கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 2, 2010

வன உயிரினங்கள் அழிந்தால் மனித குலமும் அழிந்துபோகும் - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்


வனங்களும், அதனை சார்ந்து வாழும் வன உயிரினங்கள் அழியும் ஆபத்து நம்மை சூழ்ந்து வருகிறது. இது மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்க காலத்தில் தமிழகத்தைச் சூழல் இயலின் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நமது முன்னோர் ஐந்தினை நிலங்களாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு சூழல்இயல் பகுதியும், அதற்கு தகுந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கொண்டவை.
இந்த இயற்கை வளம்&உணவு உத்தரவாதத்திற்கும், உடல் நலம் காப்பதற்கும் பேருதவியாக இருந்து வந்துள்ளன.
வனங்களையும், வன உயிரினங்களையும் பேணிப் பாதுகாக்கும் நோக்கோடு உலகத்திற்கு அகிம்சையின் வலிமையை உணர்த்திய காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2ம் நாள் முதல் ஒரு வாரம் வரை வன உயிரின வார விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மன்றம் 2010ம் ஆண்டினை உலக உயிரியல் பன்மை ஆண்டாக அறிவித்தது சிறப்பம்சமாகும்.
மக்கள் தொகை பெருக்கத்தால் இயற்கை தந்த கொடையான வனங்களும், அதனைச் சார்ந்து வாழும் வன உயிரினங்களும் அழியும் ஆபத்து நம்மை சூழ்ந்து கொண்டு வருகிறது. இது மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமானது.
இவற்றை பாதுகாப்பதற்கும் அதன் மூலம் மனித இனம் இயற்கையான வாழ்வை அனுபவிக்க அரசு பல வழிகளிலும் மேற்கொள்ளப்படும், ஆக்கப் பணிகளுக்கு கடமையுணர்ந்து செயல்பட அனைத்து தரப்பு மக்களையும் உளமாற வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment