கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

தமிழகத்தைப் பின்பற்றி, இந்தியா முழுவதும் உழவர் சந்தைகள் திறக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தமி ழகத்தைப் பின்பற்றி இந்தியா முழுவதும் உழவர் சந்தைகள் திறக்க வேண்டும் என்று புதுடில்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.


விலைவாசியை கட்டுப் படுத்துவதற்காக, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தலைமையில் பல்வேறு மாநில முதல்வர்கள் அடங் கிய ஒரு குழுவை (தேசிய திட்டக்குழு) மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், தமிழக முதலமைச்சர் கலை ஞரும் இடம்பெற்றுள்ளார். கடந்த முறை புதுடில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை களை, தமிழகம் சார்பில் வழங்கினார். அந்த ஆலோ சனைகளை மத்திய அர சுக்கு பரிந்துரைகளாக வழங்கவும் தேசிய திட்டக் குழு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், தேசிய திட்டக்குழுக் கூட்டம், புதுடில்லியில் 21.10.2010 அன்று மீண் டும் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது,

மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே உணவுப் பாதுகாப்புக்குத்தான் மிகுந்த முக்கியத்துவத்தை அளித்து வருகின்றன. தமிழகம் இதற்கு முன்பு தெரிவித்த ஆலோசனை களில் பெரும்பாலானவை, மத்திய அரசுக்கு பரிந் துரைக்கப்படுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெரிவிப் பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பணவீக்கத்தின் தாக்கம், சாதாரண மற்றும் ஏழை மக்களை பாதிக்காத வகை யில் முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசாங்கம், நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், கிலோ 1 ரூபாயில் அரிசியை வழங்கி வருகிறது. இதுதவிர, பருப்பு வகை கள், பாமாயில், கோதுமை போன்றவையும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, மலிவு விலையில் மளிகைப் பொருள்களும் சிறு வினி யோகிக்கப்பட்டு வருகிறது.

எங்களது அனுபவங்களை அடிப்படையாக வைத்து விலைவாசி கட்டுப்பாட்டுக் கான திட்டங்களை முன் வைக்கிறேன். விளை நிலங்களில் இருந்து நுகர்வோருக்கு பொருள்கள் சீராக சென்றடைவதற்கு, வேளாண் உற்பத்தி சந்தை களிடையே போட்டியை உருவாக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. விவசாய சந்தைகளை ஒருங்கிணைத்து, விளைபொருள்களை ஆய்வு செய்து, தரம் உயர்த்துவதற்கு தேவையான வசதி களை ஏற்படுத்தித் தரவேண்டும். விளை பொருள்களை சந்தைப்படுத்தும் (மார்க்கெட்டிங்) வசதிகளை அதிகப் படுத்த வேண்டும். அவற்றை சேமித்து வைப்பது போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நாம் பலப்படுத்த வேண்டியது அவசியம்.

விவசாய உற்பத்தி சந்தையில் போட்டியை ஏற்படுத் துவது, விவசாயிகள், நுகர்வோர் இருதரப்பினருக்கும் பலன்அளிப்பதாகவே இருக்கும். எனினும், விவசாய சந்தைப் படுத்துதல் சங்கங்களையும் புறந்தள்ளிவிட முடியாது. தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் விவசாய சந்தைப்படுத்தல் சங்கங்களால், கள்ளச் சந்தை, பதுக்கல் போன்றவை தடுக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் கலைஞரின் கோரிக்கையை ஏற்று, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவை, முன் பேர வர்த்தகத்தில் இருந்து மத்திய அரசால் நீக்கப்பட்டன. எனவே, இந்த உணவு வகைகளை தொடர்ந்து, நீக்கப்பட்ட பட்டியலிலேயே வைக்க இந்த திட்டக்குழு பரிந்துரைக்க வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் உழவர் சந்தைகளால் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத் துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக விளைபொருள்களை விற்பனை செய்வதால் நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும் அது பயனுள்ளதாக உள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் இதனை அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கலாம். விவசாயிகளுக்கு எளிதாக தகவல் அளிக்கும் வகையில் அரசு தொலைக் காட்சி அலைவரிசையில் விவசாயிகளுக்கான 24 மணி நேர சேவை இருக்க வேண்டும். அது அந்தந்த மாநில மொழிகளில் ஒளிபரப்பட வேண்டும். கூட்டுறவுத்துறைகள் முக்கியமாக, விவசாய வேளாண் சங்கங்கள், உணவு பதப்படுத்தும் பணிகளை முக்கிய பணியாக எடுத்து செய்ய வேண்டும். விளைபொருள்கள் சீராக வினியோகிக்கப்பட, பெருமளவில் நிதி முதலீடு செய்யப்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளதால், பல்வேறு சந்தைகளை நன்றாக இணைக்க முடிந்துள்ளது. இங்கு வகுக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. ஆனால், இவற்றுக்கு மத்திய அரசு நிதி உதவியை அளித்து செயல்படுத்த உதவ வேண்டும். பலவீனமான கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்பட்டு வரும் மானிய திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.

சந்தையில் அதிக விலையில் விற்கப்படும் சில முக்கிய பொருள்களை மட்டுமாவது அதிக அளவில் வாங்கி, அடக்க விலையிலேயே விற்றால், விலைவாசியை கட்டுப் படுத்த முடியும். இதற்காக, விலைவாசி கட்டுப்படுத்தும் நிதியை மத்திய அரசு ஏற்படுத்துவதற்கு இக்குழு பரிந் துரைக்கலாம். அரிசியை போலவே, பருப்பு வகைகளை கொள்முதல் செய்தோ, இறக்குமதி செய்தோ, பொது வினியோக முறையில் வழங்க வேண்டும். உணவுப்பொருள் இறக்குமதியில், மத்திய அரசு தற்போது கடைப்பிடித்து வரும் நடைமுறை சிறப்பானதாக இல்லை. பருப்பு வகைகளின் தட்டுப்பாட் டை போக்க, குறைந்தபட்ச சேமிப்பு இருப்பை மத்திய அரசு வைத்திருக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் சட்டம், 1955 அய் மேலும் கடுமையாக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment