கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, October 5, 2010

மதுரையில் ரூ.85 கோடியில் மார்க்கெட்: மு.க.அழகிரி


மதுரையில் நவீன் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நிரந்தர காய்கறி மார்க்கெட் ரூ.85 கோடியில், சுமார் 27 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமையவுள்ளது என, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மதுரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்போது, பொதுமக்களை சந்திக்கின்ற வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் மிகவும் நெருக்கடியான இடத்தில் அமைந்திருந்த காய்கறி மார்க்கெட்டினை மாற்றி, மாற்று இடத்தில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய காய்கறி மார்க்கெட் அமைத்து தருவேன் என வாக்குறுதி அளித்திருந்தேன்.

நான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு மதுரை மாவட்டத்தில் உள்ள தென்பகுதி விவசாயிகளுக்காகவும, வியாபாரிகளுக்காகவும், நுகர்வோர்களுக்காகவும், சுகாதாரமான காற்றோட்டமான அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய மார்க்கெட்டினை அமைத்து தரவேண்டும் என, முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

எனது கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்த முதல்வர் கருணாநிதி, சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டதன் பேரில், தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.85 கோடி மதிப்பீட்டில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கும் பூ மார்க்கெட்டிற்கும் இடையில் உள்ள சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நிரந்தர நவீன காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கு முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இதற்காக தற்போது ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டு இதன் கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கப்பட்டு வரும் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படவுள்ளது. மேலும் இப்பணிகள் முடிப்பதற்காக மீதமுள்ள ரூ.55 கோடியும் விரைவில் ஒதுக்கப்படவுள்ளது.

இதனால் தென் மண்டல விவசாயிகளின் நீண்டநாள் கனவாகிய நவின தொழில்நுட்பங்களுடன் கூடிய காய்கறி மார்க்கெட்டின் மூலம் ஒரே இடத்திலிருந்து காய்கறி மற்றும் பழங்களை சேகரிப்பு செய்யலாம்.

இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்யலாம். நுகர்வோர்களுக்கு தரமான காய்கறி மற்றும் பழங்கள் கிடைப்பதுடன் விவசாயிகளுக்கும் நல்ல விலைக் கிடைக்கும். வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. குளிர்சாதன சேமிப்பு வசதி இதுபோன்ற நவீன தொழில்நுட்பத்துடன் காய்கறி மார்க்கெட் அமையவுள்ளது என கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment