இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் 2006 முதல் எந்த நிலையிலும் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றாலும், போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருகின்றன என்றாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக முதல்வர் கருணாநிதி அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனசும், 11.67 சதவீத ஊக்கத் தொகையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இதன் அடிப்படையில் இந்த ஆண்டும் 1 இலட்சத்து 27 ஆயிரத்து 714 நிரந்தரத் தொழிலாளர்களுக்கு, 8.33 சதவீத போனசும், 11.67 சதவீத ஊக்கத் தொகையும் வழங்கிடவும், 17 ஆயிரத்து 779 பதிலிப் பணியாளர்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் போனஸ் வழங்கிடவும், முதல்வர் கருணாநிதி இன்று (15.10.2010) ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக அரசுக்கு 99 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவாகும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment