கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 23, 2010

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 76வது பிறந்தநாள் : பிரதமர், சோனியா, தலைவர்கள் மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 76வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள திமுக நாடாளுமன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மக்களவை தலைவர் மீராகுமார், துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான முகமது அன்சாரி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மாநிலங்களவை துணைத் தலைவர் கே.ரஹ்மான்கான், நிதியமைச்சர் பிரணாப் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, ஜி.கே.வாசன், வயலார் ரவி, மல்லிகார்ஜுன கார்கே, சி.பி.ஜோசி, வி.நாரயாணசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மக்களவை செயலர் பி.டி.டி.ஆச்சாரி, மாநிலங்களவை செயலர் அக்கினி கோத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, சிவசேனா கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் மனோகர் ஜோஷி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், ராஜீவ்சுக்லா எம்.பி., பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு, எம்.பி.க்கள் கோபால் யாதவ், பகத்சிங் கோசியாசிங், பிரஜேஷ் பதக், பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் சதிஷ்சந்திரா மிஸ்ரா, திரிணாமுல் காங்கிரஸ் கொறடா சுதிப் பந்தோ பாத்தியா, அபானிராய் எம்பி., மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி., டி.கே.ரங்கராஜன், திமுக மத்திய அமைச் சர்கள் ஆ.ராசா, பழனிமாணிக்கம், காந்திசெல்வன், நெப்போலியன், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் விஜயன், சுகவனம், வேணுகோபால், ஆதிசங்கர், இளங்கோவன், தாமரைசெல்வன், ஜெயதுரை, ரித்தீஷ், ஹெலன் டேவிட்சன், கனிமொழி, திருச்சி சிவா, ஜின்னா, ராமலிங்கம், தங்கவேல், செல்வகணபதி, காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் சித்தன், கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, ராம்பாபு, விஸ்வநாதன், மாணிக் தாகூர், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment