கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

மின்வாரிய ஊழியருக்கு 20% போனஸ் ஒப்பந்த தொழிலாளருக்கு ஸி1,500 கருணைத் தொகை


தீபாவளியை ஒட்டி, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம், அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 18.10.2010 அன்று நடந்தது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் சி.பி.சிங் மற்றும் அதிகாரிகள், 16 தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
பின்னர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது:
மின்வாரிய ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். மின் வாரியத்தின் நிலைமை எல்லாருக்கும் நன்றாக தெரியும். தாங்க முடியாத அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 5 சதவீத லாபம் வந்தால்கூட நீங்கள் கேட்ட 25 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று கூறினேன்.
மின்வாரியத்தை இயக்குவதற்கு முதல்வர் கருணாநிதியிடம் ஸி1000 கோடியை பங்கு மூலதனமாக பெற்று செயல்படுத்தி வருகிறோம். நிதி நிலைமை கொஞ்சம் அதிகமானால்கூட தொழிலாளர்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்.
மின் உற்பத்தியை அதிகரிக்க, தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்களால் நிதி நிலைமை விரைவில் சீரடையும். மேட்டூர், வடசென்னை, வல்லூர் ஆகிய இடங்களில் அடுத்த ஆண்டு மார்ச்சில் 1700 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கும். இதன்பிறகு தமிழகத்தில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படும். கிராமப்புறங்களில் 2 மணி நேர மின்வெட்டு உள்ளது. அதை தவிர்க்க முயற்சி எடுத்து வருகிறோம்.
முதல்வர் கருணாநிதி உத்தரவுபடி தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு இந்த ஆண்டு 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். (போனஸ் 8.33 சதவீதம், கருணைத் தொகை 11.67 சதவீதம்) இதன்மூலம் 69,621 நிரந்தர தொழிலாளர்கள் பயன் பெறுவர். மேலும் 9,600 ஒப்பந்த தொழிலாளர்கள், 5,516 பகுதி நேர ஊழியர்களுக்கு ஸி1,500 கருணைத் தொகையாக வழங்கப்படும். இதன்மூலம் மின்வாரியத்துக்கு இந்த ஆண்டு ஸி60.75 கோடி கூடுதல் செலவாகும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
சுற்றுலா வளர்ச்சி கழகம் 20 சதவீதம் போனஸ்:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் 478 குருப் சி மற்றும் 1397904493 பணியாளர்களுக்கு, அவர்கள் பெறும் சம்பளம் ஸி10 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் போனஸ் வழங்குவதில்லை. இந்த விதியை தளர்த்தி, 2009&2010ம் ஆண்டிற்கான போனஸ் 20 சதவிகிதம் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு இதனால் ரூ.40.15 லட்சம் செலவாகும்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிதிநிலை கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னேற்றகரமாக இருப்பதால், 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட உள்ளது.
இலவச பம்ப் செட் திட்டம் ஜனவரியில் தொடங்கப்படும்
அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில், ‘’விவசாயத்துக்கு இலவச பம்ப் செட் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். மின்வாரியம் எடுத்த கணக்கெடுப்பின் படி, 19 லட்சம் பம்ப் செட் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 5 லட்சம் புதிய பம்ப் செட்டுகள். மீதியுள்ள 14 லட்சத்துக்கு அதிக திறன் கொண்ட பம்ப் செட்டுகள் வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல்வர் அத்திட்டத்தை தொடங்கி வைப்பார்" என்றார்.

No comments:

Post a Comment