திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டி திருவண்ணாமலையில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவிக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார். உடன் அமைச்சர் வேலு, சுகவனம் எம்பி, நகராட்சி தலைவர் திருமகன் மற்றும் நிர்வாகிகள்
அரசு திட்டங்களின் பயன் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்துள்ளதால், தி.மு.க மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலையில் 24.10.2010 அன்று மாவட்ட தி.மு.க சார்பில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. எம்.பி. வேணுகோபால், எம்.எல்.ஏக்கள், கு.பிச்சாண்டி, ஆர். சிவானந்தம், கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில், தி.மு.க முன்னோடிகள் 87 பேருக்கு பொற்கிழி, 87 பேருக்கு பைக், 870 பேருக்கு சைக்கிள், 8,700 பேருக்கு இலவச வேட்டி சேலைகள் ஆகியவற்றை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க வரலாற்றில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முக்கிய இடம் உண்டு. 1957ம் ஆண்டு தி.மு.க சந்தித்த முதல் தேர்தலில் இங்கிருந்து 4 எம்.எல்.ஏ.,க்களும் 1 எம்பியும் கிடைத்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தி.மு.க அணி சார்பில் நிறுத்தப்படுகிறவர்கள் வெற்றி பெற உறுதியேற்கும் நிகழ்ச்சியாகவே இது நடக்கிறது.
தி.மு.க. முன்னோடிகளுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் அது அவர்களின் உழைப்புக்கு ஈடாகாது. கட்சிக்காக பாடுபட்டவர்களை ஊக்கப்படுத்த, அவர்கள் இளைஞர்களை உற்சாகப்படுத்தி வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே, இதுபோன்று பொற்கிழி வழங்கப்படுகிறது.
முதல்வர் கருணாநிதியின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக, முறையாக சேர்கிறது. ஆட்சியில் உள்ளவர்கள் மக்களை சந்திக்க பயப்படும் நிலை இப்போது இல்லை. தி.மு.க ஆட்சி நிறைவேற்றியுள்ள திட்டங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது. அதன் பயனை மக்கள் அனுபவித்து கொண்டுள்ளனர். எனவேதான், தெம்போடு, தைரியத்தோடு மக்களை சந்திக்க முடிகிறது.
சில குறைகள் இருந்தாலும், அவற்றை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையை தி.மு.க. மீது மக்கள் வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை உள்ளவர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைக் கும் பணியை கட்சியினர் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment