தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.பி. பி.சாமியின் தந்தையும், முன்னாள் கவுன்சிலரு மான கே.பரசுராமனின் 18-வது நினைவு நாளை யொட்டி ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா, திரு வொற்றியூர் விம்கோ நகரில் நடந்தது. விழாவில் 10 பேருக்கு ஆட்டோ ரிக்ஷா, ஒருவருக்கு மினி லாரி உள்பட 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் அன்ப ழகன் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
திருவொற்றியூர் பகுதி யில் தி.மு.க.வை வளர்த்திட பரசுராமன் ஆற்றிய பணிகளை அண்ணா, கலைஞர், நான் உள்பட அனை வரும் நன்கு அறிவோம். தனக்கு பதவி கிடைக்கும் வாழ்வு கிடைக்கும் என்று எண்ணி அவர் கழக பணி யாற்றவில்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரைப்போல் தி.மு.க. தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் படிப்படியாக வளர்ந்து தி.மு.க.வாக மாறி ஒளி பெற்று விளங்குகிறது.
தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆட்சி செய்கி றான் என்பதை பெருமை யான விஷயமாக நாம் கருதவேண்டும். உழைக் கும் மக்களின் பிரதிநிதி யாக ஏழை எளிய மக்க ளுக்கு பல்வேறு திட் டங்களை தீட்டி கலைஞர் ஆட்சி செய்து வருகிறார். கலைஞர் 6 ஆவது முறையாக முதல்வராக வருவது உறுதி. நமக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற ஆசை இல்லை. ஆனால் நாம் இல்லையென்றால் அந்த இடத்தில் அராஜக ஆட்சி வந்து விடும்.
நாம் யார் எப்படி அரசியல் கட்சி தொடங் கினோம். நேற்று சினி மாவில் நடித்து விட்டு இன்றைக்கு முதல்வர் ஆகிவிடலாம் என்று கட்சி தொடங்கி னோமா? யாருடனாவது கூட் டணி வைத்துக் கொண்டு யார் தோளிலாவது ஏறி மகனுக்கு பதவி வாங்கி விடலாம் என்று அரசி யல் நடத்துகிறவர்களா? ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நானே அமைச்சராக இல்லாவிட் டாலும் தி.மு.க. கட்சி நடக்கும். தி.மு.க. அடித் தட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம்.
கலைஞர் ஆட்சியில் பயன்பெறாத குடும்பமே இல்லை என்று கூறலாம். வண்ணத்தொலைக்காட்சி, இலவச எரிவாயு அடுப்பு, தொழில் தொடங்க உதவி, மாற்று திறனாளி களுக்கு உதவி என்று பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். எந்த உதவி யும் பெறாதவர்கள் யாராக இருந்தாலும் கூட 108-ன் உதவியை மறக்க முடி யாது. அதையாவது பெற்று இருப்பார்கள். 5 ஆண்டுகளில் நாம் நிறை வேற்றின சாதனைகள் வேறு எந்த ஒரு மாநி லத்திலும் நடைபெற்றி ருக்காது. தி.மு.க.வை எந்த தீய சக்தி யாலும் வீழ்த்த முடி யாது.
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கவிஞர் கவி தைப்பித்தன், டி.கே.எஸ். இளங்கோவன், கும்மி டிப்பூண்டி கி.வேணு, கத்தி வாக்கம் நகரசபை தலை வர் ந.திருசங்கு, நகர செய லாளர்கள் பாண்டியன், முத்துசாமி, பி. ஆதிகுரு சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment