கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 11, 2010

மத்திய அரசு, மாநில அரசு என்று பிரிக்காமல் ஒன்றாகவே பார்ப்போம் - தமிழக முதலமைச்சர் கலைஞர்


மத்திய ஜவுளித்துறை சார்பில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு திட்டம் தொடக்க விழா மற்றும் இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.2300 கோடியில் 30 லட்சம் ஜவுளித் தொழி லாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கக்கூடிய முதல் ஏடிடிசி ஸ்மார்ட் பயிற்சி நிலையம் தொடக்க விழா 08.10.2010 அன்று எழும்பூரில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் வளாகத்தில் நடந்தது.


முதலமைச்சர் கலைஞர் திட்டத்தை தொடங்கி வைத்தும், 5 தொழிலாளர் களுக்கு பயிற்சி பெறுவதற்கான ஆணை களையும், 5 பயிற்சியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கி பேசி னார். விழாவில் அவர் பேசியதாவது: இந்த விழா கைத்தறியையும் இணைத்து முன்னேற்றுகின்ற ஒரு திட்டத்தோடு நடைபெறுகின்ற விழா என்பதாலும், இந்தியாவிலேயே முதன் முதலாக நம்முடைய தமிழகத்திலே தான் இந்தத் திட்டம் தொடங்கப்படு கின்றது என்பதாலும் மகிழ்ச்சியடை கிறேன்.

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2,300 கோடி செலவில் அடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் பேருக்குத் தேவையான திறனை மேம்படுத்தி, அவர்கள் ஜவுளித் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு வழி வகுக்கும்.

அவர்களுடைய திறனை வளர்ப்ப தற்கு, அதற்கொரு திறனை உருவாக்கக் கூடிய பயிற்சியும் தேவை. அந்தப் பயிற்சியும் இப்போது அளிக்கப்படு கிறது. அதற்கு ஏற்றவாறு தொகை ஒதுக்கப்பட்டு, அந்தத் திட்டமும் நிறை வேற்றப்படுகிறது. இந்தியாவிலேயே முதலாவதாக இந்தத் திறன் மேம் பாட்டுப் பயிற்சி மய்யம் தமிழ்நாட்டி லேதான் தொடங்கி வைக்கப்படுகிறது என்பதை எண்ணும் போது, திறனை மேம்படுத்துகின்ற ஆற்றல் இந்தியா விலேயே தமிழ்நாட்டிற்குத்தான் உரியது என்பதை நாம் சொல்லாமல் சொல்லு கின்றோம். இரண்டு ஆண்டுகளில் இது போன்ற 12 பயிற்சி மய்யங்கள் தமி ழகத்தில் தொடங்கப்பட உள்ளன. அவற்றின் மூலம் 25 ஆயிரம் பேருக்கு ஆடைத் தொழிலில் திறன் மேம்பாட் டுப் பயிற்சிகள் கிடைக்கவிருக்கின்றன.

15.8.2010 சுதந்திரத் திருநாள் அன்று கோட்டையில் தேசியக் கொடியை நான் ஏற்றி வைத்து உரையாற்றிய பொழுது, வேலைவாய்ப்பு இல்லாத, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு படித்த இளை ஞர்கள் பொறியியல், இளங்கலை, முது கலைப் பட்டம் பெற்ற இளைஞர்கள் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற வழிவகுக்கும் நோக்கில் ரூ.50 கோடி ஒதுக்கீட்டில் திறன் வளர்ப்புப் பயிற்சி கள் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டேன்.

நான் செய்த அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக அல்ல; துணையாக, மத்திய அரசின் சார்பில் மத்திய அரசு என்றைக்கும் நமக்குத் துணை நிற் கின்ற அரசு அந்த அரசின் சார்பில், பயிற்சி மையங்கள் நமது இந்தியா முழுவதிலும் தொடங்கப்படுகின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன. அதிலே ஒன்றுதான், இங்கே இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த விழா. இந்தியாவிலே விவசாயத்திற்கு அடுத்ததாக இருப்பது ஜவுளித் துறை. ஜவுளித் துறைக்கு அடிப் படையாக இருப்பது கைத்தறித் துறை. கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும், இந்தத் துறைதான் அடிப்படையாக உள்ள துறை என்பதை எவரும் மறுத்திட இயலாது.

அதனால்தான், கைத் தறியை வளர்க்க வேண்டும், கைத் தறிக்கு ஒரு செல்வாக்கு பெருக வேண்டும், கைத்தறிக்கான சந்தை வளர வேண்டுமென்ற எண்ணத் தோடு எங்கள் தலைவர் அண்ணா, கைத்தறித் துணிகளை மக்கள் வாங் குவதற்கான ஊக்கத்தை ஏற்படுத்த, அவரும், எங்களைப் போன்ற கழகத் தினுடைய முன்னணியினரும் முன் னின்று; கைத்தறித் துணிகளைத் தோளிலும், தலையிலும் சுமந்து ஊர் ஊராக விற்று, அப்படி விற்ற கார ணத்தால், கைத்தறித் துணிகளை வாங்க வேண்டுமென்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டு, கைத்தறிக்கு ஒரு செல்வாக்கு வளர்ந்தது.

எப்படி கதரையே கட்டவேண்டும் என்று காங்கிரஸ்காரர்களுக்கு அன் றைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அந்த உறுதியை மேற்கொண்டு அவர்களும், இன்று வரை கதரா டையை அவர்களுடைய உடை களாக அமைத்திருக்கிறார்களோ, அதைப்போல, இங்கே வாசன் அவர்களைக் கூட பார்க்கிறீர்கள். வாசனுடைய தந்தையார் என்னு டைய அருமை நண்பர் மறைந்த மூப்பனார் கதராடையோடுதான் வருவார்; அதிலே அவர் அழகாகத் தோன்றுவார். ஏற்கெனவே வசீகர மான மூப்பனாரை, கதராடை யோடு தோன்றும்போது பார்த்தால், எனக்கே மேலும் மேலும் அவர் மீது பற்றும், பாசமும் ஏற்படும்.

பரிதிக்கு ஒரு கோரிக்கை

இங்கே பரிதி இளம்வழுதி கைத்தறி நெசவாளர்களுக்கென்று ஒரு கோரிக்கை வைத்தார். நான் அவருக்கு ஒரு கோரிக்கை வைக்கி றேன். தயவு செய்து இனிமேல் நீ தொடர்ந்து கைத்தறியையே கட்டு என்ற கோரிக்கையை நான் அவ ருக்கு வைக்கிறேன். வாய்ச்சொல் மாத்திரம் போதாது. எதையும் நடைமுறைப்படுத்த வேண்டுமே யானால், செயல்படுத்த வேண்டு மேயானால், அதன்படி நாம் நடந்து காட்ட வேண்டும். கேட்டால், நான் வேட்டி கட்டினால்தானே கைத் தறியை உடுத்த முடியும்.

பழைய காலத்தில் சட்டசபையில் என்னு டைய வேட்டிக்கே ஆபத்து வந்த காரணத்தினால்தான், நான் இந்த பேண்ட் போட ஆரம்பித்தேன் என்று சொல்லக்கூடும். இப்போது அந்த ஆபத்து இல்லாத காலத்தில் கூட ஏன் அதையே கடைப்பிடிக்க வேண்டும். ஆக, ஆபத்து இல்லாத காலத்தில் கைத்தறி கட்டினால் பர வாயில்லை.

நான் இந்த விழாவில் நம் முடைய தோழர்கள் மாத்திரமல்ல, தமிழர்கள் அனைவருமே, கைத்தறியா ளர்களும் தமிழர்கள்தான்; அவர்களு டைய வாழ்வும் நம்முடைய வாழ்வுதான் அந்த வாழ்வு சிறக்க அனைவரும் கைத்தறி ஆடையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு வாழ்வு அளிப்போம் என்ற உறுதியை இதுபோன்ற விழாக் களிலே மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டு; மத்திய அரசின் மூலமாகப் போடப்பட்டுள்ள இந்தத் திட்டம் அந்தத் திட்டத்திற்குத் துணை யாக தமிழக அரசும் இருக்கிறது. இன் னும் சொல்லப்போனால், இந்தப் பயிற்சி பெறுகின்ற ஒவ்வொருவருக்கும், 2000 ரூபாய் ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்கவுள்ளது என்பதைத் தெரி வித்துக் கொள்கிறேன். ஆகவே, இதிலே தமிழகம், மத்திய சர்க்கார் என்றெல்லாம் பிரித்துப் பார்க் காமல், பிரித்துப் பார்ப்பவர்கள் பார்த் துக் கொண்டேயிருக்கட்டும்; ஒன்றாக இருக்கும் நாம், ஒன்றாகவே பார்ப்போம். இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்.

விழாவுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் தலைமை தாங்கினார். கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டார். அமைச் சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன், பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிர மணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மத்திய ஜவுளித்துறை செயலாளர் ரீடா மேனன் வரவேற்றார். மத்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகம் மற்றும் பயிற்சி திட்ட தலைவர் பிரேமல் உதானி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment