
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தாயாரான இவர், திரைப்பட தணிக்கைத் துறை, அகில இந்திய வானொலி போன்றவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். அளவற்ற அருளாளர் என்ற இஸ்லாமிய நுலை எழுதிய முதல் இந்து பெண்மணி என்ற புகழையும் பெற்றவர்.
அண்மையில் தமிழக அரசு இவருக்கு பாரதியார் விருது வழங்கி கவுரவித்தது. சிலேடைகளை கவிதைகளில் புகுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். சிலேடைச் செல்வராகத் திகழ்ந்த கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண்டு, தமிழ் மேடைகளில் கவிதை முழக்கமிட்டவர்.
சௌந்தரா கைலாசம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
என் தலைமையில் நடைபெற்ற எத்தனையோ கவியரங்கங்களில் அற்புதக் கவிதைகள் பாடியவர் சௌந்தரா கைலாசம் அம்மையார் அவர்கள்.
அருந்தமிழ் ஆற்றல் - ஆன்மீகப் பற்று இரண்டையும் இரு விழிகளாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர். அவரது மறைவு நம் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதைப் போன்ற துயரத்தை என் போன்றாருக்கு அளித்துள்ளது என, முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment