கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 5, 2010

ஜெயலலிதாவை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் வாய்தா வாங்கி 13 ஆண்டுகளாக அவர் தாமதப்படுத்தி வருவதாக கூறி, அவரை கண்டித்து, திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்சென்னை மாவட் ட இளைஞரணி சார்பில் சைதை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் நுங்கை வி.எஸ்.ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மு.க.தமிழரசு, கயல்விழி அழகிரி, சைதை கா.கிட்டு, மகேஷ்குமார், ஆயிரம் விளக்கு உசேன், சேப்பாக்கம் வி.பி.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

கவிஞர் தமிழச்சி பேசுகையில், ஒரு ஊழல் ராணியாக இருக்கிறார் என்பதை தோலுறித்துக் காட்டும் வண்ணம், மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து இன்று நடைபெறுகிறது. தமிழக மக்கள் தங்களின் ஞாபக சக்தியின் விளைவாக வரும் தேர்தலிலும் இந்த அம்மையாருக்கு வலுவான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

திமுக மகளிர் அணி பிரச்சாரக் குழுச் செயலாளரும், கவிஞருமான கயல்விழி பேசுகையில், காடு ஆறுமாதம், நாடு ஆறுமாதம் என்று இருந்து வரும் ஜெயலலிதாவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஊழல் ராணி ஜெயலலிதா தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். இதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாங்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக நிற்கிறோம் என்றார்.வடசென்னை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.டி.சேகர் தலை மை வகித்தார். மாவட்ட செயலாளர் புரசை வி.எஸ்.பாபு முன்னிலை வகித்தார். இதே போல், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்பட எல்லா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இவற்றில் திமுக முக்கிய நிர்வாகிகள் உள்பட பல லட்சம் பேர் பங்கேற்றனர்.

மு.க.ஸ்டாலின் நன்றி
திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சொத்து குவிப்பு வழக்கில் சாக்குபோக்கு சொல்லியே வாய்தா மேல் வாய்தா வாங்கி 13 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மக்களை அவமதிக்கும் விதமாக அறிக்கை மேல் அறிக்கை விடுக்கும் போக்கை கண்டித்தும், திமுக இளைஞர் அணியின் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியோடு நடந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி பெற அயராது பணியாற்றிய திமுக இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment