கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, October 6, 2010

கூட்டுறவு, உணவுத்துறை பணிகள்: கலைஞர் ஆய்வு


கூட்டுறவு, உணவுத் துறை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் முதல்வர் கருணாநிதி ஆய்வு செய்தார்.


முதல்வர் கருணாநிதி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க் கடன்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பொதுவிநியோகத் திட்டத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் ஆகியவை குறித்து இன்று (6.10.2010) புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் முதன்மைச் செயலர் (கண்காணிப்பு), நிதித்துறை முதன்மைச் செயலாளர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை ஆணையாளர், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குநர், காவல்துறை தலைவர் (குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றவியல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த ஆய்வின்போது, விவசாயிகளுக்குப் பயிர்க்கடன்கள் வழங்குவதிலும், நலிவடைந்த கூட்டுறவு கடன் சங்கங்களை உயிர்ப்பித்து இலாபகரமாக இயங்கச் செய்வதிலும் கூட்டுறவுத் துறை ஆற்றிய பணிகளை முதல்வர் கருணாநிதி பாராட்டினார்.


மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களை கணினி மயமாக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறும்; நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி முதலான அத்தியாவசியப் பொருள்களின் தரம் சரியாக உள்ளதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்திட வேண்டுமென்றும்; நியாயவிலைக் கடைகளில் பணியாளர்கள் பணிசெய்யும் நிலைமைகள் குறித்து அதிகாரிகள் அடிக்கடி பார்வையிட்டுக் கண்காணிப்பதுடன், பொதுமக்களுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்கப் படுவதை உறுதிசெய்திட வேண்டுமென்றும்;


அத்தியாவசியப் பொருள்கள் கடத்தப்படுவதை விழிப்புடன் கண்காணித்துத் தடுப்பதுடன் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யமின்றிக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும்; இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதற்கேற்ப, குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கு ஏதுவாக 1600 குடும்ப அட்டைகளுக்குமேல் உள்ள நியாயவிலைக் கடைகளைப் பிரித்து புதிய கடைகள் அமைக்கும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு முடித்திடுமாறும்;


புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்த இரண்டு மாத காலத்திற்குள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப் படவேண்டுமென்றும்; போலி குடும்ப அட்டைகளைக் கண்டறியும் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு அவற்றை நீக்கிட ஆவன செய்யுமாறும்;

விழாக்காலங்கள் நெருங்குவதால், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப் படுவதில் எந்தவிதத்திலும் சுணக்கம் ஏற்படாதவகையில், அவற்றின் இருப்புகளைக் கண்காணித்து போதிய அளவில் இருப்பு செய்திடவும், அவை மாநிலத்தின் ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் சீராக விநியோகம் செய்யப் படவும் அதிகாரிகள் திட்டமிட்டு விழிப்புடன் செயல்படவேண்டுமென்றும்;


பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமைப் பொருள்கள், மளிகைப் பொருள்கள் ஆகியவற்றின் வெளிச்சந்தை விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் பொருள்களை வழங்கி வரும் சிறப்புப் பொது விநியோகத் திட்டம் 30.6.2011 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இத்திட்டத்தின்மூலம் பயனடைவதை அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும் என்றும்;


மழைக் காலம் தொடங்கியுள்ளதால் சாகுபடிப் பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்கு உதவும் வகையில் பயிர்க்கடன்கள் வழங்குவதையும், இடுபொருள்கள் தாராளமாக வழங்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் கலைஞர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
விவசாயக் கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் சிறப்பாகச் செயல்பட்டு விவசாயிகள் பயனடைந்துவருவதால் இந்த ஆண்டில் அமைத்திட அனுமதிக்கப் பட்டுள்ள 10 ஆயிரம் விவசாயக் கூட்டுப் பொறுப்புக் குழுக்களுடன் ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுக்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றும் முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


No comments:

Post a Comment