கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 1, 2010

திராவிட சகாப்தத்திற்கு முடிவில்லை : முதல்வர் கருணாநிதி


கடல்நீரை குடிநீராக சுத்திகரித்து சென்னை நகர மக்களுக்கு வழங்கும் ஆலையை முதல்வர் கருணாநிதி நேற்று மீஞ்சூரில் தொடங்கி வைத்தார்.
ஸீ600
கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஆலையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் தயாரிக்கப்பட்டு, சென்னை மக்களுக்கு கூடுதலாக இன்று முதல் வழங்கப்படுகிறது.
புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், போரூர் ஆகிய நீர் தேக்கங்கள் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஆதாரங்களாக உள்ளன. இது தவிர, வீராணம் ஏரியில் இருந்தும் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பருவமழை பொய்த்துவிடும் நேரங்களில் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையில் பற்றாக்குறை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு தெற்காசியாவிலேயே முதல் முறையாக கடல் நீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி கிராமத்தில்
ஸீ600
கோடியில் இந்த திட்டத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2007ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டப்பணியை மேற்கொண்ட ஐவிஆர்சிஎல் கட்டுமான நிறுவனமும், ஸ்பெயின் நாட்டின் பெபீசா அக்வா நிறுவனமும் இணைந்து 60 ஏக்கர் பரப்பளவில் ஆலையை உருவாக்கின. சோதனை முறையில் கடல்நீரை, குடிநீராக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. வெற்றிகரமாக சோதனைகளும், ஆய்வுகளும் முடிந்து, கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் முழுமை பெற்றது.
இதையடுத்து, இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று மாலை மீஞ்சூரில் கோலாகலமாக நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி, கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், நீரேற்றும் மையங்கள், குடிநீர் குழாய் கட்டமைப்பு வசதிகள் அ¬னைத்தையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். சென்னை பெருநகர குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குநர் சிவ்தாஸ் மீனா, மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, மேயர் சுப்பிரமணியன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் பங்கேற்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகர மக்களுக்கு கூடுதலாக விநியோகிக்கப்படும். 20 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
கோவை செம்மொழி மாநாட்டில் தொடர்ந்து இருக்கிறோமா, மீஞ்சூரில் நடக்கும் குடிநீர் திட்ட விழாவில் இருக்கிறோமா என்று தெரியாமல் இருக்கிறேன். கோவை மாநாடு எப்படி மீஞ்சூருக்கு வந்தது என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. எனவேதான், அசோக்வர்தன் ஷெட்டி இங்கு புலவர் போல் உரையாற்றினார். அவருக்கும் மாநாட்டின் தாக்கம் இருக்கிறது. அந்த தாக்கம் தமிழர்களாக இருக்கும் எல்லோருக்கும் ஏற்பட்டே தீரும்.
திமுக ஆட்சியில், சென்னை மக்களுக்கு குடிநீர் வசதியை எப்படி செய்து தருவது என்று யோசித்து கந்தப்பனை தலைவராக கொண்டு குடிநீர் வாரியம் உருவாக்கப்பட்டது. அதன்மூலம் சென்னையின் குடிநீர் தேவை ஓரளவு தீர்க்கப்பட்டது.
வேலூர் நாராயணன் மேயராக இருந்தபோது, ஒரே இரவில் 12 ஆயிரம் குழாய்களை சென்னை நகரின் தெருக்களில் அமைத்தேன். சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைகளை தீர்க்க எல்லோருக்கும் அக்கறை உண்டு. எனக்கு பலமடங்கு ஆர்வம், அக்கறை உண்டு. அதன்பிறகு, கிருஷ்ணா ஆற்று தண்ணீர் வேண்டும் என்பதற்காக ஆந்திர முதல்வருடன் பேசி எம்ஜிஆர் ஈடுபட்ட முயற்சியை தொடர்ந்து, தெலுங்கு கங்கை திட்டம் திமுக ஆட்சியில் வந்தது. அதன்முலம் ஓரளவு தண்ணீர் சென்னைக்கு கிடைத்தது.
அப்போதும் சென்னையின் தாகம் முழுமையாக தீரவில்லை. காரணம், மக்கள் தொகை பெருக்கம். கிருஷ்ணா தண்ணீர் சரியாக வராத நிலையில் சாய்பாபா என் வீட்டுக்கு நேராக வந்து இந்த திட்டத்தில் உள்ள குறைகளை அகற்றி நிறைவேற்றி தருகிறேன் என்றார். தாராளமாக செய்யுங்கள் என்றேன். அதன்படி பலகோடி ரூபாயில் அதன் முழுமைபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
நாம் தண்ணீருக்கு பக்கத்து மாநிலங்களை தேடிச் செல்ல வேண்டியுள்ளது. அதனால் ஏற்படும் சண்டை, சச்சரவு, கலவரங்களை நீங்கள் அறிவீர்கள். பக்கத்து மாநிலங்களுடன் நாம் நல்லுறவை விரும்புவதாலும், நமக்குள்ள பங்கை பெற சட்டரீதியாக நேர்மையான வழிமுறைகளை கையாள்வதாலும் அண்டை மாநிலங்கள் நட்புறவுடன் நம் தேவைகளை ஓரளவு நிறைவேற்றி வருகின்றன.
மழை பொய்த்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்து அதில் பெற்ற பெரிய வெற்றிதான் இந்த திட்டம். அதேபோல ராமநாதபுரத்தில் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோல பல காரியங்களை இந்த ஆட்சி செய்து வருகிறது. தண்ணீர் தருவதில் உள்ள புண்ணியம் சாதாரணமானது அல்ல. நீங்கள் சென்னை நகர மக்களுக்கு தண்ணீர் தருகிறீர்கள். மாமல்லபுரத்தில் நெமிலி பகுதியில் இதுபோன்ற திட்டம் ஓராண்டிலோ, 2 ஆண்டிலோ தொடங்கி அதுவும் சென்னை நகர மக்களுக்கு பயனைத் தரும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இந்த ஆட்சிக்காலம் இன்னும் ஓராண்டு காலம்தான் இருக்கிறது. 2ஆண்டில் எப்படி முடியும் என்று யாராவது கேட்கலாம். ஒரு ஆட்சி முடியலாம். ஆனால், திராவிட சகாப்தம் முடிவடையாது.
ஆட்சி என் தலைமையிலோ மற்றவர் தலைமையிலோ தொடர்ந்து இருக்கும். திராவிட சகாப்தத்திற்கு என்றும் முடிவில்லை. திராவிடம் என்றால் நம்மைத்தான் என்று சிலர் கருதலாம். பெரியார், அண்ணா உருவாக்கிய திராவிடம்தான் அது. மற்றவை திராவிடம் அல்ல, தீராவிடம். திராவிடம் என்பது இன உணர்வு.
கங்கையை பூமிக்கு கொண்டுவர பகிரதன் எடுத்த முயற்சியை பகிரத பிரயத்தனம் என்பார்கள். இன்று எங்கெல்லாம் தண்ணீர் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் பகிரதன்கள் தேவைப்படுகிறார்கள். இந்த திட்டம் பகிரதனால் அல்ல, பகுத்தறிவால் நம் ஆட்சியின் நிர்வாக திறமையால், உறுதியால் இப்படிப்பட்ட பல நன்மைகளை, சாதனைகளை செய்ய முடிகிறது. இந்த அரசுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கினால் ஒரு குடிநீர் திட்டம் அல்ல 10 திட்டம் வேண்டுமானாலும் அதை நிறைவேற்ற முடியும். இந்த அரசுக்கு நீங்கள் தொடர்ந்து தருகின்ற ஆதரவு தான் உங்களை வாழ வைக்கும் என்பதையும் எடுத்துச் சொல்லி நீங்கள் எனக்குத் தந்த வரவேற்புக்கு வழியெங்கும் திரண்டு நின்று நீங்கள் காட்டிய நன்றி விசுவாசத்திற்கு பாராட்டுக்கு வாழ்த்துக்கு என்னுடைய அன்பான நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடல்நீர் குடிநீராக்கும் திட்ட விழாவுக்கு தலைமை தாங்கி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 1640ல் சென்னையின் மக்கள் தொகை 7 ஆயிரம்தான். அப்போது மாட்டு வண்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. 1862ல் மக்கள்தொகை 4 லட்சமானது. அப்போதுதான் புழல் ஏரி திட்டம் தொடங்கப்பட்டது. அது இன்றும் இருக்கிறது. 1944ல் பூண்டி நீர் தேக்கம் சத்தியமூர்த்தி முயற்சியால் அமைந்தது. 1967ல் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் அது தடைபட்டது. அந்த குடிநீரும் வந்து கொண்டு இருக்கிறது.
அதைத்தொடர்ந்து, தெலுங்கு கங்கை திட்டத்தை முதல்வர் கொண்டு வந்தார். ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருந்தது. அப்போது
ஸீ
1000 கோடி, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை அதிமுக ஆட்சி நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் டெல்லி சென்று, திட்டத்தை கேட்டு நிதியையும் பெற்றார். அதன்படி, நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் தெற்கு ஆசியாவிலேயே பெரிய திட்டம். குடிநீர் பிரச்னையை தீர்க்க இந்த ஆட்சி பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ராமநாதபுரம் குடிநீர் திட்டம், மேலூர் குடிநீர் திட்டம், விருதுநகருக்கு தாமிரபரணி குடிநீர், வேலூருக்கு குடிநீர் திட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களுக்கான குடிநீர் திட்டம் இப்படி பல திட்டங்களை நிறைவேற்றி தருபவர், நம் முதல்வர். மக்களின் திட்டங்களை நிறைவேற்றி தரும் இந்த ஆட்சிக்கு, உறுதுணையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment