கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 8, 2010

ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி, முறைகேடு இல்லை - ஜெயலலிதா புகாருக்கு முதல்வர் விளக்கம்


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை விடுவதற்கோ & ஆர்ப்பாட்டம் செய்வதற்கோ எந்த காரணமும் கிடைக்கவில்லை என்றால், உடனே 10 நாட்களுக்கு முன்பு அவரே வெளியிட்ட ஒரு அறிக்கையைத் தேடிப் பிடித்து, தேதியை மாற்றி மீண்டும் அதையே புது அறிக்கை போல விடுவார் போலும்.
அரசு தரப்பிலிருந்து என்ன பதில் சொல்கிறார்கள் என்பதை அவர் படிப்பதும் இல்லை. அரைத்த மாவையே அரைப்பதை அவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்பதற்கு மற்றொரு உதாரணம்தான் ஆசிரியர்கள் தேர்வு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை.
தமிழகத்தில் கடந்த 5 நிதி நிலை அறிக்கைகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டினை அளித்து, பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில்
ஸி10
ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, வகுப்பறையில் மற்ற மாநிலங்களை விட கற்றல், கற்பித்தலில் புதிய மாற்றங்களை கொண்டு வந்து, மத்திய அரசும் மற்ற மாநில அரசுகளும் பாராட்டுகள் தெரிவித்துள்ளன.
ஆசிரியர் தேர்வில் ஊழல் மலிந்து விட்டது என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். அதற்கு என்ன ஆதாரம் சொல்லியிருக்கிறார் என்றால், கடந்த மார்ச்சில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட ஆசிரியர் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள பலர், ஜூலை 14ம் தேதி வெளியிட்ட ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர் என்பதுதான்.
ஒரு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தனது பெயரை வேலை வாய்ப்பகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் பதிவு செய்து வைத்திருப்பார்; முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் பதிவு செய்திருப்பார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியரைத் தேர்வு செய்யும்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தால் அனுப்பப்படும் இரண்டு பட்டியல்களிலும் அவர் பெயர் இடம் பெற்று, அவர் இரண்டிற்கும் தேர்ந்தெடுக்கப்படுவது இயல்புதான். அவர் எந்தப் பணி தனக்கு உகந்தது என்று தீர்மானித்துக் கொண்டு, தான் விரும்பும் பணியிலே சேரலாம்.
அரசால் வழங்கப்பட்ட ஆணைகள் மற்றும் நடைமுறை விதிமுறைகளைப் பின்பற்றியே அனைத்துத் தேர்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2009&2010ம் ஆண்டிற்கு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பம் மற்றும் சுய விவரப் படிவங்களில், ‘தாங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பணியில் உள்ளவரா’ என்ற வினாவிற்கு&அப்படித் தேர்வு செய்யப்பட்ட விவரம் விண்ணப்பதாரர்களால் தெரிவிக்கப்படாததால், 25 பெயர்கள் 2009&2010ம் ஆண்டிற்கான தேர்வுப் பட்டியலில் மீண்டும் இடம்பெறும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதில் தேர்வு செய்யப்பட்ட 25 பேர்கள், 2009&2010ம் ஆண்டு வெளியிட்ட இணையதள தேர்வுப் பட்டியலிலும் இடம்பெற்றது பின்னர் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களது தேர்வு முறைப்படி ரத்து செய்யப்பட்டது. இரண்டாவதாக தேர்வு பெற்றமைக்கு அவர்களுக்கு எந்தவிதமான ஆணைகளும் இவ்வாரியத்தின் மூலம் அனுப்பவில்லை. இந்த விஷயம் புரியாமல் ஜெயா அறிக்கை விடுத்திருக்கிறார்.
283 தமிழாசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில் 256 பேர் இவ்வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டனர்.
குறிப்பிட்ட இனச்சுழற்சியில் தகுதியுடையோர் கிடைக்கப் பெறாததால், 8 பணியிடங்கள் மற்றும் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்ட 19 பணியிடங்களையும் சேர்த்து 27 பணியிடங்கள் நீங்கலாக 256 பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் இந்த வாரியத்தின் இணையதளத்தில் முறைப்படி வெளியிடப்பட்டது.
2009&2010ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலின்படி தகுதியுடைய 196 பேர் தேர்வு செய்யப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன.
9 பணியிடங்களுக்கு தகுதியுடையோர் கிடைக்கப்பெறாததாலும், ஒரு பணியிடம் நீதிமன்ற ஆணையின்படி நிறுத்தி வைக்கப்பட்டதாலும் 10 பணியிடங்கள் தேர்வு செய்யப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் 29&6&2010 மற்றும் 22&7&2010 அன்று விரிவான செய்தி வெளியிட்டு, அவை ஏடுகளிலும் வெளிவந்துள்ளன.
தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள், இந்த வாரிய இணையதளத்தில் அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படையான முறையில் வெளியிடப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் எந்தவிதமான குளறுபடியோ, முறைகேடுகளோ நடைபெறவில்லை.
போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தவர்கள் மீது இந்த அரசு முறையாக நடவடிக்கை எடுத்து, தவறு செய்தவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றியும் ஏதேதோ மர்மம் என்று ஜெயலலிதா எழுதியிருக்கிறார்.
தொழிற்படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களின் சான்றிதழ் பற்றிய உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்ள ஏதுவாக, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி சேர்க்கைக் குழுவிற்கு மார்ச் 2010ல் பிளஸ் 2 தேர்வெழுதியவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி. தேர்வுத்துறையால் அளிக்கப்பட்டது.
தொழிற்படிப்பில் சேர்க்கை பெறுபவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து சேர்க்கை பெறுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு மதிப்பெண் விவரங்களை அலுவலக ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்ததில் மருத்துவ கல்வி சேர்க்கைக்கு 10 விண்ணப்பதாரர்களும், பொறியியல் சேர்க்கைக்கு 13 விண்ணப்பதாரர்களும் போலிச் சான்றிதழ் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி ஜூலை 12, 17 ஆகிய தேதிகளில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அரசு தேர்வுகள் துறையால் புகார் அளிக்கப்பட்டு காவல் துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதையெடுத்தாலும் சந்தேகம், மர்மம் என்று தனது நிழலைக் கண்டே அஞ்சுகின்ற நிலை ஜெயாவுக்கு ஏற்பட்டுள்ளது. ‘யாரோ சொன்னார்கள், தகவல்கள் தெரிவிக்கின்றன, பத்திரிகையிலே வந்துள்ளது’ என்றெல்லாம் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் ஜெயா அறிக்கை விடுவது என்பது முதல் தடவையல்ல.
தேவையில்லாமல் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால் மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பணிமாற்றம், நியமனம் போன்றவற்றில் அவரது தலையீடு இருக்குமென்றும் ஜெயலலிதா இட்டுக்கட்டி குற்றஞ்சாட்டியிருப்பது அவரது அரசியல் அசூயைத்தனத்தையும், என் குடும்பத்தினரின் மீதுள்ள காழ்ப்புணர்வையும் காட்டுவதாகத்தான் உள்ளது.
பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நடந்த பொது மாறுதல்கள் யாவும் நேர்மையான முறையில் வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு, மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை தொடக்கக் கல்வித் துறையில் கலந்தாய்வின் மூலமாக மட்டும் பயன் பெற்றவர்கள் 46,962 பேர். பள்ளிக் கல்வித் துறையிலே பயன் பெற்றவர்கள் 30,051 பேர்.
இரண்டிலும் சேர்ந்து 77013 ஆசிரியர்கள் பயன் பெற்றுள்ளார்கள் என்ற ஒரு புள்ளி விவரமே இந்தத் துறை எந்த அளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதை உலகத்திற்கு வெளிப்படுத்தும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment