கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 11, 2010

திமுக - காங்கிரஸ் கூட்டணி மகிழ்ச்சியான கூட்டணி என்று சோனியாகாந்தி கூறியிருக்கிறார்:கலைஞர்முதலமைச்சர் கருணாநிதி திருவாரூரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் (09.10.2010) காரில் புறப்பட்ட அவர் புதுவை, கடலூர் வழியாக இரவு சிதம்பரம் வந்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் இல்லத்தில் தங்கினார்.


நேற்று (10.10.2010) காலை 9.45 மணிக்கு அவர் அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் புறப்பட்டு சென்றார். வழியில் வல்லம்படுகையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார்.

விவரங்களைக் கேட்டறிந்தார். உடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு, கடலூர் மாவட்ட ஆட்சியர் பி. சீதாராமன் ஆகியோர் உள்ளனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம் வெற்றிகரமான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் 21 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’என்று கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்தியை சந்தித்தது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மகிழ்ச்சியான கூட்டணி என்று சோனியாகாந்தி கூறியிருக்கிறார்.

தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்க்கப்படுமா?

அதுபற்றி இப்போது கூற இயலாது.

அரசின் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படுமா?

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. புதிய திட்டம் எதுவும் தற்போது இல்லை.

உயர்கல்வியில் இலவச கல்வி வழங்கப்படுமா?

பொறியியல் மற்றும் மருத்துவத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு வழங்குவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும்.

சிதம்பரம் ரெயில்வே மேம்பாலத்துக்கு என்ன பெயர் சூட்டப்படும்?


பிரச்சினைக்குரிய விஷயம் என்பதால் பின்னர் முடிவு செய்யப்படும்.

வீராணம் ஏரி தூர்வாரப்படுமா?

கொள்ளிடக் கரையை உயர்த்தும் பணி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த பணி நிறைவேற்றப்படும்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ள காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஏதாவது திட்டம் உள்ளதா?

ரூ.600 கோடி செலவில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணி தொடங்க உள்ளது


No comments:

Post a Comment