மாற் றுத்திறனாளி அரசு அலு வலர்களுக்கு ஊர்திப்படி உயர்வு அளித்து முதல மைச்சர் கலைஞர் உத்தர விட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட் டுள்ள ஒரு செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலர்கள், உள்ளாட்சி நிறுவனங்க ளில் பணிபுரியும் அலுவ லர்கள், ஆசிரியர்கள், ஆசிரி யரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திற னாளி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட ஊர்திப்படி மாதம் 150 ரூபாய் என்பதை 1.6.2009 முதல் மாதம் 300 ரூபாயாக உயர்த்தி முதல் அமைச்சர் கலைஞர் ஏற் கெனவே ஆணையிட்டு, அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஊர்திப்படி 300 ரூபாய் என்பதை, 1.10.2010 முதல் மாதம் 1000 ரூபாயாக மேலும் உயர்த்தி வழங்கிட முதல் அமைச்சர் கலைஞர் நேற்று ஆணையிட் டுள் ளார். இந்த உத்தரவின் கார ணமாக, ஏறத்தாழ 10 ஆயி ரம் மாற்றுத்திறனாளிப் பணியாளர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 கோடியே 40 லட்சம் கூடுதல் செலவினம் ஏற் படும். மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment