் பேரனும், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனுமான தயாநிதி - அனுஷா திரு மணம் அடுத்த மாதம் (நவம்பர்) 18 ஆம் தேதி மதுரையில் நடக்கிறது.

மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச் சர் மு.க.அழகிரி - காந்தி அழகிரியின் மகன் தயாநிதிக்கும், சென்னை வழக்கறிஞர் பி.எஸ்.சீதா ராமன் - பத்மினி ஆகியோர் மகள் அனு ஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள் ளது. முதலமைச்சர் கலை ஞர் கைப்பட எழுதி யுள்ள திருமண அழைப் பிதழ் மிக எளிமையான முறையில் அச்சடிக்கப் பட்டு உள்ளது. மறைந்த முதலமைச்சர் அண்ணா வின் படம் மட்டுமே அச்சிடப்பட்டுள்ள அந்த அழைப்பிதழில் முதலமைச்சர் கலைஞர் கைப்பட எழுதியுள்ள அழைப்பு விவரம் வருமாறு,

பேரன்புடையீர்,

வணக்கம்.

வரும் 18.11.2010 நவம்பர் பதினெட்டாம் நாள் வியாழன் காலை 9.30 மணிக்கு எனது பேரனும், மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர்,தென்மண் டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி அவர்களின் மகனுமான செல்வன் தயாநிதிக்கும், சென்னை வழக்கறிஞர் பி.எஸ். சீதாராமன் அவர் களின் மகள் செல்வி அனுஷாவுக்கும், மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழக நிதியமைச்சர் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்ப ழகனார் தலைமையில் நடைபெறும் மண விழாவுக்கு, தாங்கள் குடும்பத்தாருடன் வருகை தந்து மண மக்களை வாழ்த்தியருள வேண்டுகிறேன்.

அன்புள்ள

மு.கரு ணாநிதி.

-இவ்வாறு திருமண அழைப்பிதழில் எழுதி உள்ளார்.

No comments:

Post a Comment