தமிழக முதல்வர் டாக்டர் கருணாநிதியை லண்டன் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் டாக்டர் யூசுப் மரியாதை நிமித்தம் நேற்று (16-10-2010) சந்தித்தார்.
முதல்வர் கருணாநிதியிடம் ஏழைகளுக்கும் உயர் மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களின் உயிர் காக்கும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழையெளியோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதையும்,
108 ஆம்புலன்ஸ் இலவச சேவை மூலமாக கிராமப்புற-நகரப்புற மக்கள் பலர் உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று பலனடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டி தமிழக அரசின் மக்கள் நலன் காக்கும் திட்டங்களைப் பாராட்டிய டாக்டர் யூசுப், மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள் பலன் பெறும் வகையில், 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 5 ஆண்டுகளுக்கான எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்புக்குரிய அனைத்து மருத்துவப் புத்தகங்கள் இரண்டு படியினை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.
அப்போது துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment