கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 23, 2010

ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் மாநில உரிமைகளை பெறலாம் - சேலத்தில் முதல்வர் கருணாநிதி பேச்சு



சேலத்தில் 20.8.2010 அன்று மாலை நடை பெற்ற மாபெரும் அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டடம், அதி நவீன சிறப்பு மருத்துவ மனை மாவட்ட மாநகர காவல்துறை அலுவல கங்கள் உள்ளிட்டவை களை திறந்து வைத்து தமிழக முதல்வர் கலை ஞர் ஆற்றிய உரை வரு மாறு:

விழா நகரமாக விளங்கிக் கொண்டிருக் கின்ற சேலம் மாநகரத் தில், உங்களையெல்லாம் கடந்த சில மணி நேர மாக, தொடர்ந்து காண் பதிலும் உங்களோடு உரையாடுவதிலும் உங்க ளுடைய திட்டங்களுக் காக வாதாடி, போராடி, வந்த திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்பதை பற்றியெல் லாம் கலந்து பேசி வரு வதுமாக, நேரத்தை செலவழிப்பது எனக்கு மிக, மிக உற்சாகத்தை யும், இன்னும் சேலத் திற்கு நிறைய செய்ய வேண்டும் (கைதட்டல்) என்கின்ற ஆவலையும், உருவாக்கித் தந்திருக் கின்றது. சேலத்திற்கு செய்வது என்பது என்னை தமிழகத்திலே வளர்த்த நகரங்களிலே ஒன்று சேலம். நான் பிறந்த ஊர் திருக்குவளை என் றாலும், அந்த ஊருக்கு ஆற்ற வேண்டிய பணி களை ஆற்றியிருக்கிறேன், ஆற்றிக் கொண்டும் வரு கிறேன். வளர்ந்த ஊர் திருவாரூர் என்றாலும், அந்த ஊருக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, சாதனைகளை, முன் னேற்றங்களை உருவாக் கியிருக்கிறேன், உருவாக் கிக் கொண்டும் இருக்கிறேன்.

சேலம் கோட்டையில் வாழ்ந்தவன்

தமிழகத்திலே உள்ள பல பகுதிகளில் குறிப் பிட்டுச் சொல்லக் கூடிய ஒன்றாக இருக்கின்ற பகுதி, சேலம் பகுதி யாகும். இதற்கு அடுத்து கோவையைச் சொல்ல லாம். இறுதியாகத் தான் சென்னையைச் சொல்ல வேண்டும். இந்த சேலத்தில் இங்கே உரையாற்றிய போது சொன்னார்களே, அதைப் போல கோட்டைப் பகுதியிலே வாழ்ந்தவன் நான். அதனால் தான் போலும், கோட்டைப் பகுதியிலே முதன் முத லாக இங்கே குடியிருந்த தின் காரணமாக, அய்ந்து முறை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே அமரக் கூடிய வாய்ப்பு எனக் குக் கிடைத்துள்ளது.

இங்கே கோட்டைப் பகுதியில் நான் குடியி ருந்த போது, சேலம் மக்களின் துயரங்களை அனுபவ ரீதியாக அறி வேன். ஏன் நேரடியா கவே அறிவேன். இவை களையெல்லாம் தீர்ப்ப தற்கு நம்முடைய அரசு வர வேண்டுமே, நம்மு டைய ஆட்சி நிர்வாகம் வர வேண்டுமே என்று நண்பர்களோடு அமர்ந்து பேசி கவலைப்பட்ட காலம் எல்லாம் உண்டு. ஆனால் அந்த நிர்வாக மும் வந்து, இவைகளை யெல்லாம் தீர்த்து வைக் கின்ற அந்தப் பெரும் பணிகளை நிறைவேற்று கின்ற வாய்ப்பும் எனக் குக் கிட்டியிருப்பது தான் உள்ளபடியே நான் அடைந்த மகிழ்ச்சிகள் அனைத்துக்கும் உச்சக் கட்ட மகிழ்ச்சியாகும் என்று சொன்னால் அது மிகையாகாது.

சேலத்தைப் பொறுத் தவரையில் இங்கே நம் முடைய பேராசிரியர் குறிப்பிட்டார் சேலத் துக்கு அல்லது சேலம் மாவட்டத்துக்கு எதைப் பெற வேண்டுமென்று எண்ணினாலும், அதை நேரம் பார்த்துக் கேட்டு, வாதாடிப் போராடி பெறுவதிலே திறமை சாலியாக நம்முடைய வீரபாண்டி ஆறுமுகம் விளங்குகிறார் என்று பேராசிரியர் குறிப்பிட் டார். இன்றைக்கு தமிழ கத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்கள் பல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே தான் கட்டப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால், 1996ஆம் ஆண்டு முதல் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு மாவட்ட ஆட்சியரு டைய அலுவலகங்கள் எந்தெந்த மாவட்டங்களிலே அமைந்தது என்பதை எண்ணிப் பார்த்தால்

தூத்துக்குடியில் நான்கு கோடி ரூபாய் செலவிலும்

சென்னையில் ஒன்பது கோடி ரூபாய் செலவிலும்

விழுப்புரத்தில் 4 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவிலும்

திருவண்ணாமலையில் 5 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவிலும்

நாமக்கல்லில் 6 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவிலும்

கரூரில் 6 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவிலும் திருவாரூரில் 6 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவிலும்

நாகப்பட்டினத்தில் 6 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவிலும்

திருவள்ளூரில் 5 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவிலும்

தேனியில் 5 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு கட்ட டங்கள் கழக ஆட்சியிலே தான் கட்டப்பட்டன. இப்படி பத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்கள் கட்ட மொத்தம் 60 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவிட்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு அவைகளையெல்லாம் அமைத்து நிருவாகம் நடத்துகிறது. அந்த வட்டாரத்து மக்களுடைய வசதிகள் பெருகிக் கொண்டிருக் கின்றது. மக்கள் தேவைகளுக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு என்று எடுத்துக் கொண்டால் கூட இந்த நான்காண்டு காலத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் 6 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப் பட்டு 17.2.2008 அன்று திறக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் 10 கோடி ரூபாய்ச் செலவிலே கட்டப்பட்டு, 2622008 அன்று திறக்கப்பட்டிருக் கிறது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டடம் 12 கோடியே 1 இலட்ச ரூபாய்ச் செலவிலும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் 12 கோடியே 88 லட்ச ரூபாய் செலவிலும் தர்மபுரியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் 2 கோடியே 39 லட்ச ரூபாய் செலவிலும் கட்டப்படுகின்றன.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் பழமையானதாகவும் நெரிசல் மிக்கதாகவும் இருந்ததால் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தைக் கட்ட இந்த அரசு அனுமதி வழங்கியது. 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான புதிய கட்டடம் கட்ட 1492007 அன்று அடிக்கல் நாட் டப்பட்டது. ஆனால் 18.8.2010 அன்று அனுமதிக்கப் பட்ட 37 கோடியே 62 லட்ச ரூபாய் திருத்திய மதிப்பீட்டின்படி 2 லட்சத்து 54 ஆயிரத்து 570 சதுர அடி பரப்புடைய அய்ந்து தளங்கள் அமைத்துக் கட்டப்பட்டுள்ளது. வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் வகையில் இந்தக் கட்டடம் கட்டப்பட்ட காரணத்தால் இப்படி பிரமாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு அரசுத் துறை அலுவலகங்கள் 51 அலுவலகங்கள் இங்கே இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏறத்தாழ 600 பேர் அமரக் கூடிய அளவில் 4 ஆயிரத்து 775 சதுர அடி பரப்புடைய கூட்ட அரங்கம் இரண்டாம் தளத்தில் கட்டப்பட்டுள் ளது. மேலும் ஒவ்வொரு தளத்திலும் ஏறத்தாழ 1400 சதுர அடிபரப்பு உடைய சிறிய கூட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆறு லிப்ட் வசதிகளும் இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாராவது சொல்வார்களேயானால்...!

இப்படி மாவட்டந்தோறும், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்களைக் கட்டுவது மிக மிக முக்கியம் என்பதை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உணர்ந்த காரணத்தால்தான் ஏறத்தாழ 15 மாவட்டங்களில் அந்த அலுவலகக் கட்டடங்களை பிரமாண்டமான முறையிலே அமைத்திருக்கிறோம். அவற்றிலே ஒன்று தான் இன்று சேலத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் கட்டடம் என்பதையும் நான் சொல்லிக் கொள்கிறேன்.

ஆனால் சேலம் மாவட்ட ஆட்சியரின் அலுவலகக் கட்டடம் அமைவதற்கு இந்த அரசு தானாக முன் வந்து இது அமைக்கப்பட்டி ருக்கிறதா என்றால் இல்லை. அதைத் தான் இங்கே பேசிய நண்பர்கள் பல்வேறு பொறுப்புக்களிலே உள்ள வர்கள் எல்லாம் குறிப்பிட்டார்கள். இவ்வளவு பெரிய கட்டடம் இத்தனை வசதிகள் வாய்ப்புகள் நிறைந்து தமிழகத்திலே எங்குமில்லாத அளவில் இந்தக் கட்டடம் அமைவதற்கு முழு முதல் காரணமாக தொடர்ந்து முயற்சிகளை எடுத்துக் கொண்டது கட்டி முடித்தது கழக அரசு என்றா லுங்கூட அதிலே ஒவ்வொரு கல்லும் வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயர் சொல்லும் (பலத்த கைதட்டல்) என்கின்ற அளவிற்கு இந்தக் கட்டடம் இன்றைக்கு உயர்ந்து நிற்பதற்கு நான் என்னுடைய மகிழ்ச்சியை, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை அன்னியில் ஒரு மருத்துவ மனைக் கட்டடம் ஒன்று இங்கே எழுந்து நிற்கின்றது. புது டெல்லியிலே உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவ மனைக்கு இணையாக சேலம் மாநகரில் சூப்பர் ஸ்பெஷா லிட்டி, அதி நவீன மருத்துவ மனைக்கு 1492007 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு 139 கோடியே 39 இலட்ச ரூபாய்ச் செலவிலே இது கட்டி முடிக்கப் பட்டு இன்றைக்கு உங்களுடைய அன்பான வாழ்த்துகளோடும், பாராட்டுகளோடும் திறக்கப் பட்டிருக்கிறது என்றால் இந்த 139 கோடி ரூபாயில் 100 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதியாகக் கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை நான் நன்றி உணர்வோடு இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை நான் இந்த மேடையிலே சொல்லா விட்டால், ஏதோ கருணாநிதி தமிழக அரசின் செலவிலே தான் இதைக் கட்டியதாகச் சொல்லிக் கொள்கிறார், இல்லை என்று யாராவது நாளைக்கு மறுப்புச் சொல்லி, மத்திய அரசின் நிதியும் இதிலே இருக்கிறது என்று யாராவது சொல்வார்களே யானால், நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி இரண்டுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. இதே கரன்சி தான் அங்கும் அதே நாணயம் தான் இங்கேயும். நாம் செலுத்துகின்ற வரி மத்திய அரசுக்குச் செல்கிறது. அந்த வரியை அவர்கள் பங்கிடும்போது மாநில அரசுக்கு அதிலே ஒரு பங்கு வருகிறது. எனவே இதிலே மத்திய அரசு, மாநில அரசு என்றெல்லாம் பிரிக்கத் தேவையில்லை. இருந்தாலும் சில அதிகாரங்களை சில அனுமதிகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசியல் சட்டப்படி அரசியல் சட்டம் வகுத்திருக்கின்ற நெறிமுறை களின்படி இன்றளவில் அதிலே உள்ள நிலை களின்படி மத்திய அரசின் கையிலே தான் இருக் கின்ற காரணத்தால் மத்திய அரசினுடைய அனுமதியையும் பெற்று அவர்களிடம் நிதியையும் கேட்டுப் பெற்று 139 கோடி ரூபாய் செலவிலே 100 கோடி ரூபாய் மத்திய அரசு பொறுப்பேற்று இந்த அழகான சூப்பர் ஸ்பெஷாலிட்டி, அதி நவீன சிறப்பு மருத்துவ மனையை நாம் உருவாக்கியிருக்கிறோம். அதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இந்த மருத்துவ மனையிலே பணியாற்றுகிறவர்கள் எப்படியெல்லாம் பணியாற்ற வேண்டும் என்பதை நம்முடைய பேராசிரியர் அவர்களும், தம்பி வீர பாண்டி ஆறுமுகம் அவர்களும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தம்பி பன்னீர்செல்வம் அவர்களும் இங்கே எடுத்துச் சொன்னார்கள். எவ்வளவு பெரிய கட்டடமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய உயர்ந்த கோபுரங்களை புதிதாக அமைத்தாலும், அந்தக் கட்டடத்திலே இருந்து பணி யாற்றுகின்றவர்கள்; அவர்கள் மக்களுக்கு ஆற்றுகின்ற தொண்டு அந்தத் தொண்டு துயத் தொண்டாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர்கள் இருந்தால்தான் எவ்வளவு செலவழித்து உருவாக்குகின்ற மணி மண்டபமாக மருத்துவ மனைகள் இருந்தாலுங்கூட, மனிதர்கள் நலமாக வாழ முடியாத மனிதர்கள் தங்கள் உடல் நலத்தைப் பேண முடியாத ஒரு நிலை இருக்குமேயானால், செலவழிக்கப்பட்ட பணம் பெரிதல்ல கட்டப்பட்ட மாளிகை பெரிதல்ல எனவே தான் செவிலியர் ஆனாலும், மருத்துவர்கள் ஆனாலும் அவர்கள் இந்த மருத்துவமனை ஏன் கட்டப்பட்டது, நாம் வாழவா அல்லது மற்றவர் களை வாழ வைக்கவா என்ற இந்தக் கேள்விக்கு நியாயமாகப் பதிலளிப்பார்களேயானால், மருத்துவ மனைக்காக செலவழிக்கப்பட்ட ஒவ்வொரு காசுக்கும் பயன் உண்டு என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என்ன தான் மருத்துவ மனைகள், மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டிலே நாம் உருவாக் கினாலுங்கூட, ஒரு வார காலமாக அல்லது சில நாட்களாக வருகின்ற செய்திகள் நம்மை மிகவும் பாதிக்கத் தக்கவைகளாக வருந்தத் தக்கவைகளாக கவலைக் கொள்ளச் செய்யத் தக்கதாக உள்ளது. நான் பத்திரிகைகளிலே ஒரு செய்தி பார்த்தேன். இனிமேல் மருத்துவக் கல்லூரிகள் எல்லாம் மத்திய அரசின் பொறுப்பிலே மாநில அரசுகளின் பொறுப்புக் களிலே மாத்திரமல்லாமல் வரும் என்றும் அப்படி வருகின்ற காரணத்தால், இனி நுழைவுத் தேர்வும் உண்டு என்றதொரு செய்தி வந்தது.

நுழைவுத் தேர்வு

நுழைவு தேர்வை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நாம் சட்டமியற்றி ரத்து செய்து விட்டோம். நுழைவுத் தேர்வு வந்தால் கிராமப்புற மாணவர்கள் முன்னேற முடியாது. அவர்கள் உயர்ந்த பதவிகளுக்கு வர இயலாது. இடையிலே தடுக்கப்பட்டு விடுவார்கள் என்பதற்காகத் தான் மக்கள் நல்வாழ்வுத் துறையிலே பயிலுகின்ற இருக்கின்ற மாணவர்களுக்கு வழி அடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக நுழைவுத் தேர்வு என்கின்ற ஒரு வாசல் வேண்டாம், அவர்கள் நேரடியாகவே நுழைவுத் தேர்வு இல்லாமலே வளரட்டும் என்று ஒரு திட்டத்தை அறிவித்து, அதைச் சட்டமாகவே ஆக்கினோம். அதிலே தமிழகத்திலே இருக்கின்ற எந்தக் கட்சிக்கும் வேறுபாடான கருத்து கிடையாது. நான் பட்டவர்த்தனமாகச் சொல்கிறேன், வெளிப் படையாகச் சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி இதிலே நம்மிடம் வேறுபடாத கட்சி. பா.ம.க. நாம் சொல்லுகின்ற இதே கருத்தை உடைய கட்சி. இன்னும் சொல்லப் போனால் எதிர்க்கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.க.கூட நுழைவுத் தேர்வு கூடாது, தேவையில்லை என்ற நம்முடைய வாதத்தை ஏற்றுக் கொண்ட இயக்கம் தான், நான் நேற்றைக்குக் கூட பத்திரிகைகளிலே பார்த்தேன். அ.தி.மு.க. தலைவி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இனிமேல் மத்தியிலே நுழைவுத் தேர்வை கொண்டு வரப் போகிறார்கள். நம்முடைய முதல் அமைச்சர் என்ன செய்யப் போகிறார்? இவருக்கு தெரிந்தது எல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது தான் என்று எதிர்க் கட்சித் தலைவி ஒரு அறிக்கை வெளியிட் டிருக்கிறார். எனக்கு கடிதம் தான் எழுதத் தெரியும், வேறு அதற்காக வாதாடத் தெரியாது, அவருக்குத் தைரியம் இல்லை என்று அறிக்கை விட்டு, அதைப் பின்பற்றி சில பத்திரிகைகள் கூட தமிழ்நாட்டில் எழுதியிருப்பதைப் பார்த்தேன். கடித இலக்கியம், கடிதக் காவியம் என்றெல்லாம் நான் எழுதுகின்ற கடிதங்களை அதே நேரத்தில் டெல்லிக்குத் தெரிவிக்கின்ற தகவல்களைக் கூட கேலி செய்பவர்கள் இருக்கின்றார்கள்.

ஒரு தகவலைச் சொல்லுகிறேன்

என்ன கடிதம்? இந்தச் செய்தியைப் பார்த்தவுடன், நாங்கள் கலந்து பேசினோம், செயலாளர்களோடு பேசினோம், அமைச்சர்களோடு பேசினோம், உடனடியாக பிரதமருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா அவர்களுக்கு இதைச் சொல்லுகின்ற விளக்குகின்ற கடிதங்களை எழுதி னோம். என்ன எழுதினேன் என்றால், கிராமப் புறத்திலே இருக்கின்ற சாதாரண, சாமான்ய மக்களுடைய வாழ்வை பாழாக்குகின்ற வகையில் இந்த நுழைவுத் தேர்வு அமைந்து விடும், ஆகவே நுழைவுத் தேர்வை நடத்தக் கூடாது என்று தமிழ்நாட்டு மக்களுடைய மனக் கொதிப்பை நான் வெளியிட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அது என்ன? சாதாரணக் கடிதம் என்று அவர்கள் விட்டு விட்டார்களா? இவர் என்ன கடிதம் எழுதுவது, நாம் என்ன அதைக் கவனிப்பது என்று சொல்லி விட்டார்களா, இருந்து விட்டார்களா என்றால் இல்லை. கடிதம் எழுதினால் பலன் இல்லை என்று சொன்னவர்களுக்கு நான் ஒரு தகவலைச் சொல்லுகிறேன்.

நான் கடிதம் எழுதிய காரணத்தால் தான் இன்றைய மாலைப் பத்திரிகைகளிலே (மாலை ஏட்டினை எடுத்து கூட்டத்தில் காட்டியவாறு) மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நிறுத்தி வைப்பு மத்திய அரசு அறிவிப்பு (பலத்த கைதட்டல்) என்று செய்தி வந்திருக்கிறது. மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது என்பது தமிழகத்திலே உள்ள தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளின் எண்ணம். ஆனால் அதைச் சொல்லுகின்ற ஒரு வாய்ப்பாக இருக்கின்ற ஆளுங் கட்சியான தி.மு.க. அதை எடுத்துச் சொல்லி, அதற்கு மதிப்பளித்து, பிரதமரும், டில்லியில் உள்ள அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி அம்மையாரும் கலந்தாலோசித்து மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலாளர் செய்தியாளர்களிடம் இன்று கூறும் போது, நுழைவுத் தேர்வு நடத்துவதை ஒத்தி போட்டிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். நான் கடிதம் எழுதியதோடு நின்று விடவில்லை. உச்சநீதிமன்றத்திலே கூட நடைபெற்று வந்த வழக்கில் நேற்றையதினம் நம்மை இணைத்துக் கொண்டிருக் கிறோம். இது எங்களுடைய மாணவர்களுக்கு ஆகாது, தீங்கு, இதை நீங்கள் நிறுத்தி வைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்திலும் ஒரு மனுவினை தாக்கல் செய்து, அந்த வழக்கிலும் நாம் நம்மை ஒரு வாதியாக இணைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படிப்பட்ட நிலையில் நான் இந்த அறிவிப்பின் மூலம் மகிழ்ச்சி அடைந்தாலுங்கூட இதற்குப் பிறகும் தொடர்ந்து தமிழகத்திலே இருக்கின்ற மாநில உரிமைகளை மத்திய அரசு எடுத்துக் கொள்ளுகின்ற முறையிலே நடந்து கொள்ளுமேயானால், எங்களுடைய ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

நேற்றைக்குக் கூட டெல்லியில் நிதியமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நம்முடைய அரசின் சார்பாக தம்பி துரைமுருகன் சென்று கலந்து கொண்டார். அவர் மூலமாக நாம் தெரிவித்திருக்கின்ற கருத்து மாநில அதிகாரங்களை யெல்லாம் பறித்து விடக் கூடாது ஏற்கனவே பல அதிகாரங்கள் மாநிலங்களிடமிருந்த பறிக்கப்பட்டு நாம் கோரி வருகின்ற மாநில சுயாட்சியின் முழு உருவம் மூளியாகிக் கொண்டிருக்கின்றது. ஆகவே நீங்கள் கொண்டு வருகின்ற எந்தத் திட்டமானாலும், அது நுழைவுத் தேர்வானாலும் சரக்கு மற்றும் சேவை வரி முறைகளில் கொண்டு வருகின்ற திருத்தங்கள் ஆனாலும் அவற்றில் எல்லாம் மாநிலங்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்து நிதானமாக முடிக்க வேண்டுமென்றுதான் தமிழகத்தின் சார்பாக நேற்றைய கூட்டத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆகவே நான் இங்கிருந்து எழுப்புகின்ற குரல், இது போன்ற பொதுவான விஷயங்களிலே கூட, ஒருமித்தக் குரலாக இருக்க வேண்டும். எல்லோரும் ஓர் குரலில் ஒலிக்க வேண்டும். அப்படி ஒலித்தால் மத்திய அரசு நம்முடைய நியாயங்களை உணர்ந்து நம்முடைய உரிமைகளை வழங்க என்றைக்கும் தயாராக இருக்கும். மத்திய அரசை குறை கூற வேண்டுமென்பதற்காக சிறு சிறு பிரச்சினைகளை யெல்லாம் பெரிதுபடுத்தி மத்திய அரசுக்கும், இந்த மாநில அரசுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படாதா, கலகம் தோன்றாதா, நாம் இடையிலே புகுந்து ஏதாவது சூழ்ச்சி புரிய முடியாதா என்று எண்ணுகின்ற கட்சிகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் பொதுவாக ஒரு கருத்தை எல்லோரும் சேர்ந்து ஒரு இலட்சியத்தை நிறைவேற்ற பொதுவான ஒரு குறிக்கோளாக எடுத்துக் கொண்டு ஒற்றுமையோடு பாடுபட வேண்டும். அது கல்வித் துறையானாலும், மருத்துவத் துறை ஆனாலும், சட்டத் துறை ஆனாலும் எந்தத் துறை ஆனாலும் அதிலே நாம் நம்முடைய ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இந்த இனிய விழாவிலே உங்களோடு பங்கேற்று சில கருத்துக்களைச் சொல் கின்ற வாய்ப்பினைப் பெற்றமைக்காக மகிழ்ந்து விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment