கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, October 28, 2010

திமுகவினர் யாரையும் இழித்து பழித்து பேசும் இழிகுணம் கொண்டவர்கள் அல்ல -


லயோலா கல்லூரியும், பிரான்ஸ் நாட் டில் உள்ள ஈகாம் கல்வி நிறுவனமும் இணைந்து சென் னையில் லயோலா ஈகாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியை தொடங்கியுள்ளது. இதன் தொடக்கவிழா நேற்று (27.10.2010) மாலை நடந்தது.
விழாவுக்கு, முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். முன்னதாக அவர் கல்வெட்டை திறந்து வைத் தார். பின்னர் அவர் பேசியதாவது:
வாடிகன் நகரத்தில் போப் ஆண்டவர் சன்னிதானத்தில் காணும் உணர்வு லயோலா கல்லூரியில் நுழையும் போது ஏற்படுகிறது. அறிவார்ந்த அன்புள்ள இடமாக இதை கருதுகிறேன். அவர்களின் நடவடிக்கை, அமைதி, அன்பு, அருட்செல்வத்தால் இந்த கல்லூரி அந்த புகழை எய்துகிறது. அந்த கல்லூரி சார்பாக பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈகாம் கல்வி நிறுவனம் கடந்த 100 ஆண்டுகளாக பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பொறியியல் கல்வியை வழங்கி வல்லுனர்களை உருவாக்கி வருகிறது. அதேபோல 200 ஆண்டுகளாக லயோலா கல்லூரி கலை அறிவியல் கல்வியை வழங்கி தலைசிறந்த மாணவர் களை உருவாக்கி வருகிறது.
இந்த கல்லூரியில் 30சதவீத மாணவர்கள் தாழ்த்தப்பட்ட, ஏழை சிறுபான்மை மாணவர்கள் என்பது போற்றத்தக்கது. தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு இந்த நிறுவனம் ஆற்றி வரும் தொண்டை போற்றுகிறேன். தமிழக அரசு எந்த அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு துணை புரிந்து வருவதை இங்கே கூறினார்கள். என வேதான் எங்கள் ஆட்சிக்கு ‘சிறுபான்மை ஆட்சி’ என்று ஒரு பட்டம் கூட உண்டு. அதை நான் பெருமையாக கருதுகிறேன். மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் அரசு இது என்று நான் கூறுவேன். இந்த அரசை மாற்ற வேண்டும் என்று எண்ணுகிற, மாற்றியே தீருவோம் என்று சபதமிட்டு இருப்பவர்களுக்கு மத்தியில் நான் கூறுவது என்னவென்றால், இந்த ஆட்சி மாறினாலும், மாற்றினாலும், சபதம் நிறைவேறினாலும் ஒன்றை மாற்ற முடியாது.
இந்த அரசு ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆட்சியை மாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றாலும் பெற முடியாமல் போனாலும் நாங்கள் என்றும் உங்களோடு இருப்பவர்கள். உங்களுக்காக பணிபுரிபவர்கள். அதற்கு அரசு என்ற அங்கீகாரம் தேவையில்லை. நாங்கள் அந்த உணர்வில் உங்களுக்காக இருப்பவர்கள்.
எங்களை வீழ்த்த முயலுபவர்கள் நாங்கள் சிறுபான்மை மக்களுக்காக பாடுபடுகிறோம் என்றால் அவர்களின் ஆதரவை இழக்க நேரிடும். எனவே எங்களுக்கு மத நல்லிணக்கம், மத வேறுபாடு களைந்த மனிதநேயம் தேவை என்று அதற்காக பாடுபடுவர்கள் நாங்கள். ஸ்ரீரங்கத்தில கட்டிய கோயில் என்றாலும் அயோத்தியில் ராமர் ஆலயம் என்றாலும் இடிக்கப்பட்ட பாபர் மசூதி என்றாலும் சரித்திரத்தில் மாற்ற முடியாத ஒன்று. எங்கள் ஆட்சி மாநில தேவைகள், உரிமைகள், மக்கள் நன்மை, முன்னேற்றம் ஆகியவற்றுக்காக எங்கள் கட்சி பெரியாரால் தொடங்கப்பட்டு அண்ணாவால் வழிநடத்தப்பட்டு எங்களால் பின்பற்றப்பட்டு உங்களால் ஆதரிக்கப்படும் இயக்கம்.
நாங்கள் கட்டிக் காத்து வரும் பண் பாட்டை புண்படுத்த முடி யாது. எங்களின் விரோதிகள் அறிவாளிகள் என்றால், எங்களின் பகைவர்கள் அறிஞர்கள் என்றால் தலைவணங்குபவர்கள் நாங்கள்.
எங்களின் எதிரிகள் தியாகி என்றால் மதிப்பவர்கள் நாங்கள். இன்று நான் பழைய கவிதைகளை புரட்டிக் கொண்டிருந்தேன். நேரு மறைந்த போது நான் எழுதிய கவிதையை படித்தேன். நேரு குடும்பத்திற்கும் இந்த இயக்கத்துக்கும் பகை இருப்பது போல சில புல்லுருவிகள் கதை கட்டி விடுகிறார்கள். நேரு அல்லது இந்திராகாந்தி குடும்பத்தாருடன் எங்களுக்கு அரசியல் ரீதியாக வேறுபாடு இருக்கலாம். ஆனால் யாரையும் இழித்து பழித்து பேசும் இழிகுணம் படைத்தவர்கள் அல்ல திமுகவினர். இன்றுள்ள சூழலுக்காக அல்ல 1970ல் நான் எழுதிய கவிதை இது. (கவிதையை படித்தார்) இன்று அந்த குடும்பத்துக்கும் எங்களுக்கும் இடையே பகையை மூட்டி அரசியலில் மீன்பிடிக்க சிலர் கருதினாலும் நாள் தோறும் அறிக்கை, கட்டுரை, விதண்டாவாதம் செய்தாலும் அந்த குடும்பத்தார் சோனியாகாந்தி உள்ளிட்ட அனைவரும் இந்த கவிதையை படித்துப் பார்த் தால் இன்றுள்ள நிலைக்காக அல்ல. அன்று நேருவை நாம் இழந்த போது என்ன உணர்வு பெற்றிருந்தோமோ அந்த உணர்வு இன்னும் நம் உள்ளத்தில் இருக்கிறது.
அந்த குடும்பத்துடன் அரசியல் ரீதியாக பல எதிர்ப்புகளை காட்டியதுண்டு. கருப்பு கொடி காட்டினாலும் கன்னியம் தவறியதில்லை. கன்னியம் தவறி, நன்முறை தவறி, வன்முறை தலைதூக்கும் என்று யாராவது கருதினால் அப்படி சிண்டு முடியும் யாரும் வெற்றி பெற முடியாது. நாம் பெறுகிற வெற்றி, தலித் மக்கள் சிறுபான்மை மக்கள் உங்களின் அன்பு, அறிவு பெறுகிற வெற்றியாகும். அப்படிப்பட்ட வெற்றியை பெற நாம் இங்கு கூடியிருக்கிறோம்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
விழாவுக்கு வந்தவர்களை கல்வி நிறுவன இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் வரவேற் றார். இயேசு சபை பனித்தல தலைவர் விக்டர் சேஷா, பிரான்ஸ் நாட்டு ஈகாம் கல்வி நிறுவன இயக்குனர் மார்க் ஜெனி யூட், துணை இயக்குனர் ஜோ அருண், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் மத்திய ஜவு ளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன், தமிழக அமைச்சர் பொன்முடி ஆகியோர் பேசினார்கள்.
கட்டிட கலை நிபுணர்களுக்கு தயாநிதிமாறன் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். முடிவில் கல்லூரி முதல்வர் ஜோஸ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment