கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 2, 2010

நவ.8: சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவக்கம்


தமிழக சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 8ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிப்பை ஆளுநர் சுர்ஜித் பர்னாலா வெளியிட்டுள்ளார்.


தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய சட்டப்பேரவை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 8ஆம் தேதி கூடுகிறது.


நவம்பர் 8ஆம் தேதி காலை 9.30 மணிக்கு இந்தக் கூட்டத்தொடர் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

குளிர்கால கூட் டத் தொடராக, ஒரு வாரம் வரை சட்டசபை நடைபெறும். இதில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அவ சர சட்டங்களுக்கு மாற் றாக பல்வேறு மசோ தாக்கள் தாக்கல் செய் யப்பட உள்ளன.கடந்த ஜூன் மாதம், கோவை யில் நடந்த தமிழ்ச் செம் மொழி மாநாட்டில் முதல்வர் பேசும்போது, தமிழில் படித்தவர்க ளுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில் முன்னு ரிமை தரப்படும்' என, அறிவித்தார். இது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக் கப்பட்டு, பணி நியம னங்களும் செய்யப்பட் டன. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா, இந்த தொடரில் தாக்கல் செய் யப்பட்டு, நிறைவேற்றப் படும். விளம்பரப் பதா கைகள் வைப்பதை முறைப்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்டத் திருத்த மசோ தாக்களும் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கூட்டத்தொடரின் முதல் நாள், மறைந்த சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் மற் றும் அக்கட்சி எம்.எல்.ஏ., ஜெயபால் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சபை ஒத்தி வைக்கப்படும். மறுநாள் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நான்கு நாள்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும்.

விவசாயிகளுக்கு, இலவச மின் மோட்டார் வழங்கப்படும் என, முதல் வர் ஏற்கெனவே அறி வித்துள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீடு உட்பட கூடுதல் செலவினங்க ளுக்கு நிதியை ஒதுக்க வழிவகை செய்யும் வகை யில், அதற்கான துணை மதிப்பீடுகளை நிதிய மைச்சர் அன்பழகன் தாக்கல் செய்வார். தேர் தல் நெருங்கி வரும் நிலை யில், சட்டசபை கூடுவ தால், இந்தத் தொடர் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.No comments:

Post a Comment