கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 12, 2010

மு.க.அழகிரி தலைமையில் நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம்


நாடாளுமன்ற மக்களைவை மற்றும் மாநிலங்களவையில் இடம்பெற்ற திமுக உறுப்பினர்கள் கூட்டம்., டெல்லியில் மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் அவரது இல்லத்தில் நடந்தது.

திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர். பாலு, அமைச்சர் ஆ.ராசா. அமைச்சர் தயாநிதிமாறன், அமைச்சர் நெப்போலியன், கனிமொழி எம்.பி. உட்பட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்பக்கூடிய பிரச்சனைகள் மற்றும் விவாதங்களை எதிர்கொள்வது குறித்து, திமுக எம்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கேள்வி நேரங்கள் மட்டுமின்றி, அவையில் மற்ற நேரங்களிலும் இதர உறுப்பினர்களின் பேச்சு, அமைச்சர்களின் பதில்கள், பிரச்சனைகளில் திமுகவின் நிலைப்பாடு ஆகியவையும் இந்த கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது.


இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு,

பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறபோது, திமுகவைச் சேர்ந்த இரு அவை உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்படி கேள்வி எழுப்புவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கேள்வி நேரத்தின் போது தமிழகத்துக்கு வேண்டிய திட்டங்களை எவ்வாறு பெற வேண்டி பேச வேண்டும் என்பது பற்றியும் அறிவுறுத்தப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment