முதலமைச்சர் கலைஞரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி. சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தி.மு.க-காங்கிரஸ் ஒரு வெற்றிக் கூட்டணி என்று தெரிவித்தார்.
முதல் அமைச்சர் கலை ஞரை 07.10.2010 அன்று கோபால புரத்தில் உள்ள அவரது இல்லத்தில், அகில இந் திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி. மரியாதை நிமித்த மாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது டாக்டர் காயத்ரிதேவி எம்.எல்.ஏ.வும் உடனி ருந்தார்.
பின்னர் வெளியில் வந்த ஜெயந்தி நடராஜன் எம்.பி. செய்தியாளர் களிடம் கூறியதாவது: முதலமைச்சரை நான் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். இச்சந்திப் பின்போது, தமிழகத் திலும், டில்லியிலும் உள்ள அரசியல் நிலைகள் குறித்தும் அவரோடு பேசினேன். தி.மு.க-காங் கிரஸ் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி. மக் கள் மனதில் நிலையாக இடம்பெறக்கூடிய அள விற்கு மத்திய அளவிலும், மாநில அளவிலும் பெரிய அளவிலே பணிகள், திட் டங்கள் நடைபெற்று வருகின்றன என்பதை மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவே, இது ஒரு வெற்றிக் கூட்டணி. அடுத்த தேர்தலிலும் இது வெற்றி அடைய உதவிட வேண்டுமென்று மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் செய் தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அவற் றுக்கு ஜெயந்தி நடராஜன் எம்.பி. அளித்த பதில் களும் வருமாறு:
கேள்வி: இலங்கை அகதிகள், தமிழர்கள் நிலை குறித்து அறிய சிறப்பு தூதர் அனுப்பப் பட்டார். அவரது அறிக்கை வந்துவிட் டதா?
பதில்: இலங்கைக்கு அனுப்பப்பட்ட சிறப்புத் தூதரின் அறிக்கை மத் திய அரசிடம் கொடுக்கப் பட்டிருக்கிறது. அது இன்னும் பரிசீலனை செய்யப்படாமல் உள் ளது. அதில் குறிப்பிடப் பட்டுள்ள விஷயங்கள் குறித்து, தமிழக முதல் வரோடு கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக் கப்படும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment