கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

ரப்பர், தேயிலை, வனத்தோட்டக் கழகங்கள், ஆவின், குடிநீர்வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு போனஸ்: முதல்வர் கலைஞர் உத்தரவு


ஆவின், ரப்பர் கழகம், தேயிலைத் தோட்டக் கழகம், குடிநீர் வடிகால் வாரியம், நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர் களுக்கு ரூ.27 கோடி தீபாவளி போனஸ் அளித்து முதல்வர் கலை ஞர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமி ழக அரசு 21.10.2010 அன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்ப தாவது:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணி யாளர்களில் மாதம் 9300-34800 ஊதியத் துடன், ரூபாய் 4300 தர ஊதியம் பெறும் பதவி களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணி யாளர்களுக்குப் போனஸ் சட்டத்தின் படி சம்பள உச்சவரம் புக்கு விலக்களித்து, 2009 -2010ஆம் ஆண்டுக் கான போனஸ் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யப் பணியாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் வழங்கிட முதலமைச்சர் கலைஞர் ஆணையிட் டுள்ளார். இந்த ஆணை யின்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யத்தில் பணிபுரியும் 4 ஆயிரத்து 493 பணியா ளர்களுக்கு 1 கோடியே 57 லட்சம் ரூபாய் போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர் களுக்கு 2009 - 2010 ஆம் ஆண்டுக்குரிய 8.33 சதவவிகிதம் போனஸ் மற்றும் 11.67 சதவிகிதம் கருணைத்தொகை வழங் கிடவும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழ கத்தின் நெல் கொள் முதல் நிலையங்களில் பணிபுரியும் பருவகால சுமை தூக்கும் தொழி லாளர்களுக்கும், கிடங் குகளில் பணிபுரியும் தற்செயல் பணியாளர் களுக்கும் தலா 1500 ரூபாய் கருணைத் தொகை வழங்கிடவும் முதலமைச்சர் ஆணை யிட்டுள்ளார். இந்த ஆணையின்படி, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணி யாளர்கள், பருவகாலப் பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர் கள் 32 ஆயிரத்து 249 பேருக்கு போனஸ் மற் றும் கருணைத் தொகை யாக 13 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப் படும்.

அரசு ரப்பர் கழகத் தோட்டப் பணியா ளர்கள் மற்றும் தொழி லாளர்கள், தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகப் பணியாளர்கள் மற்றும் தொழிலா ளர்கள், வனத்தோட்டக் கழகப் பணியாளர்கள் ஆகியோர்க்கு 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்கிட முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார். அதாவது, அரசு ரப்பர் கழகத் தோட்டத் தொழி லாளர்கள் 2886 பேருக் கும், தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத் தொழி லாளர்கள் 9275 பேருக் கும் 20 சதவிகித போனஸ் வழங்கிடவும்; அது போலவே, அரசு ரப்பர் கழகப் பணியாளர்கள் 118 பேருக்கும், தமிழ்நாடு தேயிலை தோட்டப் பணியாளர்கள் 313 பேருக்கும், தமிழ்நாடு வனத்தோட்டக் கழகப் பணியாளர்கள் 359 பேருக்கும் 20 சதவீத போனஸ் வழங்கிடவும் முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணையின் காரணமாக, அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம், வனத் தோட்டக் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளை யும் சேர்ந்த 12 ஆயிரத்து 951 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் களுக்கு 6 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் 2009 - 2010 ஆம் ஆண்டுக்குரிய போன ஸாக வழங்கப்படும்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட் டுறவு ஒன்றியங்கள் ஆகி யவற்றில் பணிபுரியும் ஆவின் நிறுவனப் பணி யாளர்கள் 6 ஆயிரத்து 576 பேருக்கு 2009 - 2010 ஆம் ஆண்டுக்கு, சென்ற ஆண்டைப் போலவே 8.33 சதவிகித போனஸ் மற்றும் 11.67 சதவிகித கருணைத்தொகை வழங் கிட முதலமைச்சர் கலை ஞர் ஆணையிட்டுள் ளார். இந்த ஆணையின் காரணமாக தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத் தியாளர் இணையத்தில் பணிபுரி யும் 2 ஆயிரத்து 481 பணி யாளர்களும், மாவட்ட பால் உற் பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங் களில் பணி புரியும் 4 ஆயிரத்து 95 பணி யாளர்களும் ஆக மொத் தம் 6 ஆயிரத்து 576 பணியாளர்களுக்கு மொத்தம் 5 கோடியே 29 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment