கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 16, 2010

மதுரையில் அ.தி.மு.க. கூட்டம் நடந்து முடிகிற வரையில் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுபவராக இருந்து விடுங்கள் முதலமைச்சர் கலைஞர் வேண்டுகோள்


மது ரையில் அ.தி.மு.க. கூட் டம் நடந்து முடிகிற வரையில் ஒரு கன்னத் தில் அடித்தால் மறு கன் னத்தை காட்டுகிற அகிம் சாவாதியாக இருக்க வேண்டும் என்று தொண் டர்களுக்கு முதலமைச் சர் கலைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதா வது:-

பெரியார் தந்த உறுதி

மதுரை நகரம் எனக் குப் புதிய நகரமல்ல. என் பொதுவாழ்வில் ஏறத் தாழ 70 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நகரின் தெரு முனைகளில் இயக் கக் கொடிகளை ஏற்றி வைத்து, அந்தக் கொடி உருவான வரலாற்றை விளக்கியிருக்கிறேன். மதுரை முத்து என்ற தன் மான இயக்கத் தளபதி யின் அரவணைப்போடு நான் கொடியேற்றிய இடங்களில், கொடியோர் சிலர் அந்தக் கொடியை மரத்தோடு வெட்டி எறிந்திருக்கின்ற காட்சி கள் இன்னும் என் கண் களை விட்டு அகலவில்லை; நெஞ்சத் திரையை விட்டு நீங்கவில்லை.அப்படி ஒரு எரிநெ ருப்பு போன்ற எதிர்ப்புக் கிடையேதான், என் பொதுவாழ்வு அரும்பி மலர்ந்து, அய்யா பெரி யார் தந்த உறுதியோடும், அறிஞர் அண்ணா தந்த அறிவுச் சுடரோடும் வளர்ந்து செழித்து; இருப தாம் அகவையில் பெற் றிருந்த எழுச்சியோடு இந்த எண்பத்தாறாம் அகவையிலும் உன்போன் றோரை என் உடன்பிறப் புகளாகப் பெற்று, இந்த திராவிடக் கலாச்சாரப் படையினை - இன உணர் வுச் சேனையினை நடத் திடும் பக்குவத்தை எனக்கு அளித்துள்ளது என் பதை எவரும் மறுத் திடார்!

உன்போன்றோர் என் பக்கம் இருக்கின்றீர்கள் என்ற பெருமிதத்திலும்; தமிழ்கூறும் நல்லுலகின் அறிஞர் பெருமக்கள், புலவரேறுகள் என்னை வாழ்த்தியிருக்கின்ற மகிழ்வோடும், ஆட்சிச் சக்கரத்தை இயக்குகின்ற வாய்ப்பினைப் பெற்று; அந்த வாய்ப்பை வள மார் தமிழ்நாட்டு மக்கள் மேலும் வலிவுபெறவும், பொலிவுபெறவும் பயன் படுத்தும் வகையில், தொடர்ந்து தொண்டாற் றியதால், நான் சார்ந் துள்ள இயக்கத்தினை என்றைக்கும் முடிவுக் குக் கொண்டுவர முடியா மல் போய்விடுமோ என எண்ணிடும் நச்சு நினைப் பினர் சிலர்; என்னையே இல்லாமல் செய்துவிட் டால் என்ன - என்கின்ற அளவுக்கு அணிசேர்ந்து ஆய்வுநடத்தி, அவர்கள் எண்ணம் ஈடேற, அதற் கான ஆயத்தப் பணிகளில் பலமுறை இறங்கியது போல், இம்முறையும் இறங்கியுள்ளனர்.

ஒருவனை வீழ்த்தக் குழிதோண்டி வைத்து விட்டு, ``அய்யோ, என்னை வீழ்த்தத் தோண்டிய குழியைப் பாரீர்!'' என்று நடுங்கிக் கதறும் நாட் டியப் பேரொளிகள், நடன மாதரசுகள் மலிந்து விட்ட நமது நாட்டு அரசியலில், அவர்களின் காட்டுக்கூச்சலைக் கேட்பதற்கும், ஏமாந்த சிலர் இருக்கத்தான் செய் கிறார்கள். இந்த உண் மையை உன் உள்ளத் திலே பதியவைத்துக் கொண்டு, இதோ நான் சொல்வதையும் கொஞ் சம் சிந்தித்துப்பார்!

எதிர்க்கட்சித் தலை வர் மதுரைக்குப் போகி றாராம்; பொதுக்கூட் டத்தில் பேசுகிறாராம்; அங்கே தி.மு.க.வினர் அந்தக் கூட்டத்தைக் கலைக்கவும், அவருக்கு ஆபத்து விளைவிக்கவும் திட்டமிட்டு, அதனை எச்சரிக்கையாக்கி ஏராள மான சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டியிருக் கிறார்களாம்; அதற்கு எதிரான சுவரொட்டி கள் அ.தி.மு.க.வினரால் ஆங்காங்கே ஆயிரக் கணக்கில் ஒட்டப்பட்டி ருக்கிறதாம்.

இந்த இரண்டுமே அரசியல் நாகரிகத்திற்கு அடியோடு எதிர்ப்பான செயல் என்பதற்காகவும், இவற்றின் காரணமாக இரு சாராரிடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவும், காவல் துறையினர் கண் விழிப்போடு அலைந்து திரிந்து அதற்கான தட யம் எங்கும் இருத்தலா காதென்றும்; அந்தத் தடயங்களுக்குக் காரண மானவர்கள் ஆளுங்கட் சியினராயினும், எதிர்க் கட்சியினராயினும் ஒரே விதமான குற்றச்சாட்டுக் கும், விசாரணைக்கும், தண்டனைக்கும் உரிய வர்களே ஆவார்கள் என்ற நிலைப்பாட்டுடன் சட்டப்படி நடவடிக் கைகள் எடுக்கத் தயங் காமல் இந்த அரசு செயல்படும்போது; இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இருக்கின்ற ஆத்திரக்காரர்கள் எவ ராயினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நல்வழி காண்பதும், நக ரின் - நாட்டின் அமைதி காப்பதுமே அரசுக்கு மாத்திரமல்ல; எதிர்க் கட்சிக்கும் ஏன், எல்லா கட்சிகளுக்கும் உரிய நடுநிலை இலக்கணமா கும்.

மதுரையிலே ஏதா வது சம்பவம் நடக்கக் கூடும் என்று அதைத் தடுக்க சி.பி.அய். விசா ரணை வேண்டும் என்று அ.தி.மு.க. கோரியது. அதற்காக உடனடியாக ஆணை வழங்கப்பட்டு; சி.பி.அய். நடவடிக்கை எடுக்கவும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் சி.பி.அய். அமைப்பு நட வடிக்கை எடுப்பதற்கு உள்ளாகவே, தமிழ்நாட் டுக் காவல்துறையை குற் றம் சொல்லியும், குறை கூறியும், தி.மு.க. அரசு மீது வீண் பழி சுமத்தி யும்; அதற்குப் பக்கபல மாக சில கட்சியினரை இணைத்துக் கொண்டு, சிலர் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடு கிறார்கள் என்றால் அதன் பொருள்தான் என்ன?

இப்படிப்பட்ட பிரச் சாரங்களால் பெருங் கூட்டம் சேர்க்க வேண் டிய நிலையில் எதிர்க் கட்சி இல்லை என்பதும்; அதன் வலிவும், மக்கள் ஆதரவும் எவ்வளவு என் பதும் நமக்குத் தெரிந் திருப்பதைப் போலவே; எதிர்க்கட்சித் தலைவர் களுக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கிடையே நம் மீது ஓர் அபவாதத்தைச் சுமத்தி அவர்கள் பெறப்போ கும் பயன் என்ன?

எதிர்க்கட்சியினர், வன்முறை வன்முறை என்று எச்சரிக்கைக் கூச் சல் போடுவது ஒரு வேளை இவர்களின் வன் முறை ஆயுதத்தை நம் மீது வீசுவதற்குத்தானோ என்று எண்ணிடாமல் இருக்க முடியவில்லை.

எனவே, மதுரையிலே அவர்களின் கூட்டம் நடந்து முடிகிற வரை யில், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன் னத்தைக் காட்டுகிற அகிம்சாவாதியாக இருக்க வேண்டும். அவர் கள் திட்டினால் உன் காதுகளுக்குத் தேனமுத மாக இருக்க வேண்டும். ``உன்னையே திட்டுகிறார் களே, வசை பாடுகிறார் களே, என்னால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடிகிறதா'' என்று கேட் பாயானால்; எனக்கும், உனக்கும் என்றைக்கும் நினைவிருக்கக்கூடிய அண்ணாவின் வாசகத்தை மறந்து விடலாமா? அது தானே, ``வாழ்க வசவா ளர்கள்!'' என்ற வாசகம்.

எழுபது ஆண்டுகால என்னுடைய பொது வாழ்க்கையில் என்னைத் தலைவரே, தலைவரே என்று மூச்சுக்கு முன் னூறு தடவை அழைத்த வர்கள், முதுகில் குத்திய துரோகிகள் ஆகிவிட்ட தையும் நான் அறிவேன். இதுநாள் வரையில் வசை பாடிக் களித்தோர் இன்று, கொள்கை இசைபாடி என்னை மகிழ்விப்பதை யும் நினைத்துப் பார்த் தால்; ``அரசியலில் எது வும் நடக்கலாம்'' என் பது அழித்து எழுதமுடி யாத ஆத்திச்சூடி ஆகி விட்டது; என்பதுதானே உண்மை!

இவ்வாறு முதலமைச் சர் கலைஞர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment