கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, October 14, 2010

மனிதாபிமான முறையில் பணியாற்றிட வேண்டும்: மருத்துவர்களுக்கு கலைஞர் வேண்டுகோள்


மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மருத்துவமனைகளில் போதிய கவனிப்பு இன்றி மரணம் நிகழும் செய்திகள் அறவே வராத அளவுக்கு பணியாற்ற வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.


முதலமைச்சர் கருணாநிதியின் சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையின் 125ம் ஆண்டு விழாவும், எம்எல்ஏ மேம்பாட்டு நிதியான ரூ.1.80 கோடியில் கட்டப்பட்ட பேறுகால முதல்நிலை சிகிச்சை கட்டிடத்தின் திறப்பு விழாவும், தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.200 கோடி மதிப்பிலான இதயநோய் மகளிர் கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் தடுப்பு திட்டங்கள் தடுப்பு விழாவும், கானொளி நூலக திறப்பு விழாவும் கஸ்தூரிபா மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் கருணாநிதி இந்த திட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது,

உடல்நிலை

மருத்துவமனைக்கு வருகை தந்ததும், அதற் கேற்ப உடல்நிலையும் சரியில்லை. உடல் நிலை சரியில்லாத காரணத் தால், மருத்துவமனை விழாவுக்கு வரவில்லை; பிறருடைய உடல்நிலை சரியாக இருக்க வேண்டு மென்ற காரணத்துக் காக, அமைக்கப்பட்டி ருக்கின்ற மருத்துவ மனையினுடைய திறப்பு விழாவில் கலந்து கொள் வது- இந்தத் தொகுதி யினுடைய சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் என்னு டைய கடமை. சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில், முதல மைச்சர் என்ற நிலையில் அந்தக் கடமையை நிறைவேற்ற உடல் நிலை இடம் தராவிட்டாலும், இங்கே வந்திருக்கின்றேன்.

மூன்று நிகழ்ச்சிகள் இணைக்கப்பட்டு- கஸ் தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையினு டைய 125 ஆம் ஆண்டு விழா- சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப் பட்ட கட்டடங்கள் திறப்பு விழா- இதய நோய் மற்றும் மகளிர் கருப்பைவாய், மார்பகப் புற்று நோய்த் தடுப்புத் திட்டங்களின் தொடக்க விழா ஆகிய இந்த விழாக்கள் எல் லாம் இணைக்கப்பட்ட இந்த விழாவிலே நான் கலந்து கொள்வது, உண் மையிலே சட்டமன்றத் தொகுதியினுடைய கடமையை ஆற்றுகின்ற அந்தப் பண்பை அனை வரும் பெற்றாக வேண் டும் என்ற ஒரு ஊக் கத்தை, உறுதியை அளிக் கின்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையைக் கொண்டு இந்தக் கட் டடம்- மருத்துவத் துறை மேம்பாட்டுக்காக- மக்கள் நல்வாழ்வுக்காக கட்டப்பட்டிருக்கிறது என்பதை விளம்பரங்கள் மூலமும், செய்திகள் வாயிலாகவும் நாமெல் லாம் அறிவோம். இது தொகுதி மேம்பாட்டு நிதியிலேயிருந்து கட்டப் படுகிறது; என்னுடைய சொந்தப் பணத்திலே யிருந்து கட்டப்படுவது அல்ல; இந்தத் தொகுதிக் காக ஒதுக்கப்பட்டிருக் கின்ற நிதியிலேயிருந்து கட்டப்பட்டிருக்கின்றது. ஆனால், ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன்.

இந்தியாவில் முதன் முதலில் தொகுதி மேம் பாட்டு நிதியை பொதுக் காரியங்களுக்கு, அதைப் போல நல்ல காரியங் களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற அனுமதியை மத்திய அரசு ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கு வழங்கியி ருந்தது. அதைப்பார்த்து நானும்- நாடாளுமன்ற உறுப்பினர்களினுடைய தொகுதி நிதி நல்ல காரியங்களுக்காக ஒதுக் கலாம் என்று இருப் பதைப்போல, சட்ட மன்ற தொகுதி நிதியை யும் ஏன் ஒதுக்கக் கூடாது என்ற கேள்வி என் முன்னாலே எழுந்து, சட்டமன்றத் திலே அதை அறிவித்து, அதை சட்டமன்ற உறுப் பினர்களும் ஏற்றுக் கொண்டு, அந்த வகை யிலே இன்றைக்கு சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை இது போன்ற நல்ல காரியத் துக்காக செலவழித்தி ருக்கின்றோம்.

ஆக, இந்தியாவிலே மத்திய அரசினுடைய பணத்தை- அவர்கள் நாடாளுமன்ற தொகுதி களுக்காக ஒதுக்குகின்ற பணம் ஏற்கெனவே ஆங்காங்கே நாடாளு மன்ற தொகுதிகளுக் காகச் செலவழிக்கப் படுகின்ற நிலையிருந் தாலும்கூட; சட்ட மன்றத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்படுகின்ற பணத்தை- அந்தத் தொகுதி மேம்பாட்டுக் காக செலவழிக்க வேண் டும் என்று முதல் குரல் கொடுத்தது தமிழ்நாடு தான் என்பதையும், தமிழ்நாடு அரசுதான் அதைச் செய்தது என்ப தையும் இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.

முதலில், அது 25 லட்சம் ரூபாயாக ஒதுக்கப் பட்டது. பிறகு, கொஞ் சம் கொஞ்சமாக அந்தத் தொகை உயர்த்தப்பட்டு, இப்போது ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்த்தப் பட்டு, அந்தத் தொகை யைப் பயன்படுத்திக் கொண்டு, நம்முடைய சட்டமன்ற உறுப்பி னர்கள் தொகுதிப் பணி களை ஆற்றிக் கொண்டி ருக்கின்றார்கள். அந்தப் பணியின் காரணமாகத் தான், அத்தகைய உத வியின் காரணமாகத் தான், இந்த ஏற்பாடு செய்யப்பட்டு, தாய் சேய் நல மருத்துவமனை- சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலி ருந்து கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத் தும் திறந்து வைக்கப் பட்டிருக்கின்றன.

இப்படித் திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்தக் கட்டடங்கள் மருத்துவத் துறையின் பயன்பாட்டுக்காக என்றாலும்கூட, கட் டடங்கள் கட்டினால் மாத்திரம் பலனில்லை; அங்கே இத்தனை மருத்துவர்கள் என்று கணக்குக் காட்டினால் மாத்திரம் பயனில்லை; அந்தக் கட்டடங்களி லேயிருந்து பணியாற்று கின்ற மருத்துவர்கள், அந்த மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கின்ற செவிலியர்கள் உள் ளிட்ட மற்ற மருத்துவத் துறை நண்பர்கள் அனைவரும்- ஏதோ ஒரு கடமையாற்றுகிறோம் என்று இல்லாமல்- இந்தப் பணி நம்மை வந்தடைந்திருக்கிறது- அந்தப் பணியை மனித நேய மனப்பான்மை யோடு நாம் நிறை வேற்றுவோம் என்ற அந்த உணர்வைப் பெற்று மக்களைக் காப் பாற்ற வேண்டும்- மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

கோடிக்கணக்கில், லட்சக்கணக்கிலே செலவிட்டு, மருத்துவத் துறைக்கான பணிகளை- மருந்துகள் தயாரிப் பதிலேயிருந்து, மருத் துவத் துறைக்குத் தேவை யான அந்த இயந்தி ரங்களை, நுணுக்கமான விஞ்ஞானக் கருவி களைப் பயன்படுத்து கின்றபோது மனித உணர்வு வேண்டும்; மனசாட்சிக்கு ஏற்ற வகையிலே நாம் நம் முடைய கடமையை ஆற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் ஆனா லும், மருத்துவர் பயிற் சிக்குத் தங்களை ஒப்ப டைத்துக் கொண்டி ருக்கின்ற நீங்கள் ஆனா லும், அனைவரும் அந்த வகையிலே ஒத்துழைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல்

காசு, பணம் பெரி தல்ல. எத்தனையோ செய்திகள் பத்திரிகை களில் வருகின்றன. மருத்துவமனைக்கு வந்த நோயாளியை மருத்து வர்கள் கவனிக்க மறுத்த காரணத்தினால், அல் லது சரியாக கவனிக்காத காரணத்தால், அவர்க ளுடைய உடல் நலிவும் தீரவில்லை- உயிரும் காப்பாற்றப்படவில்லை என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின் றன. பத்திரிகைச் செய்தி கள் ஒருபுறம் இருந் தாலும்கூட, அந்தப் பத்திரிகைச் செய்திகளில் சில இந்தச் சர்க்காருக்கு, இந்த அரசுக்கு விரோத மாக வெளியிடப்பட் டாலும்கூட, அவற்றை யெல்லாம் "இல்லை'' என்று ஆக்குகின்ற வகை யில், மருத்துவத் துறை யிலே பணியாற்றுகின்ற நண்பர்கள் பாடுபட வேண்டும்; ஒத்துழைக்க வேண்டும்.

நீங்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நான் யாரையும் கேட்கவில்லை. சாதா ரண, சாமான்ய ஏழை யெளிய மக்களுக்கு, மன சாட்சிக்கு விரோதம் இல்லாமல், அனை வரும் பாடுபட வேண்டு மென்று மருத்துவத் துறையிலே இடம் பெற் றிருக்கின்ற அனைத்து நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன். அனைத் துத் துறைகளையும் விட, மருத்துவத் துறைதான் மனிதாபி மானத்தோடு- உடன் பாடு கொண்ட துறை யாகும். எனவே, மருத் துவத் துறையிலே தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், "அவர்கள் மனிதாபி மானம் அற்ற வர்கள்; மனிதாபிமானத் திற்கு மரியாதை கொடுக் காதவர்கள்; மனிதாபிமா னத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்'' என்ற பழிக்கு ஆளாக நேரிடும். ஆகவே, அனை வரும் மனிதாபி மானத் தோடு, மனித நேயத் தோடு மருத்துவத் துறைப் பணியை ஆற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டு; இந்தத் திறப்பு விழா விலே- இதுதான் மருத் துவத் துறையிலே இருக் கின்ற எல்லா நண்பர் களுக்கும் நான் விடுக் கின்ற அன்பான வேண்டு கோள் என்று கூறி விடை பெறுகின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கேட்கும், பேசும் திறன் பெற்ற நான்கு குழந்தைகளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். மருத்துவமனையின் 125ம் ஆண்டு மலரை வெளியிட்ட கருணாநிதி, மருத்துவ விழிப்புணர்வு கையேட்டையும் வெளியிட்டார்.

கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பணியாற்றிய முன்னாள் கண்காணிப்பாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை முதல்வர் வழங்கினார்

No comments:

Post a Comment