கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 11, 2010

ஈழத் தமிழர் மறுவாழ்விற்கு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் : சோனியாவிடம் முதல்வர் கலைஞர் நேரில் கோரிக்கை


காங்கிரஸ் கட்சியின் 125 ஆம் ஆண்டு விழா, முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் ஆதரவா ளர்கள் காங்கிரஸ் கட்சி யில் சேரும் நிகழ்ச்சி களுக்கான பொதுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரு மான சோனியா காந்தி 09.10.2010 அன்று சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் சந்திப்பு

அவரை முதல்வர் கலைஞர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சந்தித்து பேசினார். பின் னர் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து தான் எழுதிய கடிதத்தை சோனியா காந்தியிடம் கொடுத்தார். அந்த கடிதம் விவரம் வருமாறு, இந்திய அர சின் வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் கடந்த 2 மாதங் களுக்கு முன்பு இலங்கை சென்று வந்ததை தாங் கள் அறிவீர்கள். அவர், தமிழக அரசின் தலை மைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் இருந்து இலங்கை குறித்த தகவல்களை அறிந் தோம்.

சொந்த இடங்களுக்கு

முக்கிய பிரச்னை களில் ஒன்று, 30 ஆயிரம் தமிழர்கள் இலங்கை முகாம்களில் இருப்பது. இது எனக்கும் தமிழக மக்களுக்கு தொடர்ந்து கவலை அளிக்கிறது. முகாம்களில் உள்ள இந்த மக்களை உடனடி யாக மறுவாழ்வு அளித்து அவர்களது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு விரைவாக மறுவாழ்வு அளித்திட வேண்டும் என்று இலங்கை அரசை அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.

இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்

முகாம்களில் சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் இருப்பதாக வெளியு றவுச் செயலாளர் குறிப் பிட்டுள்ளார். இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று அனை வராலும் சொல்லப்படு கிறது. மேலும் காலதா மதம் இல்லாமல் நட வடிக்கைகளை எடுக்க இலங்கை அரசை கண் டிப்பாக வலியுறுத்த வேண்டும். இதுதொடர் பாக நான் ஏற்கனவே பிரதமருக்கு கூட கடிதம் எழுதியிருக்கிறேன். கடந்த 18 மாதங் களாக முகாம்களில் இலங்கை தமிழர்கள் தொடர்ந்து ஏராளமான கஷ்டங்களை அனுப விக்கிறார்கள். இதற்கு தீர்வு காண சில உறுதி யான அரசியல் நடவ டிக்கை தேவை. எனவே, முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களின் துயரத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு மூலம் இலங்கை அரசை வலியுறுத்தும் விஷயத்தில் தாங்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று கேட் டுக்கொள்கிறேன். இவ் வாறு அதில் கூறப்பட் டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அய்க்கிய முற்போக்கு கூட்டணி யின் காங்கிரஸ் தலைவர் சோனியா முதல்வர் கலைஞரிடம் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜவுளித் துறை அமைச்சர், தயா நிதிமாறன் மற்றும் மத் திய மாநில அமைச்சர் கள் எம்.பி.க்கள் சோனி யாவை வரவேற்றனர்.

தனியாக சந்திப்பு

சோனியா காந்தி யுடன் முதல்வர் கலை ஞர், துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் சில நிமிடங்கள் தனியாக சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு முடிந் ததும் சோனியா காந்தி தயாராக இருந்த தனி ஹெலிகாப்டர் மூலம் பாண்டிச்சேரி புறப் பட்டுச் சென்றார். சோனியா காந்தியை சந்தித்து விட்டு, விமான நிலையத்தில் இருந்து காரில் வெளியில் வந்த முதல்வர் கலைஞரை, பத்திரிகையாளர் சூழ்ந்து கொண்டனர். அவர்களுக்கு முதல் வர் கலைஞர் அளித்த பேட்டி வருமாறு:

சோனியா காந்தியுட னான சந்திப்பு பற்றி? இது, மிகக் குறுகியகால சந்திப்பு. அதனால் விரி வாக நாங்கள் எதுவும் பேசவில்லை. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேசினோம். சோனியா வுடன் எது குறித்து பேசினீர்கள்? இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசினேன். இலங்கை யில் முகாம்களில் அவ திப்படும் தமிழர்களின் நிலையை எடுத்துக்கூறி மனு ஒன்றை சோனியா காந்தியிடம் வழங்கி னோம்.

மனுவை கனிவுடன் பெற்றுக் கொண்ட சோனியா காந்தி, இந்தப் பிரச்சினையில் நானே நேரடியாக சிறப்பு கவ னம் செலுத்தி, இதற்கு விரையில் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக் கிறேன் என்று உறுதி யளித்தார். கூட்டணி பற்றி பேசினீர்களா? பேசவில்லை; அதற்கான அவசியமும் ஏற்பட வில்லை. தற்போதைய கூட்டணி உறுதியாக உள்ளது. இவ்வாறு முதல் வர் கலைஞர் கூறினார்.

No comments:

Post a Comment