கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, October 20, 2010

முதல்வர் கலைஞருடன், தென்னாப்பிரிக்க தமிழர்கள் சந்திப்பு


தென்னாப்பிரிக் காவில் இருந்து வந்த தமிழர்கள் குழு, முதலமைச்சர் கலைஞரை 18.10.2010 அன்று சந்தித்தது. அவர்கள் விடுத்த பல்வேறு கோரிக் கைகளை பரிசீலிப்பதாக முதலமைச்சர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து, தமிழகத்துக்கு வந்துள்ள தமிழர்கள், முதலமைச்சர் கலைஞரை நேற்று சந்தித்துப்பேசினார்கள். அவர்களுடன் சென்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், சந்திப்பு முடிந்து வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

1860 ஆம் ஆண்டில், தென்னிந்தியா வில் இருந்து தென்னாப்பிரிக்க கரும்பு தோட்டங்களுக்கு தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். வரும் 16 ஆம் தேதியோடு, இங்கிருந்து போய் 150 ஆண்டுகள் ஆவதையொட்டி, தங்கள் மூதாதையர் பிறந்த மண்ணை பார்ப்ப தற்காக லாசரஸ் பிள்ளை என்பவர் தலைமையில் 50 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளார்கள். அவர்கள் தமிழக முத லமைச்சர் கலைஞரை நேரில் சந்தித்து அவருக்கு பாரம்பரிய நினைவுப்பரிசு களை வழங்கி வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க குடியரசுத் தலை வர் ஜேக்கப் ஜுமோவின் தலைமையில் 150 ஆம் ஆண்டு விழா, வருகிற நவ.21 ஆம் தேதி டர்பனில் நடக்கிறது. அந்த விழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து பிரதி நிதிகளையும், கலாசாரக் குழுக்களையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள் ளார்கள். தமிழ் சொல்லிக் கொடுப்ப தற்கு, தென்னாப்பிரிக்காவுக்கு ஆசிரியர் களை அனுப்பி வைக்க வேண்டும், அங்கே ஒரு தமிழ் நூலகம் அமைக்க வேண்டும், தென்னாப்பிரிக்க பல் கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வரிடத்தில், கிறிஸ்டியன் நெட்வொர்க் இன்டர்நேஷனல் என்ற இந்த அமைப்பு சார்பில் தென்னாப்பிரிக்க தமிழர்களும், பிற இந்தியர்களும் வேண்டுகோள் விடுத் துள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் உள் ளனர். அவர்களில் 10 லட்சம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

தென்னாப்பிரிக்க தமிழரோடு, நீண்ட நேரம் பேசிய முதலமைச்சர் கலைஞர், இந்த அழைப்புக்கு விரைவில் பதில் அளிப்பதாக கூறி யுள்ளார். மொரீஷியஸ் தீவுக்கு தமிழ் ஆசிரியர்களை அனுப்பியதுபோல், இதற்கும் முயற்சி எடுப்போம் என்று தெரிவித்தார்.

நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் பிரச்னையில் தலையிட வற்புறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் தலையிட்டு அந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் ரூ.700லிருந்து 1040 வரை வழங்க நிர்வாகம் ஒப்புக் கொள்ளச் செய்தார். நாங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்.

- இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

முதலமைச்சரை சந்தித்துவிட்டு வந்த தென்னாப்பிரிக்க குழுவினர், திடீரென, அவர்கள் மொழியில் தமிழகத்தையும், தென்னாப்பிரிக்கா வையும் வாழ்த்தி முழக்கமிட்டனர்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நாராயணசாமி ரங்கசாமி கவுண்டர், தனபாலன் கவுண்டர் ஆகியோர் கூறும் போது, “முதல்வரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அங்குள்ள தமிழர்கள் நலனுக்காக வைத்த கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார்” என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.

No comments:

Post a Comment