சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில், 27.10.2010 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான ரங்கராஜன், சிஐடியு பொதுச்செயலாளர் சவுந்தராஜன் ஆகியோர் சென்றனர். சுமார் அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்பின் போது பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன்,
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்து, முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினோம். என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சனைகள் பற்றி பேசினோம். அதில் சுமூக தீர்வு எட்டப்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம்.
மேலும் தமிழகத்தில் தொழில் அமைதி ஏற்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம். பொதுவாகவே தமிழகத்தில் தொழில் அமைதியை ஏற்படுத்த தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சட்டத்தை அரசு உடனடியாக கொண்டு வரவேண்டும் என்பதை கேட்டுக்கொண்டோம். இவற்றையெல்லாம் பரிசீலிப்பதாக முதல்வர் கருணாநிதி உறுதி அளித்தார்
No comments:
Post a Comment