கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, August 4, 2010

தமிழில்தான் இனி அரசு கோப்புகள் : கோவை விழாவில் முதல்வர் கலைஞர் அறிவிப்பு


கோவை பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 380 கோடி செலவில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப் பட் டுள்ளது. சுமார் 17 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இதன் திறப்புவிழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குநர் சுனில் பாலிவால் வர வேற்று பேசினார். விழா வுக்கு தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமை தாங்கி பேசினார்.

விழாவில் கோவை டைடல் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை ரிப் பன் வெட்டி பெயர் பல கையை திறந்து வைத்து தமிழக முதலமைச்சர் கலைஞர் பேசினார். அப் போது அவர் கூறியதா வது:

இங்கு அமைக்கப்பட் டுள்ள தகவல் தொழில் நுட்ப பூங்கா திறப்பு விழா பெரும் சீரும் சிறப் போடும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த தகவல் தொழில் நுட்பபூங்கா உருவாவ தற்கு நான்தான் காரணம் என்று இங்கு பேசிய வர்கள் கூறினார்கள். ஆனால் 1988 - 1989 ஆம் ஆண்டு தமிழக சட்ட மன்றத்தில் நான் வரவு - செலவு திட்டத்தை பேர வையில் வைத்த போது டில்லியிலிருந்து முர சொலி மாறன் தொலை பேசி மூலமும், கடிதம் மூலமும் தொடர்பு கொண்டு தகவல் தொழில் நுட்ப கொள்கை வகுத் தல் பற்றிய அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொள்கை அறிவிக்கப் பட்டது. அதை இந்த நேரத்தில், நான் நினைவு கொள்கிறேன். தமிழகத் தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைவ தற்கு காரண கர்த்தாவாக விளங்கியவர் மறைந்த முரசொலி மாறன்தான். இது போன்ற தகவல் தொழில்நுட்ப பூங்கா சென்னையில் மட்டுமல் லாமல் தமிழகம் முழுவ தும் வளர வேண்டும்.

இந்தியா முழுவதும் தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் வளர்ந் துள்ளன. அவரை நான் இந்த நேரத்தில் நினை வில் கொள்கிறேன். இந்தியா முழுவதும் தகவல் தொழில்நுட்ப பூங்கா தற்போது வளர்ந்து வருகிறது. கோவை எனக்கு புதிது அல்ல. கடந்த 1947 ஆம் ஆண்டிலேயே கோவை நகரில் நான் வளர்ந்தவன்.

கோவை என்னை வளர்த்து ஆளாக் கிய நகரம். திரைப் படத் துறை மூலமாகவும் எனக்கு கோவையுடன் தொடர்பு உண்டு. அந்த வகையில் கோவையில் உள்ளவர் களுக்கு நான் சொந்தக் காரன்தான். கோவைக்கு ஏதாவது செய்ய வேண் டும் என்று அப்போதே நான் நினைத்திருந்தேன். பஞ்சாப் மாநில முத லமைச்சராக இருந்த குர் னால் சிங் என்னை அந்த மாநிலத்துக்கு அழைத் திருந்தார். அப்போது நான் அங்கு சென்று பஞ் சாப் மாநிலத்தில் அமைந் திருந்த விவசாய பல்கலைக் கழகத்தை பார்த்தேன்.

அதைப் பார்த்துவிட்டு அது போன்ற விவசாய பல்கலைக் கழகத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று நினைத் தேன். அப்போது என் நினைவுக்கு வந்தது கோவை தான். அதன்பேரில் கோவை யில் விவசாய பல் கலைக் கழகம் அமைத்தேன். அந்த பல்கலைக்கழக மாணவிகள் தருமபுரியில் சுற்றி பார்க்க சென்ற போது எரித்துக் கொல்லப் பட்டார்கள். கோவை என்னை வளர்த்து ஆளாக்கிய நக ரம் ஆகும். எனக்கு ஊக் கமும், ஆக்கமும் தந்தது கோவைதான். கோவை யில் டைடல் பார்க்கை திறந்து வைத்தது எனது கடமைகளில் ஒன்று. உலகம் போற்றும் வகை யில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.

இங்கு பேசிய தகவல் தொழில் நுட்பத்துறை முதன்மை செயலாளர் தமிழில் பேச வேண்டும் என்ற ஆர் வத்தில் பேசினார். அது செம்மொழி மாநாடு தந்த ஊக்கம் ஆகும். இங்கு நான், துணை முதலமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் இருக்கும்போது தமிழில் பேசாமல் வேறு மொழி யில் பேசினால் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் அவர் தமி ழில் பேசினார். ஆனால் அவர் பேசிய தமிழை பார்த்து மாண வர்கள் வேறு விதமாக கைதட்டினார்கள். எனவே தான், நான் அவரை காப் பாற்றுவதற்காக உங்கள் மொழியிலேயே பேசுங் கள் என்று கூறினேன்.

தமிழை கொல்வதற்கு வேறு ஆள் யாராவது வருவார்கள். எனவே நீங்கள் உங்கள் மொழி யிலேயே பேசுங்கள் என்று நான்தான் கூறினேன். ஒன்றிரண்டு நிகழ்ச்சி களில் நீங்கள் வேறு மொழிகளில் பேசினால் பரவாயில்லை. எல்லா நிகழ்ச்சிகளிலுமே வேறு மொழியில் பேசலாம் என்று நினைக்காதீர்கள். இது போன்று ஒவ் வொரு விழாவிலும் நீங் கள் முயற்சி செய்யுங்கள். தொடர்ந்து முயற்சி செய்து தமிழில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதிகாரி கள் மேடையில் தமிழில் பேசி அரசின் திட்டங் களை மக்களிடம் எளி தாக கொண்டு செல்ல வேண்டும். இங்கு தலை மைச் செயலாளர் இருக் கிறார். எல்லா கோப்புகளும் தமிழில் வருகிறது என் றாலும் ஒன்றிரண்டு கோப்புகள் ஆங்கிலத் தில் வருகிறது. அந்த நிலை மாறி இனி எல்லா கோப்புகளும் தமிழில் தான் இருக்க வேண்டும். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமல் லாமல் யாராக இருந்தா லும் இனி தமிழில் பேச வேண்டும்.

அதற்கேற்ப தமிழில் பேச பழகிக் கொள்ள வேண்டும். செம் மொழி மாநாட்டுக்கு பிறகாவது அதிகாரிகள் தமிழில் பேச தயக்கம் கொள்ள வேண்டாம். அகில இந்திய பணி களில் தேறும் அதிகா ரிகள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவர்கள் ஆங்கி லத்தில் தொடர்ந்து பேசு வது தமிழ் மொழிக்கு நல்லதல்ல. இல்லை யென்றால் எத்தனை தமிழ் மாநாடுகள் நடத்தினா லும் பலன் இல்லாமல் போய்விடும்.

கூடுமான வரை அதி காரிகள் தமிழில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். இங்கு திறந்து வைக்கப்பட் டுள்ள தகவல் தொழில் நுட்ப பூங்கா பற்றி இங்கு பேசியவர்கள் நிறைய விளக்கி இருக்கிறார்கள். இந்தப் பூங்கா மேலும் வளர வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பு இல்லை இல்லை என்ற தொல்லை ஒழியட்டும். சென்னை தரமணியில் அப்போதைய பிரதமர் வாஜ்பேயி டைடல் பார்க்கை திறந்து வைத் தார். அதன் பின்னர் இப்போது கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட் டுள் ளது. இதன் திறப்பு விழா வில் கலந்து கொண் டுள்ளதை நான் பெரு மையாக கருதுகிறேன்.

இவ்வாறு முதல மைச்சர் கலைஞர் பேசி னார்.

விழாவில் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா, அமைச் சர்கள் பொங்கலூர் நா.பழனிச்சாமி, டாக்டர் பூங்கோதை, அமைச் சர்கள் எ.வ.வேலு, பெரிய கருப்பன், ஜவுளித்துறை ராமச்சந்திரன், மு.பெ. சாமிநாதன், தலைமை செயலாளர் கே.எஸ். சிறீபதி, தமிழ்நாடு தொழில் துறை அரசு முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ் சன், தகவல் தொழில் நுட்பத்துறை அரசு முதன்மை செயலாளர் டேவிதார், தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு, மாவட்ட ஆட்சியர் உமாநாத், இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா முதன்மை இயக்குநர் டாக்டர் ஓம் கார்ராய், மேயர் ஆர்.வெங்கடா சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா மேலாண்மை இயக்குநர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment