கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, October 15, 2010

மு.க.அழகிரிக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு


மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, மாநகர போலீஸ் கமிஷனர் பால சுப்பிரமணியனிடம் மதுரை மாவட்ட திமுகவினர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

மதுரையில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் வேண்டுமென்றே தி.மு.க.வினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் கெட்ட எண்ணத்தோடும் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும் பல்வேறு அச்சுறுத்தும் சுவரொட்டிகளை ஒட்டி ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், வருகிற 18 ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு எந்த மந்திரியும் தொகுதிக்குள் நுழைய முடியாது என எச்சரித்துள்ளார்.

அவரது எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு முன்னாள் அமைச்சர்களான பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மற்றும் கட்சி முன்னணி பிரமுகர்கள் பல நாட்களாக மதுரையில் முகாமிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மதுரையில் கலவரத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் உள்ள மதுரையில் திட்டமிட்டு வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கை கெடுக்க பார்க்கிறார்கள்.

அவர்களுக்குள்ளேயே அசம்பாவிதங்களை ஏற்படுத்திக் கொண்டு அப்பழியினை தி.மு.க.வினர் மீது போட சதி செய்து வருகிறார்கள். எனவே வருகிற 18 ந் தேதி மதுரைக்கு வரும் அனைத்து வாகனங்களையும், மதுரையில் உள்ள அனைத்து விடுதிகளையும் கடுமையாக சோதனை போட வேண்டும். மேலும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிவரும் முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகளின் செயல்களை போலீசார் தீவிரமாக கண் காணிக்க வேண்டும்.

இத்தகைய செயல்களால் மதுரை மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர். எனவே

முன்னாள்

அமைச்சர்கள் மீதும், சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மக்களின் அச்சுறுத்தல்களை போக்கும் வகையில் மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு முதல்வர் கருணாநிதி, போலீஸ் டி.ஜி.பி., உள்துறை செயலாளர் ஆகியோருக்கும் பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment