முதல்வர் கருணாநிதியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் நேற்று (16.10.2010) சந்தித்தனர். சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
முதல்வர் கருணாநிதியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, நேற்று (16.10.2010) சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா,
இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரண உதவி வழங்கப்படுவதைப் போல், தொழிலில் நலிவு அடையும் சிறு வியாபாரிகளுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 1 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த வரம்பை சிறு வியாபாரிகளுக்கு 300 யூனிட்டாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம் என்றார்
No comments:
Post a Comment