
2008-2009 ஆம் ஆண் டிற்குரிய குடியரசுத் தலை வரின் செம்மொழித் தமிழ் விருதுகளான தொல்காப் பியர் விருது, குறள் பீட விருது, இளந்தமிழ் அறிஞர் விருது ஆகிய வற்றிற்குரிய தேர்வுக்குழுக் கூட்டம், 20.10.2010 அன்று புனித ஜார்ஜ் கோட் டையில் உள்ள பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலக அரங்கில் செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் தமிழக முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர் வுக்குழு உறுப்பினர்களா கிய பேராசிரியர் மா.நன் னன், ஞானபீட விருதாளர் ஜெயகாந்தன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயர்கல்விப் பிரிவு இணைச் செயலாளர் டாக் டர் அனிதா பட்நாகர் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்குழுவினர் விரி வாகக் கலந்தாய்வு செய்து தொல்காப்பியர் விருது, குறள்பீட விருது, இளம் தமிழ் அறிஞர் விருது ஆகிய விருதுகளுக் கான அறிஞர்களின் பெயர் களைத் தேர்வு செய்தனர். பெயர்கள் பரிந்துரை இப்பெயர்கள் குடி யரசுத் தலைவரின் ஒப்பு தலுக்காகப் பரிந்துரை செய்து அனுப்பி வைக் கப்படும். அதனைத் தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆட்சி மன்றக் குழுவின் முதல் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயர்கல்விப் பிரிவு இணைச் செயலாளர் டாக்டர் அனிதா பட் நாகர்ஜெயின், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிதி ஆலோசகர் நவீன்சோய், முனைவர் அய்ராவதம் மகாதேவன், பேராசிரியர் முனைவர் ஏ.ஏ.மணவாளன், பேரா சிரியர் முனைவர் எஸ்.என். கந்தசாமி, பேராசிரியர் கே.நாச்சிமுத்து, பேராசிரி யர் முனைவர் இராதா செல்லப்பன், தமிழ் வளர்ச்சித் துறைச் செய லாளர் இரா. சிவகுமார், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பேரா சிரியர் கரு.அழ. குண சேகரன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கூ.வ.எழிலரசு, செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநரும் உறுப்பினர் செயலருமான பேராசிரியர் எஸ். மோகன், பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க. இராமசாமி ஆகியோர் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றிக் கலந்தாலோசனை செய்யப் பட் டது. பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் புனித ஜார்ஜ் கோட் டையில், முன்னர் சட்டப் பேரவை செயல்பட்டு வந்த மன்றத்தில், தற்போது இயங்கி வரும் செம் மொழித் தமிழாய்வு நூல கத்திற்கு, பாவேந்தர் செம் மொழித் தமிழாய்வு நூல கம் எனப் பெயர் சூட்டு வதென்ற தமிழக அரசின் தீர்மானத்தை ஆட்சி மன்றக் குழு ஒருமனதாக ஏற்றுக் கொண்டது. முதலமைச்சர் தமது சிறப்புரையில், வெளி நாட்டிலிருந்து ஆய்வா ளர்கள் இங்கு வந்து செம் மொழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள் ளவும்; தமிழகத்திலுள்ள ஆய்வாளர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று செம்மொழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள் ளவும்; தேவைப்படும் உதவி களை மத்திய அரசு செய்து தரவேண்டும் என்னும் தமது விருப்பத்தை வேண் டுகோளாக முன்வைத்தார். மத்திய அரசு சார்பில் கலந்துகொண்ட மனித வள மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளர், இந்த வேண்டுகோளை மத்திய அரசு பரிவுடன் கவனித்து, ஆவன செய்யுமென்றும்; இச்செம்மொழி நிறுவனத் தின் திட்டப்பணிகள் எல்லாவற்றிற்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு நல்கும் என்றும் உறுதி கூறினார். தற்போது சென்னை காமராஜர் சாலையிலுள்ள பாலாறு இல்லத்தில் இயங்கி வரும் செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட் டதும், பாலாறு இல்லத் தை மீண்டும் பொதுப் பணித் துறையிடமே ஒப் படைத்து விடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. 10 ரூபாய் குத்தகை புனித ஜார்ஜ் கோட் டையில் இயங்கிவரும் பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகமும் அதனைச் சுற்றியுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனப் பயன்பாட் டிற்குரிய வளாகமும் ஆண் டொன்றுக்குப் பெயரளவு குத்தகைத் தொகையாக பத்து ரூபாய்க்கு அனு மதிக் கப்பட்டுள்ளனஎன்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும், இந்நிறுவனம் தமிழகத் தோடு மட்டும் அமைந்து விடாமல், உலக ளாவிய நிலையில் உயர்ந் தோங்கித் தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம் முதலியவற் றைக் கொண்டு செல்லும் பெரும் உயராய்வு மய்ய மாகச் சிறப்புறச் செயலாற் றும் எனவும் கூறினார். தொடக்கத்தில், நிறு வனத்தின் இயக்குநர் பேரா சிரியர் மோகன் வரவேற் புரையாற்றிட, பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க. இராமசாமி, நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார். |
No comments:
Post a Comment