சென்னையை உலகத்தர நகரமாக மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் `சென்னை-2020' என்ற கருத்தரங்கு 19.10.2010 அன்று நடந்தது. இதில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு `சென்னை-2020'க்கான சி.டி.யை வெளியிட்டார். விழாவில் அவர் பேசிய தாவது:-
85 லட்சம் மக்கள் தொகையுடன் இந்தியா வின் 4-ஆவது பெரிய நகரமாக சென்னை விளங் குகிறது. ஆட்டோ மொபைல், எலெக்ட்ரா னிக்ஸ், ஜவுளி, தோல் பொருள்கள் உற்பத்தி யின் பெரிய மய்யமாக வும், மென்பொருள் உற் பத்தியில் முன்னணி மய்ய மாகவும் சென்னை திகழ் கிறது. சுகாதாரம் மற்றும் கல்வி வசதியிலும் மிக முக்கிய இடமாக விளங் குகிறது.
மும்பை, டில்லி போன்ற மற்ற பெரிய நகரங்களைவிட சென்னை இந்த ஆண்டு இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது என்று அமெரிக்க பத்திரிகை யான `போர்ப்ஸ்' குறிப் பிட்டுள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக சென்னை இந்தியாவின் இரண்டாவது பெரிய பொழுதுபோக்கு மய்ய மாகவும் இருந்து வரு கிறது.
தமிழக அரசு சென் னையை உலகத்தர நகர மாக மாற்றுவதற்கு பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 45 கிலோ மீட்டர் நீள முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சமீபத் தில் அரசு வண்ணாரப் பேட்டை முதல் விம்கோ நகர் வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இதில் 9 ரயில் நிலையங் கள் கூடுதலாக சேர்க்கப் பட்டுள்ளன. இந்த திட் டம் 2015 இல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கூடுதலாக 11 மேம்பாலங் களை கட்டி வருகிறது. வேகமாகவும், சுலபமா கவும் பயணிக்கும் வகை யில் உள்வட்ட பறக்கும் சாலை அமைக்கவும் அரசு முடிவெடுத்துள் ளது.
சுற்றுச்சூழல் மேலாண் மைக்கு அரசு மிக முக்கி யத்துவம் கொடுத்து வரு கிறது. மெரினா கடற் கரையும், பல நகர பூங் காக்களும் மேம்படுத்தப் பட்டுள்ளன. அடையார் கழிமுகம் `அடையார் சுற்றுச்சூழல் பூங்கா'வாக தரம் உயர்த்தப்பட்டுள் ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக் கப்பட்ட பகுதியாக அறி விக்கப்பட்டுள்ளதோடு அந்தப் பகுதியை மீட்ப தற்கும் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. அண்ணா மேம்பாலம் அருகே 22 ஏக்கர் பரப் பில் விதவிதமான தாவ ரங்களை கொண்டு உல கத்தரத்திலான தோட்டக் கலை பூங்கா அமைக் கப்பட்டு வருகிறது.
சென்னையின் தற் போதைய குடிநீர் தேவை தினமும் 650 முதல் 700 மில்லியன் லிட்டர் ஆகும். குடிநீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய் யும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் சென்னை நகருக்கு தேவைப்படும் 15 டி.எம்.சி. குடிநீருக்கான நீராதாரங்களை தமிழகத் தில் கண்டறிய ஆலோ சனைக்குழு அமைக்கப் பட்டுள்ளது. சென்னை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய தேவையான நட வடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
2020 இல் சென்னை யில் விமான பயணி களின் எண்ணிக்கை 2.76 கோடியாகவும், விமான சரக்கு போக்குவரத்து 10.4 லட்சம் டன்னாகவும் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் இந்திய விமான நிலைய ஆணையம், உள் நாட்டு முனையம், சரக்கு வளாகம் ஆகியவற்றை கட்டவும், சர்வதேச முனையத்தையும், இரண் டாவது ஓடுபாதையை யும் விரிவாக்கம் செய்ய வும், அடுக்குமாடி கார் பார்க்கிங் வசதியை ஏற் படுத்தவும் திட்டமிட் டுள்ளது. இதுமட்டு மின்றி வான்வெளி போக் குவரத்து பூங்கா (ஏரோ பார்க்) அமைக்கவும், 2020-க்குள் கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக் கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் நிதி நகரம், விளையாட்டு நகரம், ஊடக நகரம் ஆகிய வற்றை அமைக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளர்ச்சிகள் வரவேற்கப்படும் அதே சமயம் பல பிரச்சினை களும் உருவாகிறது. ஆனா லும் உலகத்தரத்திலான அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை இந்த அரசு உருவாக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.
- இவ்வாறு மு.க.ஸ்டா லின் பேசினார்.
விழாவில், பெட்ரோ லியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரிய தலைவர் எல். மான்சிங் பேசும்போது, ``குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்தை இந்திய அரசு தொடங் கியுள்ளது. இதில் காக்கி நாடா - சென்னை 2012 ஆம் ஆண்டும், சென்னை - தூத்துக்குடி 2012 ஆம் ஆண்டும், சென்னை - பெங்களூரு - மங்களூரு 2013 ஆம் ஆண்டும், கொச்சி - பெங்களூரு - மங் களூர் 2012 ஆம் ஆண்டும் முடிவடையும். இந்த 4 குழாய் திட்டங்களும் தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்வதாக இருக் கும். தமிழகத்தில் சென்னை உள்பட 25 நகரங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோக மய்யங்களும் அமைக்கப்படவுள்ளது'' என்றார்.
No comments:
Post a Comment