கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 2, 2011

ராஜிவ் கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு நிறுத்திவைப்பு : 8 வார இடைக்கால தடை





ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் 8 வார இடைக்கால தடை விதித்தது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் கடந்த வாரம் நிராகரித்தார். இதை தொடர்ந்து இந்த மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. வரும் 9ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என வேலூர் சிறை அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், வக்கீல்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், சோனியா, உள்துறை அமைச்சர், கவர்னர் ஆகியோருக்கு கருணாநிதி கடிதம் எழுதினார்.
இந்நிலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் சார்பில் தூக்கு தண்டனைக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் 29.08.2011 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், �கடந்த 11 ஆண்டுகளாக எங்களது கருணை மனுவை ஜனாதிபதி கிடப்பில் போட்டு விட்டார். இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. இவ்வளவு காலதாமதமானது சட்டவிரோதம். ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டோம். அதன்பிறகு தூக்கு தண்டனை வழங்குவது ஒரு குற்றத்துக்கு இரட்டை தண்டனை வழங்குவது போன்றதாகும்� என கூறியிருந்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என வக்கீல் சந்திரசேகர் உள்பட பலர் கோரிக்கை வைத்தனர். இதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. வழக்கை விசாரிக்க நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் அடங்கிய பெஞ்ச் ஒன்றை தலைமை நீதிபதி இக்பால் நியமித்தார்.
30.08.2011 அன்று காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்றம் கூடியதும் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் பெஞ்ச்சில் முதல் வழக்காக இது எடுத்துக் கொள்ளப்பட்டது. மூவர் சார்பாக பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி, வக்கீல்கள் வைகோ, சால்வே , வைகை ஆகியோர் ஆஜராயினர்.
அவர்கள் வைத்த வாதம்:
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களது கருணை மனு 11 ஆண்டுகள் 4 மாதங்களாக ஜனாதிபதியால் கிடப்பில் போடப்பட்டது.
இதுதொடர்பாக பல முறை நினைவூட்டல் கடிதங்களை சம்பந்தப்பட்ட 3 பேரும் அனுப்பினர். அதன் பின்னரும் அவர் முடிவு எடுக்கவில்லை. இவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமைச் சிறையில் தண்டனை அனுபவித்துள்ளனர். ஆயுள் தண்டனை
அனுபவித்ததாக கருதி அவர்களது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். வரும் 9ம் தேதி 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க தடை விதிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்ததும் தமிழக கவர்னருக்கு 3 பேரும் கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை கவர்னர் 10 நாட்களுக்குள் விசாரித்து தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி கவர்னர் மீண்டும் கருணை மனுவை விசாரித்து 5 மாதத்திற்குள் தனது முடிவை அறிவித்துவிட்டார். கவனர் 3 பேர் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்ததும் ஜனாதிபதிக்கு அவர்கள் மனு அனுப்பினர்.
ஜனாதிபதியின் காலதாமதத்திற்கும் சட்டப்படி காரணம் கூறவேண்டும். நீண்டநாட்கள் ஜனாதிபதி கருணை மனு மீது முடிவு எடுக்காமல் இருந்தது 3 பேருக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது இந்திய அரசியில் சட்டம் பிரிவு 21க்கு எதிரானது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2 ஆண்டுகளுக்கு மேலாக கருணை மனுவை கிடப்பில் வைத்திருந்தால் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்.
ஐரோப்பியா போன்ற நாடுகளில் தூக்கு தண்டனையை ரத்து செய்து விட்டார்கள். தூக்கு தண்டனையை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. எனவே ஜனாதிபதியின் காலதாமதத்தினால் 3 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு விதிக்கப் பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
வாதத்தை கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: �மூவருக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்ற 8 வாரம் இடைக்கால தடை விதிக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் 8 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இந்த வழக்கில் முக்கிய சட்டப்பிரச்னை எழுப்பப்பட்டுள்ளதால் இதை தீர விசாரிக்க உள்ளோம் ” என்றனர். இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன், தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி , வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீசு எடுத்து கொண்டனர்.


ஐகோர்ட் தடை - பட்டாசு வெடித்து கொண்டாட்டம் :

3 பேருக்கு தூக்கு தண்டனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை வக்கீல்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 30.08.2011 அன்று காலை 9 மணி முதல் வக்கீல்களும் பொதுமக்களும் கூடினர். காலை 10 மணிக்கு நீதிமன்றத்திற்குள் வக்கீல்கள் நுழைந்தனர். 11 மணி வரை உயர் நீதிமன்றம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. சரியாக ஒரு மணி நேரம் வாதத்திற்கு பிறகு தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. உடனே நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வக்கீல்கள் கோஷமிட்டனர். பின்னர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் வக்கீல்களும் தமிழ் ஆர்வலர்களும் கொண்டாடினர்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ராமஜெத்மாலனி பேட்டி அளிக்கும் போது, “நீதிக்கு வெற்றி கிடைத்து விட்டது, மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்” என்றார். இதை தொடர்ந்து பேரறிவாளன் தாய அற்புதம் கூறும்போது, “எனது மகன் உயிரை காப்பாற்ற போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க தீர்மானம் :
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி பேரவையில் 30.08.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரவையில் 30.08.2011 அன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து பேசியதாவது:
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 72ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்னையில், தமிழ்நாடு முதல்வர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் ஓர் அறிக்கையை நேற்று அளித்தேன்.
அந்த அறிக்கையில், மூன்று பேரின் கருணை மனுக்களை முதல்வராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட கூறியிருந்தேன்.
மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 72ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்னையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர்தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினேன். இந்தச் சூழ்நிலையில், மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
�தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு அவர் கூறினார். இந்த தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.


No comments:

Post a Comment