நாடாளுமன்ற எம்.பி.க்கள் தங்கள் தொகுதியில் நலத் திட்ட மேம்பாட்டுப் பணிகளை உடனுக்குடன் செய்ய மத்திய அரசு நிதி கொடுக்கிறது. நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் வரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் ஆண்டுக்கு ரூ.2 கோடி கொடுக்கப்படுகிறது.
பதவி யில் இருக்கும் 5 ஆண்டு களில் கிடைக்கும் ரூ.10 கோடி மூலம் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதி களில் அத்தியாவசிய நலத் திட்டங்களை, யாரையும் எதிர்பார்க் காமல் எம்.பி.க் களே செய்து முடித்து விட முடியும். ஆனால் பெரும் பாலான எம்.பி.க்கள் இந்த ரூ.2 கோடியை கண்டு கொள்ளவே இல்லை. மொத்தம் உள்ள 545 எம்.பி.க்களில் 130 எம்.பி.க் கள் 2 கோடி ரூபாயில் ஒரு பைசா கூட செலவழிக்க வில்லை.
அடித்தட்டு, கிராம மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தரப்படும் இந்த பணத்தை முறையாக செலவிடுவதில் மத்திய உர அமைச்சர் மு.க.அழகிரி முதலிடம் பிடித்துள்ளார். அவர் கடந்த 14 மாதங்களில் மொத்தம் உள்ள ரூ.2 கோடியில் ரூ.1 கோடியே 24 லட்சம் செலவிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிக நலத்திட்ட உதவிகளை பெற்ற தொகுதியாக மதுரை உள்ளது.
மு.க.அழகிரிக்கு அடுத் தபடியாக சபா நாயகர் மீராகுமார் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாயை தன் தொகுதி மக்களுக்காக செலவிட்டுள்ளார். சமாஜ் வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் ரூ.1 கோடியே 9 லட்சமும் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ரூ.ஒரு கோடியும் செலவிட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரம் ரூ.2 கோடி பணத்தில் 97 லட்சம் ரூபாயை தன் தொகுதி மேம்பாட் டுக்காக கொடுத்துள்ளார். மற்ற எம்.பி.க்கள் சில லட்சம் பணத்தையே தங்கள் தொகுதி மக்களுக்காக செலவிட்டுள்ளனர்.
ரூ.2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பாதிக்குப் பாதி எம்.பி.க்கள் ஒரு பைசா கூட எடுத்து செலவழிக்க வில்லை. அவர்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. தலைவர் அத்வானி, ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவும் அடங்குவார்கள். மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஊரக மேம்பாட்டு அமைச்சர் ஜோதி, அய்க்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ், குமாரசாமி ஆகியோரும் ரூ.2 கோடியில் இருந்து ஒரு பைசா கூட எடுத்து தொகுதி மேம்பாட்டுக்காக கொடுக்க வில்லை. நலத்திட்ட பணிகளை செய்யக் கூட நேரம் இல்லாமல் இவர்கள் நாட்டுக்காக ஓய்வின்றி உழைக்கிறார்கள் போலிருக்கிறது.
No comments:
Post a Comment