கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, October 28, 2010

என்எல்சி ஸ்டிரைக் வாபஸ் ஆகிறது - சுமுக தீர்வு ஏற்பட தொழிற்சங்கத்தினரிடம் முதல்வர் கருணாநிதி உறுதி


கடந்த 38 நாட்களாக நீடித்துக்கொண்டிருக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வருகிறது. சுமுக தீர்வு ஏற்பட தொழிற்சங்கத்தினரிடம் முதல்வர் கருணாநிதி உறுதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று நெய்வேலி தொழிலாளர்கள் 27.10.2010அன்று நடத்துவதாக இருந்த முற்றுகை போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 27.10.2010 அன்று நடக்கும் பேச்சுக்கு பின், போராட்டம் வாபஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள், பேராட்டத்திற்கு சுமுக தீர்வு காணக் கோரி முதல்வர் கருணாநிதியை 26.10.2010 அன்று தலைமைச் செயலகத்தில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் சந்தித்து பேசினார்கள்.
செ. குப்புசாமி, மு.சண்முகம் (தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்), வேல்முருகன், எம்.எல்.ஏ., பெருமாள் (பாட்டாளி தொழிற்சங்கம்), அன்பழகன், (ஒப்பந்தத் தொழிற்சங்கம்), சேகர், குப்புசாமி (ஏ.ஐ.டி.யு.சி.), சுகுமாரன், குப்புசாமி (சி.ஐ.டி.யு.) ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் கருணாநிதி பேசும் போது, ‘‘ஏற்கனவே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, தொழிலாளர்களுக்குக் கூடுதலாக நாளொன்றுக்கு ஸி40 ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சலவைப்படி மாதம் ஸி10லிருந்து ஸி25 ஆக உயர்வு, 8.33% போனசுடன் ஸி500 சிறப்புத் தொகை, ஸி300 மழைக் கோட்டுக்காக சிறப்புப் படி, நெய்வேலி வளாகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம், 31&10&2010க்குள் முதல்கட்டமாக 4,200 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் ஆக்கப்படுவார்கள்’’ என்று குறிப்பிட்டார்.
தொழிற்சங்க தலைவர்கள் கூறும்போது, ‘‘முன்பு உயர்த்தி அளிக்கப்பட்டுள்ள தினசரி ஊதியம் மேலும் உயர்த்தப்பட வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்க வேண்டும்” என்றனர். முதல்வர் கருணாநிதி, இது தொடர்பாக மத்திய அரசுடன் கலந்து பேசி, நல்லதொரு தீர்வு காண விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு, உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் மாலதி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக தொ.மு.ச. பேரவை தலைவர் செ.குப்புசாமி, பொது செயலாளர் மு.சண்முகம் கூறியதாவது:
ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி 68 சதவீதம் பேர் பணிக்கு திரும்பி விட்டனர். இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காணுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். இதில் தனிக் கவனம் செலுத்தி மத்திய அரசுடன் பேசி நல்ல முடிவு எடுப்பதாகவும் அதற்கு ஏற்றார் போல வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறுகையில், முதல்வர் உறுதி அளித்ததன் அடிப்படையில் நாங்கள் அனைத்துக் கட்சி தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்களுடன் பேசி 26.10.2010 அன்று மாலையில் முடிவை அறிவிப்போம்.’என்றார். சென்னையில் 27.10.2010 அன்று காலை 10 மணிக்கு நெய்வேலி இல்லத்தில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொள்கிறார்கள். இதில் சுமுக முடிவு ஏற்படும் என்றும், இதைத்தொடர்ந்த, போராட்டம் வாபஸ் பெறுவது அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment