விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினு க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் நடந்தது.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தலைமையில் ஒரு குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்தார். அதில், தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் ரோசய்யா, மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
இந்த குழுவின் கூட்டம் 21.10.2010 அன்று டெல்லியில் நடக்கிறது. இதில், முதல்வர் கருணாநிதி சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 20.10.2010 அன்று மாலை 6.15 மணிக்கு சென்னையில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இரவு 9.05 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தார். விமான நிலைய த்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, பழனி மாணிக்கம், காந்திசெல்வன், ஜெகத்ரட்சகன் மற்றும் எம்.பி.க்கள் திருச்சி சிவா, சுகவனம், அப்துல் ரகுமான், செல்வ கணபதி உட்பட ஏராளமானோர் வரவேற் றனர்.
மேள தாளங்களுடன் தி.மு.க.வினர் திரண்டு வந்து வரவேற்றனர். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி யளித்தார். அவர் கூறுகை யில், “விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடைபெறும் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் ஆக்கப்பூர்வமான யோசனைகளை தெரி விப்பேன்” என்றார்.கூட்டம் முடிந்து 21.10.2010 அன்று சென்னை திரும்புகிறார்.
முன்னதாக 20.10.2010 அன்று மாலை சென்னை விமான நிலையத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பூங்கோதை உள்ளிட்டோர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை வழியனுப்பினர்.
No comments:
Post a Comment