கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, October 29, 2010

எத்தனை சக்திகள் ஒன்று திரண்டாலும் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியாது - முதல்வர் கருணாநிதி பேச்சு



தென் சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று (28.10.2010) நடந்தது.
ராமநாதபுரம், கோவை ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து நேற்று (28.10.2010) தென் சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கலைஞர் அரங்கில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் துரைமுருகன், பரிதிஇளம்வழுதி மற்றும் எம்.பி.க்கள் கனிமொழி, வசந்தி ஸ்டான்லி, ஜின்னா, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் சற்குணபாண்டியன், ரகுமான்கான், மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், சைதை கிட்டு, பெ.வீ.கல்யாணசுந்தரம், கு.க.செல்வம் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்த கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இந்த கூட்டம் எப்படி வாக்குகளைப் பெறுவது என்பதற்கு மாத்திரம் கூட்டப்பட்ட கூட்ட அல்ல. கட்சியை கடந்த காலத்திலே எப்படி வளர்த்தோம்; இப்போது எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் கூட்டப்பட்ட கூட்டம். வாக்குகள் மட்டும் முக்கியமல்ல, தேர்தல் வெற்றி மாத்திரம் குறிக்கோள் அல்ல. தி.மு.க. ஒரு சுய மரியாதை இயக்கம். நீதிக் கட்சியினுடைய இயக்கம். பெரியார், அண்ணா தலைமையில் சமூக நீதிக்காக இன்றளவும் போராடுகிற மனப்பக்குவத்தைப் பெற்றுள்ள நாம் தேர்தலுக்காக மாத்திரம் இங்கே கூடிப் பேசுகிறோம் என்று எண்ணினால் கொள் கைகளை, லட்சியங்களை மறந்து விட்டோம் என்றுதான் பொருள்.
இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற எல்லாவிதமான சவால்களையும் சமாளிக்கக்கூடிய திறன் திமுகவுக்கு இருக்கிறது. நிச்சயமாக இந்தத் தேர்தலில் எத்தனை சக்திகள் ஒன்று திரண்டு வந்தாலும், எத்தனை பேர் அணிவகுத்து நின்றாலும், தி.மு.க.வை வீழ்த்த முடியாது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் அத்தகைய ஒரு சறுக்கல் ஏற்படுமானால்; கடந்த காலத்திலே தமிழ் மக்களுக்காக, திராவிட மக்களுக்காக ஆற்றிய, ஆற்றி வருகிற சாதனைகள் வீண் தானா? என்று கேட்டு வருந்த நேரிடும்.
இவ்வளவு செய்தும் மக்கள் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லையே என்று எண்ணினால், அந்த மக்களுக்குத் தொடர்ந்து நாம் ஆற்ற வேண்டிய காரியங்களை ஆற்றாமல் இருந்து விடுவோமா? என்னுடைய ஆசையெல்லாம் மக்களுக்குத் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதுதான். அவர்களுக்குத் தேவையான காரியங்களை ஆற்ற வேண்டும் என்பதுதான். என்ன தொய்வு ஏற்பட்டாலும், கவலைப்படாமல் மக்களுக்காக நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். அந்த ஒரு லட்சியத்திற்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு தி.மு.க. தோழனும், உடன்பிறப்பும் என் மதிப்பிற்குரியவர்கள், மரியாதைக்குரியவர்கள்.
அந்த வகையில் நீங்கள் எப்படிப் பணியாற்றப் போகிறீர்கள்? எப்படிக் குரல் கொடுத்திருக்கிறீர்கள்? என்பதை அறிந்து கொள்ளவும் யோசனைகளைச் சொல்லவும் தான் இந்த கூட்டம். என்னதான் நீங்கள் இங்கே உறுதி எடுத்துக் கொண்டாலும், வெற்றி பெற்றே தீருவோம் என்று சொன்னாலும், உங்களிடத்திலே உள்ள ஒற்றுமை கெட்டிப்படவில்லை என்றால், அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாது.
தி.மு.க. வரலாற்றில் எத்தனையோ மேடு பள்ளங்கள். எத்தனையோ வீழ்ச்சிகள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது நான் ஒருவன்தான் தேர்தலிலே வெற்றி பெற முடிந்தது. மற்ற அனைத்து இடங்களில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் நம்முடைய வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்கள் தோற்றுப் போன நிலை.
அந்த வீழ்ச்சிக்குப் பிறகு இந்த கட்சி உருப்படுமா? மீண்டும் எழுமா? எழுந்து மக்கள் பணி ஆற்றுமா? தி.மு.க. என்ற பெயர் நிலைத்திருக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுந்த நேரத்தில், இன்றைக்கு உலகமே வியக்கத்தக்க அளவில் நாம் உயர்ந்து நிற்கிறோம். அதற்கு நீங்களும், உங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புக்களும் தந்த அயராத உழைப்புதான் காரணம். அப்படிப்பட்ட உழைப்பை நீங்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறீர்கள்.
ஒருசில இடங்களிலே ஒற்றுமையின்மைக்கு காரணம், குழு மனப்பான்மைதான். எந்த வட்டத்திலாவது இரண்டு குழுக்கள் இருக்குமானால், அந்தக் குழுக்கள் எல்லாம் முன்னேற்றத்தை அழிக்கிற புழுக்கள். குழு மனப்பான்மையை அகற்றினால்தான், ஒற்றுமையை நிலை நாட்டினால்தான் தேர்தலில் மாத்திரமல்ல, திமுக ஒரு கொள்கைக் கூடாரம் என்பதை எடுத்துக்காட்ட முடியும்.
குழு மனப்பான்மையை ஒதுக்கி வைத்துவிட்டு, எல்லோரும் ஒன்று, எல்லோரும் தி.மு.க, எல்லோரும் அண்ணாவின் தம்பிகள், எல்லோரும் இந்தக் கூடாரத்திலே உள்ளவர்கள்தான் என்ற உணர்வோடு செயல்பட்டால் தான், ஜெயலலிதா அல்ல; ஜெயலலிதாவோடு 100 பேர் திரண்டு வந்தாலும், தி.மு.க.வை யாராலும் வெற்றி பெற முடியாது. வீழ்த்த முடியாது.
ஆகவே, இந்த இயக்கத்தில் குழுக்களே இல்லை, கோஷ்டிகளே கிடையாது என்ற நிலைதான் உயர்ந்த நிலை. அநேகமாக கோஷ்டிகள் இல்லாத கட்சிகள் தமிழ்நாட்டில் கிடையாது. நாம் மாத்திரம் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். நாம் கோஷ்டிகள் இல்லாத காரணத்தினால்தான், இன்றைக்கு கூட்டணியினுடைய பிரதான கட்சியாக இருக்க முடிகிறது. இன்றைக்கு ஆளுங்கட்சியாக விளங்க முடிகிறது. ஆகவே, கோஷ்டிகள் இல்லாத நிலையை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும்.
அண்ணாவிற்குப் பிறகு நான் முதலமைச்சராக இருந்தேன். அப்போது மாநகராட்சி மன்றத்தைப் பற்றிய புகார்கள் எழுந்து, அதற்காக ஒரு கமிட்டி போடப்பட்டது. சட்டசபையிலே ஹண்டே பேசுகிறார். அவர் ஊழல்களை அடுக்கடுக்காகச் சொன்னபோது, முதலமைச்சராக உட்கார்ந்திருந்த நான் எழுந்து, “நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான், நான் மறுக்கவில்லை. சென்னை மாநகராட்சி மன்றத்தில் இத்தகைய ஊழல் நடைபெற்றதை ஒத்துக் கொள்கிறேன். யார் காரணம் என்பதை அறிய இப்போதே விசாரணைக்கு உத்தரவிடப் போகிறேன். விசாரணைக் கமிஷனுக்கு உத்தரவிடுவதை முன்னிட்டு, மாநகராட்சி மன்றத்தை இதே நிமிடத்திலே கலைக்கிறேன்” என்று சொல்லி கலைத்த வரலாறு உங்களுக்குத் தெரியும். அப்படிக் கலைக்கப்பட்ட மாநகராட்சி மன்றத்தில் இருந்தவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல, ஜாம்பவான்கள். மாநகராட்சி மன்றத்தை ஒருவிரலால் ஆட்டி வைக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு பெற்றவர்கள்.
நிர்வாகத்தில் புலிகளாக, சிங்கங்களாக இருந்தவர்கள். அவர்களை விட்டால் மாநகராட்சி மன்றத்தை நிர்வகிக்க ஆள் இல்லை என்று சொல்கிற அளவிற்கு இருந்தவர்கள். என்னுடைய ஆருயிர் நண்பராக இருந்த மைனர் மோசஸ் போன்றவர்களை எல்லாம் ஒரே நாளில் மாநகராட்சி மன்றத்தைக் கலைத்ததன் மூலமாக வீட்டிற்கு அனுப்பி, அதன் மூலமாக கட்சிக்கு நான் சம்பாதித்து கொடுத்த மதிப்பு, மரியாதை தான் அடுத்த தேர்தலிலே தி.மு.க. வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தது. இந்தப் பழைய வரலாற்றை, வரலாறு தரும் பாடத்தை உணர்ந்து கொண்டால், கட்சிக்கு, வருகிற சட்டமன்றத் தேர்தலிலே வெற்றி நிச்சயம்.
சென்னையில் நடைபெறுகிற தி.மு.க. கூட்டங்கள் என்று இல்லாமல், திமுக சார்ந்த நிகழ்ச்சிகள் எதுவானாலும், அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் செல்ல வேண்டும். ஒரு மாவட்டச் செயலாளர் என்றால், அடிக்கடி தலைமைக் கழகத்திற்கு வரவும், தலைவரோடு கலந்து பேசவும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீல நாராயணன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் பணியாற்றியபோதும் சரி, எப்போதும் அவர்கள் தலைமைக் கழகத்திற்கு வருவார்கள் எங்களோடு பேசுவார்கள். எங்களோடு கலந்து செயலாற்றுவார்கள்.
அதேபோல் தலைமைக் கழகத்தோடு நாள்தோறும் தொடர்பு கொண்டு பணிகளை ஆற்றிட வேண்டும். நான் சொன்ன வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடந்து கட்சியை காப்பாற்றுங்கள். தேர்தல் வரட்டும், போகட்டும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

No comments:

Post a Comment