கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 11, 2010

மாணவர், ஆசிரியர் நலனில் அரசு தனி அக்கறையுடன் செயல்படுகிறது - த்திய அமைச்சர் மு.க.அழகிரி


ஆசிரியர் நலனில் அரசு தனி அக்கறையுடன் திட்டங்களை நிறைவேற்றுகிறது என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்டத்தில் பிளஸ்&1 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்ட தொடக்க விழா மதுரை கேப்ரன்ஹால் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் காமராஜ் தலைமை வகித்தார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:
இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்துள்ளார். என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தொகுதியில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மதுரை மாவட்டத்தில் 22 ஆயிரம் சைக்கிள் இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இந்த பள்ளியில் மட்டும் 535 சைக்கிள் உள்பட இன்றைக்கு 3 ஆயிரத்து 500 மாணவ. மாணவிகளுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டம் மட்டுமல்ல மாணவ. மாணவிகளுக்கு ஏராளமான திட்டங்களை முதல்வர் கருணாநிதி வாரி வழங்கி வருகிறார். ஆசிரியர்களுக்கும் பல்வேறு சலுகை மற்றும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கல்வி மேம்பாட்டுக்காக மாணவ, மாணவிகள், ஆசிரியர் நலனில் அரசு தனி அக்கறையுடன் திட்டங்களை நிறைவேற்றி செயல்படுகிறது. இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.
மேயர் தேன்மொழி, டி.ஆர்.ஓ. தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, துணை மேயர் மன்னன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, மாவட்ட ஊராட்சி தலைவர் அசோக்குமார், சி.எஸ்.ஐ. திருமண்டில பதிவாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜ், செயலாளர் ஜோசப், பள்ளி தாளாளர் ஹென்றி ஆசீர்வாதம், தலமை ஆசிரியை லீலாமனேகரி பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து மதுரை ஆழ்வார்புரத்தில் நிறுவப்பட்டுள்ள மாதிரி நியாயவிலைக்கடையை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார். இதில் எலக்ரானிக் தராசு மூலம் அரிசி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அரசின் மலிவு விலையில் எண்ணெய், பருப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர், டி.ஆர்.ஓ, மற்றும் மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல் பங்கேற்றனர்.
அரசுக்கு சிறுபான்மையினர் ஆதரவு
இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் சி.எஸ்.ஐ. திருமண்டில பதிவாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜ் பேசும்போது “சிறுபான்மையினருக்கு இந்த அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. மு.க.அழகிரி உறுதுணையோடு திருமண்டிலம் சார்பில் பல் மருத்துவ கல்லூரி, 2 பிஎட் கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி மேற்படிப்பு போன்ற புதிய கல்வி நிறுவனங்களுக்கு அரசு அனுமதி கிடைத்தது. பல்மருத்துவ கல்லூரிக்கு தமிழக அரசின் ஆட்சேபனை இல்லாத ஆணையை முதல்வர் கருணாநிதி வழங்கி நமது பேராயரிடம் வழங்கினார். அரசுக்கும் முதல்வருக்கும் சிறுபான்மையினர் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்ற உறுதியை மத்திய அமைச்சர் அழகிரியிடம் அளிக்கிறோம்“ என்றார்.

No comments:

Post a Comment