கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, October 5, 2010

மீனாட்சி கோயில்,மகால், தெப்பக்குளம் அழகுபடுத்த ரூ.14 கோடி - அடிக்கல் நாட்டினார் மு.க.அழகிரி


மீனாட்சி அம்மன் கோயில், தெப்பக்குளம், மகாலை சுற்றிலும் அழகுபடுத்தும் ரூ. 14 கோடி திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 03.10.2010 அன்று அடிக்கல் நாட்டினார். மற்றொரு விழாவில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பையும் திறந்து வைத்தார்.
சுற்றுலா மேம்பாட்டிற்காக மதுரைக்கு ரூ.14 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் இடத்தில் மாடி தளத்துடன் வாகனங்கள் நிறுத்துமிடம் இரண்டரை ஏக்கரில் ரூ.5.63 கோடி செலவில் கட்டப்படுகிறது. இது ஒரே நேரத்தில் 800 வாகனங்கள் நிறுத்தும் வகையில் அமைகிறது. இதே இடத்தில் சுற்றுலா பயணிகள் வளாகம் அனைத்து வசதிகளுடன் கட்டப்படுகிறது.
மீனாட்சி பூங்காவை அழகுபடுத்துதல். கோயிலை சுற்றிலும் அலங்கார விளக்கு பொருத்துதல், புது மண்டபத்தை சீரமைத்தல் போன்ற பணிகள் நடக்கவுள்ளன. இதற்காக அங்குள்ள கடைகளை காலி செய்து, மாற்று இடமளிக்க, புதிய குன்னத்தூர் சத்திரம் கட்டப்படுகிறது. விளக்குதூண் அழகுபடுத்தப்பட்டு, செயற்கை நீருற்று உருவாக்கப்படுகிறது. பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மேற்கு கோட்டை வாயில் புனரமைப்பு செய்யப்பட்டு அழகுபடுத்தப்படுகிறது.
திருமலை நாயக்கர் மகாலை சுற்றிலும் அழகுபடுத்தி, நடைபாதை, புல்வெளி அமைக்கப்படுகிறது. மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றிலும் ரூ.2.60 கோடியில் அழகுபடுத்தி. கிரானைட் நடைபாதை, புல்வெளி, நீரூற்று அமைத்தல் போன்ற பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த திட்டங்கள் அனைத்திற்கும் பழைய சென்ட்ரல் மார்க்கெட் இடத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று அடிக்கல் நாட்டினார்.
மதுரை மேலவாசலில் 30 ஆண்டுகளுக்கு முந்தைய குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டு, ரூ. 7.20 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையிலும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி முன்னிலையிலும் நடந்தது. குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ராமலிங்கம் திட்டத்தை விளக்கினார். குடியிருப்பை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார்.
விழாவில் கலெக்டர் காமராஜ், மேயர் தேன் மொழி, ஆணையாளர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல், குடிசை மாற்று வாரிய தலைமை பொறியாளர் இளங்கோவன், கண்காணிப்பு பொறியாளர் ஜெயபால், மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, துணை மேயர் மன்னன், எம்.எல்.ஏக்கள் கவுஸ்பாட்சா, ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, தி.மு,,க. தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, மண்டல தலைவர்கள் மாணிக்கம், இசக்கிமுத்து, கவுன்சிலர் செல்லத்துரை பங்கேற்றனர்

No comments:

Post a Comment