நிதி அமைச்சரும் தி.மு.க. பொதுச் செயலாளருமான அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் கருணாநிதி தலைமையில் மாவட்ட வாரியாக கலந்தாய்வுக் கூட்டங்கள் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டங்களில் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி தி.மு.க. நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்.
கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் தங்கள் பகுதியில் இதுவரை நடைபெற்ற பொதுக் கூட்டங்கள் பற்றிய விவரங்களையும் மினிட் புத்தகத்தையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
தேதி வாரியாக கலந்து கொள்ளும் மாவட்டங்கள் விவரம்:
அடுத்த மாதம் 21ம் தேதி காலையில் ராமநாதபுரம், மாலையில் திருநெல்வேலி மாவட்டங்கள். தூத்துக்குடி (22 காலை, ஈரோடு (மாலை), நீலகிரி (23ம் தேதி காலை), கோவை (மாலை) , தர்மபுரி வடக்கு & தர்மபுரி தெற்கு (28ம் தேதி காலை), புதுக்கோட்டை (மாலை), கரூர் (29ம் தேதி காலை) திருச்சி (மாலை), சேலம், நாமக்கல் (30ம் தேதி மாலை), சிவகங்கை, விருதுநகர் (அக்.1ம் தேதி மாலை), மதுரை புறநகர், மதுரை மாநகர் (4ம் தேதி மாலை), திருப்பூர், கிருஷ்ணகிரி (6ம் தேதி மாலை), பெரம்பலூர், அரியலூர் (7ம் தேதி மாலை), நாகை, திருவாரூர் (8ம் தேதி மாலை), தஞ்சை, கடலூர் (9ம் தேதி மாலை), விழுப்புரம், திருவண்ணாமலை (11ம் தேதி மாலை), வேலூர், காஞ்சிபுரம்(12ம் தேதி மாலை), கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் (13ம் தேதி மாலை), திருவள்ளூர், தென் சென்னை, வட சென்னை(14ம் தேதி மாலை). இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment