முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னணி தலைவர்களில் ஒருவருமான மறைந்த முரசொலி மாறனின் 76வது பிறந்தநாள் 17.08.2010 அன்று கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முரசொலி மாறன் சிலைக்கு முதல்வர் கருணாநிதி காலை 9.15 மணிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அங்கே கூடியிருந்த ஏராளமானோர் ‘’முதல்வர் வாழ்க, முரசொலி மாறன் புகழ் ஓங்குக” என்று முழக்கமிட்டனர்.
நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் க.அன்பழகன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன், சுப.தங்கவேலன், பரிதி இளம்வழுதி, பொங்கலூர் பழனிச்சாமி, சுரேஷ்ராஜன், கே.பி.பி.சாமி, மைதீன்கான், என்.செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன் மற்றும் மு.க.தமிழரசு, மேயர் மா.சுப்பிரமணியன், இ.ஏ.பி.சிவாஜி, எஸ்.ஆர்.ராஜா, எம்எல்ஏ சங்கரி நாராயணன், மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன், கு.க.செல்வம், துறைமுகம் காஜா, ஆ.த. சதாசிவம், புதுவை ஜானகிராமன், செங்கை சிவம், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ்.பாபு மற்றும் கி.வேணு, ரத்தினசபாபதி, எஸ்.ஏ.எம்.உசேன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேங்கடபதி, ராதிகா செல்வி, சட்டப் பேரவை செயலாளர் செல்வராஜ், அந்தமான் திமுக நிர்வாகி கிருஷ்ணன்,
சுப.சீதாராமன், வக்கீல்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கிரிராஜன், கல்யாணசுந்தரம், ஜான் குணசேகரன், ரகுமான்கான், சா.கணேசன், க.ப.அறவாணன், வாசுகி ரமணன், ராஜம் ஜான், வள்ளிமைந்தன், வர்த்தகர் சங்க நிர்வாகிகள் சி.நவமணி, வி.பி.மணி, எம்.ஜி.செல்வம், கே.எஸ்.எம்.நாதன், க.தனசேகரன், செல்வ பொன்னிவளவன், எஸ்.கே.எம்.அண்ணாதுரை, திருவாரூர் கந்தசாமி, அன்புதுரை, வி.எஸ்.ராஜ், ஏ.சேகர், ராபர்ட், குறிஞ்சி சுப்பிரமணியம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment