மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இம் மூன்று மாவட்ட விவசாயிகளின் கோரிக் கையை நிறைவேற்றும் வகையில் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட மு.க.அழகிரி, முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத் தார். இக் கோரிக் கையை ஏற்று, வைகை அணையில் இருந்து இன்று (1ம் தேதி) முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பெரியாறு பாசனப்பகுதியில் உள்ள இரு போக பாசன பரப்பாகிய 45,041 ஏக்கர் நிலங்களும், ஒருபோக பாசன பரப்பா கிய 85,563 ஏக்கர் நிலங்க ளும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன பரப்பாகிய 19,439 ஏக்கர் நிலங்களும் சேர்த்து மொத்தம் ஒரு லட் சத்து 50 ஆயிரத்து 43 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
விவசாயிகள் குறுகிய கால பயிர்களை நடவு செய்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் அடைய பொதுப்பணித் துறை, விவசாயத்துறை, வருவாய்த்துறையினருடன் ஒத்துழைப்பு நல்குமாறு கேட் டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பருவ மழை தவறி, பெரியாறு அணைக்கு போதுமான நீர் வரத்து வரவில்லையெனில் நீர் இருப்பை கணக்கில் கொண்டு முறைப்பாசனம் தேவைக்கேற்ப அமல்படுத்தப்படும்.
No comments:
Post a Comment