கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 16, 2010

கொட்டும் மழையில் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர்


தமிழக அரசின் சார்பில், நாட்டின் 64ம் சுதந்திர தின விழா, சென்னை கோட்டையில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 8.20 மணிக்கு கோட்டைக்கு வந்த முதல்வர் கருணாநிதி காரில் இருந்தபடியே, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள், மாணவ மாணவிகளை பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.
கோட்டை கொத்தளத்தில் அவரை தலைமை செயலர் ஸ்ரீபதி வரவேற்றார். முப்படை தளபதிகள் செங்கப்பா (தரைப்படை) ராஜீவ் ஜிரோத்ரா (கடற்படை) சஞ்சய் வர்மா (விமானப்படை) போலீஸ் டி.ஜி.பி., லத்திகா சரண், சென்னை நகர கமிஷனர் ராஜேந்திரன், கடலோர காவல் படை ஐ.ஜி. அச்சுதன் ராஜசேகர், கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.
இதன்பின், முதல்வர் கருணாநிதி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுதந்திரதின உரையாற்றினார். அப்போது பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்தபடியே பொது மக்கள் முதல்வரின் பேச்சை கேட்டனர்.
பின்னர் விருதுகளை முதல்வர் வழங்கினார். படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் மதுரையை சேர்ந்த மாற்று திறனாளி தீபாவுக்கு ‘கல்பனா சாவ்லா’ விருது,
ஸீ5
லட்சம், தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
மாற்று திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர், சமூக பணியாளர், வங்கி, தங்கப் பதக்கம், விருதுகள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாற்று திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய தர்மபுரி, தேனி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருதுகளை பெற்றவர்கள் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட னர். அதையடுத்து கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சென்னை நீங்கலாக 31 மாவட்டத்தை சேர்ந்த 31 பேருக்கு பணி ஆணைகளை முதல்வர் வழங்கினார். இதில் 15 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள், 9 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், 6 பேர் தாழ்த்தப்பட்டவர்கள், ஒருவர் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்.
முன்னதாக, ஓலை வீட்டுக்குப் பதில் கட்டப்படும் காங்கிரீட் வீட்டின் மாதிரி வடிவத்தை முதல்வர் திறந்து வைத்தார். அங்கு இருந்த ஒரு குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் கையசைத்தனர். பிறகு, மாற்று திறனாளி குழந்தைகளுக்கு முதல்வர் இனிப்புகள் வழங்கினார்.
விழாவில் சட்டப் பேரவை தலைவர் ஆவுடையப்பன், நிதியமைச்சர் அன்பழகன் மற்றும் மத்திய மாநில அமைச்சர்கள், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள், எம்,எல்.ஏ.க்கள், குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment