கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 24, 2010

மு.க.ஸ்டாலின் -மு.க.அழகிரியுடன் ரஜினி சந்திப்புரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையில் கட்டுமான தொழில் செய்யும் அஸ்வின் ராம்குமாருக்கும் செப்டம்பர் 3-ந்தேதி திருமணம் நடக்கிறது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை, ராஜா முத்தையா மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. சவுந்தர்யாவுக்கு பாரம்பரிய காஞ்சீபுரம் பட்டுச் சேலை முகூர்த்தத்துக்கு பிரத்யேகமாக தயாராகி வருகிறது.

சவுந்தர்யா திருமணத்திற்காக மூன்று விதங்களில் தயாராகியுள்ள அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

சவுந்தர்யா ரஜினி திருமணத்தில் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் திருமணத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பட உலகினரும் பெருமளவில் வருகிறார்கள்.முக்கியமானவர்களுக்கு ரஜினி நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துவருகிறார்.


ரஜினி நேற்று முதல்வர் கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து திருமணம் அழைப்பிதழ் கொடுத்தார்.


இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.

No comments:

Post a Comment