நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் கூறி விளக்கவுரையாற்றினார். அவரது உரை வருமாறு:
காலையிலிருந்து இதுவரையிலே பல்வேறு மாவட்டங்களின் காவல் துறை அதிகாரிகளும் மாநில அளவில் உள்ள காவல் துறை அதிகாரிகளும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையில் எடுத்துள்ள செயல்களையும், எடுக்க வேண்டிய செயல்களையும் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறீர்கள். குற்றம் சாட்டப்படுகின்ற ஒரு துறை
காவல் துறை ஒன்று தான் எந்தவொரு அரசானாலும் அந்த அரசில் முதன் முதலாக எதிர்க் கட்சிகளால் குற்றஞ்சாட்டப்படுகின்ற ஒரு துறை யாகும். அதிலே நாம் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், குற்றங்கள் எதுவும் நம் மீது சுமத்தப்படாமல் இருப்பதற்கு அவைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்; மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு நாட்டினுடைய குறிப்பாக, மாநிலத்தினுடைய அமைதி, நல்வாழ்வு, மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படு கின்ற நிலை இவைகளெல்லாம் அரசின் பலதரப்பட்ட அதிகாரிகளின் மூலம் நடத்தப்பட்டாலும்கூட, எல்லா வற்றையும் மிகுந்த பொறுப்போடு கவனிக்க வேண்டிய பாதுகாக்க வேண்டிய அந்தப் பொறுப்பு காவல் துறையிடம் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. நான் ஆட்சி பொறுப்பேற்ற காலத்திலிருந்து
எனவேதான், இன்றைக்கல்ல; நான் முதன்முதலாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அந்தக் காலத்திலேயிருந்து, இதுவரையிலே காவலர்களுடைய கோரிக்கைகள், அவர்களுடைய தேவை கள், இவைகளை நிறைவேற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டவனாகவும், அதை முறையாகச் செயல்படுத்துவதில் ஆர்வம் கொண்டவனாகவும் இருக் கிறேன். இன்றைக்கு இந்தியாவிலேயே, மூன்று போலீஸ் கமிஷன்களை அமைத்து, காவல் துறையிலே உள்ளவர் களுடைய கவலைகள் நீங்கவும், அவர்கள் மேலும் பொறுப்புகளை ஏற்கக் கூடிய அளவிற்கு ஆறுதலான பல காரியங்கள் நடைபெறவும் வழிவகுத் தேன் என்பதை நீங்கள் மறந்திருக்க முடியாது. இப்போதும் நான் அவற்றைச் சுட்டிக் காட்டுவதற்குக் காரணம், அடுத்தடுத்து ஒரு மாநிலத்திலே ஏற் படக்கூடிய, அமைதிக்குக் குந்தகமான அல்லது தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பக்கூடிய எதுவானாலும், அவற் றைக் களைவதும், கட்டுப்படுத்துவதும் மாநிலத்திலே உள்ள அரசு செய்கின்ற நற்காரியங்கள் மக்கள் மன்றத்தில் செல்லக்கூடிய வகையில் பயன்பெறக் கூடியவர்களாவும் காவல் துறை நண்பர்கள் இருக்க வேண்டும் என்பது மிகமிக முக்கியமான பணியாகும்.
இன்றைக்குக் காலையிலேயிருந்து ஒவ்வொருவரும் ஆற்றிய உரையை எடுத்துக் காட்டிய நிலைமைகள் எப்படிக் குற்றங்களைக் களைவதற்கு முயற்சிகள் எடுத்தோம் என்றும், முனைப்பான நடவடிக்கைகளை எடுத் தோம் என்பவைகளைப் பற்றியெல் லாம் நீங்கள் கூறியிருக்கிறீர்கள். என்றாலும்கூட, இவைகளையும்மீறி, நாங்கள் கவலைப்படுகின்ற அளவிற்கு சில நிகழ்வுகள் மாநிலத்திலே அங் கொன்றும் இங்கொன்றுமாக நடை பெற்றுக் கொண்டிருப்பதை மறந்து விடக் கூடாது. காலையில் எழுந்து பத்திரிகையைப் பார்க்கும் பொழுது
காலையிலே எழுந்து பத்திரிகை களைப் பார்க்கும்போது, இன்றைக்கு என்ன செய்தி யாரைப் பற்றி வருகி றதோ எப்படி வருகிறதோ? நம் முடைய அரசைக் குறை கூறுகின்ற அளவிற்குச் செய்தியா? என்பதையெல் லாம் பரபரப்போடு பார்க்க வேண்டி யிருக்கிறது. காரணம், அப்படி உடனுக் குடன் பார்த்து, அதைத் தீர்த்து வைப் பதுதான் ஒரு அரசின் கடமை. அந்தக் கடமையை அரசு நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டிய ஆர்வம் உங்களுக்கும் காவல் துறை யிலே உள்ள மற்ற அதிகாரிகளுடைய பொறுப்புணர்விலும், கடமையுணர் விலும் சேர்ந்து இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
அவற்றையெல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்குக் காரணம், இது மிக மிக முக்கியமான நேரம். நாம் கடந்த ஆண்டுகளில் பல முறை சந்தித்திருக் கிறோம் என்றாலும்கூட, அந்த மாநாடு களிலே நம்முடைய கருத்துகளை எடுத்துக் கூறியிருக்கிறோம் என்றாலும் கூட, இது எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு மாநாடு. ஆம் நாம் மிக விரைவில் தமிழ்நாட்டிலே தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க தேர்தல் நேரம் பார்த்து அரசுக்கு ஏதாவது களங்கம் ஏற்படுத்த வேண்டும், பழி சுமத்த வேண்டும், தேவையற்ற பிரச்சினைகளை தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி, ஊருக்கு ஊர், மாவட்டத் திற்கு மாவட்டம் ஏற்படுத்த வேண்டு மென்று கருதுகின்ற சில எதிர்கட்சி யினர் இருப்பார்கள்.
நான் எல்லா எதிர்க்கட்சியினரையும் சொல்ல மாட்டேன். இதற்கென்றே, தங்களுக்கு தொண்டர் கள் இருக்கிறார்களோ இல்லையோ, கிளைகள் இருக்கின்ற னவோ இல்லையோ, அமைப்புகள் இருக்கின்றனவோ இல்லையோ ஆனால் இது போன்ற காரியங்களில் விஷமத் தான பிரச்சாரங்களில் ஈடுபட்டு, பிரச்சினைகளை உருவாக்கி சாதிக் கலவரம், மதக் கலவரம் போன்ற இத்தகைய செயல்களால் அரசுக்கு எப்படி கெட்ட பெயரை உருவாக்க லாம், அரசை நிர்வகிக்கின்ற அதிகாரி களுக்கு எப்படி கெட்ட பெயரை உருவாக்கலாம் என்று எண்ணுகின்ற நிலைமை இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
அப்படிப்பட்ட நிலைமை ஏற்படா மல் அவைகளை எல்லாம் முன் கூட் டியே தவிர்க்க வேண்டுமென்று சொல்ல மாட்டேன், ஏனென்றால் ஒரு சுதந்திர நாட்டில் பேச, எழுத எல்லோருக்கும் உரிமை உண்டு. எந்த வகையில் எழுதலாம் என்பதற்கு ஒரு அளவும் உண்டு. இரண்டையும் சீர்துக்கிப் பார்த்து நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசைக் குறை கூறுகிறார் கள் என்றால் அரசை பழி சுமத்து கிறார்கள் என்றால் அரசுக்கு எதிர்ப் பான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களை உடனடியாக அடக்கி ஒடுக்க வேண்டு மென்று எண்ணுகின்ற ஆட்சி அல்ல இந்த ஆட்சி என்பதை நீங்களே நன்கறிவீர்கள். உணர்ந்ததை உளமா?
எந்த அளவிற்கு விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமோ அந்த அளவுக்கு விட்டுக் கொடுத்து அந்த அளவுக்கு ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற ஓர் ஆட்சி தான் இந்த ஆட்சி. இந்த உண்மையை நீங்கள் மனதார உணர்வீர் கள். உணர்ந்ததை வெளிப்படையாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல உங்களால் முடியாவிட்டாலுங்கூட, உணர்ந்ததை உளமார உணர்ந்ததை, நீங்கள் செயல் படுத்திக் காட்ட வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள், என்னுடைய கோரிக்கை. உங்களுடைய கோரிக்கைகளை தொடர்ந்து நிறை வேற்றி வருகின்ற இந்த அரசுக்கு பிரதி உபகாரமாக நீங்கள் எங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்று நான் கேட்க மாட் டேன்.
என்னுடைய கோரிக்கை எல்லாம், கட்சி சார்பற்ற முறையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நீங்களும் நானும் சேர்ந்து தமிழ்நாட்டிலே பொது அமைதியை நிலவச் செய்வோம், ஜனநாயகம் தமிழ கத்திலே காப்பாற்றப்பட பாடுபடு வோம் என்பது தான் என்னுடைய கோரிக்கை. அதைத் தான் நான் உங்கள் முன்னால் வைக்கிறேன். அந்த அளவிற்கு நாம் பாடுபட வேண்டும். தமிழ்நாட்டிலே இந்த அரசு பொறுப்பேற்று என்னைப் பொறுத்த வரையில் அய்ந்து முறை முதலமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளை சிந்தாமல், சிதறாமல் நீங்கள் எண்ணிப் பார்த்து இந்த ஆட்சி தொடர வேண்டுமா, வேண் டாமா என்ற முடிவுக்கு வரவேண்டிய பொறுப்பும் கடமையும் சுதந்திரமாக உங்களுக்கு இருக்கிறது.
அதிலே நான் தலையிடவும் மாட்டேன். மறுப்புக் கருத்து சொல்லவும் மாட்டேன். மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திட ஏற்ற நடவடிக்கைகளை யெல்லாம் நீங்கள் உங்களுடைய அமைதியான பணியினால் நீங்கள் காட்டுகின்ற பொறுப்புணர்வால் இந்தப் பணியிலே நீங்கள் காட்டுகின்ற பண்பாட்டால் மக்கள் பயனடைய ஆற்றுகின்ற தொண்டால் அவைகளை யெல்லாம் சந்திக்க வேண்டும். அறிவிப்புகள்
அப்படிச் சந்தித்தால் தான் ஒரு நல்ல ஆட்சியை அது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்று நான் சொல்ல மாட் டேன் ஒரு நல்ல ஆட்சி தமிழகத்திலே நடைபெற நீங்களும் நாங்களும் சேர்ந்து பணியாற்று கிறோம், உழைக்கிறோம் என்று பொருள்.
அந்தப் பொருளை உணர்ந்து நீங்கள் செயலாற்ற வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். இன்றைய தினம் இந்தக் காவல் துறை சார்பாக சில கோரிக்கைகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. அவைகளைப் பற்றி சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். காவல் துறை அலுவலர் களின் கோரிக்கையை ஏற்று, 3 ஆயிரம் காவலர்கள் ஒரே நேரத்தில் பயிற்சி பெற வசதி கொண்ட காவலர் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
காவலர்களுக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்படும் குடியிருப்புகளின் பரப் பளவு 550 சதுர அடியாக உள்ளது. இந்தக் குடியிருப்புகளின் பரப்பளவைக் கூடுதலாக்க வேண்டுமென்ற காவலர் களின் நெடுநாளைய கோரிக்கையை ஏற்று, கூடுதலாக 100 சதுர அடி சேர்த்து, (கூடுதல் படுக்கையறை) இனி 650 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப் புகள் கட்டப்படும். காவல் துறையினருக்கு இராணுவத் தில் பணிபுரிவோர்க்கு உள்ளது போல, குறைந்த விலையில் பொருட்களைப் பெறுவதற்கு வசதியாக, மதிப்புக் கூட்டு வரி விலக்கு பெற்ற கேன்டீன் வசதி செய்து தரப்படும். விபத்துகளைத் தவிர்த்திட சாலைகளில் செல்லும் வாகனங்கள் குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் அனைத்திலும் இரவில் ஒளியைப் பிரதிபலிக்கும் சாதனம் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப் படும்.
விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் வாகனம் ஓட்டி தவறு இழைக் கும் ஒட்டுநர்களுக்கு, சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கு மய்யம் ஒன்று அமைக்கப்படும்.
இந்த அறிவிப்புகளோடு நீங்களும் இந்த அரசின் சார்பில் நானும் சேர்ந்து தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் ஒரு நல்ல ஆட்சி அமைவதில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கு இடை யூறாக நாமே இருந்து விடக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டி என் உரையை நிறைவு செய்கிறேன்.
No comments:
Post a Comment